செத்தேன் போ
மின்னும் பொன்னும் எண்ணும் வண்ணம்
அடங்கிய தேகம் ஒடுங்கிய பாகம்
பட்டு பூ கண்ணம் தொட்டுப்பார்க்க எண்ணும்
இட்ட இதழ் வண்ணம் தொட்ட கை மின்னும்,
சுட்ட கை பின்னும் எட்ட போனாலும் தின்னும்,
ஆடை அழகூட்ட அங்கம் திகைப்பூட்ட
பார்த்த வாய் பிளந்து பூட்டாதிருக்கும்,
படிந்த சிகையலங்காரம் கொல்லும்
பார்க்க சிலையும் ஆகங்காரம் கொள்ளும்,
மகுடத்திற்க்கழகு மரகதம், மாணிக்கம்,முத்தென்றால்
உனக்கு மட்டும் சிரிப்பே போதும் செத்தேன் போ,,
Comments
Post a Comment