கினியவள் அன்பிற்க்கு



கசக்கி வீசிய 
காகிதத்தில்தான்
கருணையின்
மரு உரு நீ
என்றெழுதியிருந்தேன்,

பட்டும் படாமல்
தொட்டு தூக்கும்
குழந்தைக்கு
தெரியாது நீ
பாச பகட்டி என்று,

மழை நாளில்
குடை மறக்க
சேர்ந்து செல்ல
எண்ணும்போது
மடக்கியது குடையல்ல
மனமென்று நீ
அறிவாயோ?

Comments

Popular Posts