தவம்



ஓரிரு 
காசுகள் முடிந்த
முந்தானைகள்,
உன் போதைக்காய்
கிழிக்கப்பட்டது
ஏராளம்,

கல்,மண்
கரிக்கவில்லையா?
உன் போதையில்,
சுமந்த வலி என்
தலை விட்டு உன்
தலைக்கு
காலையில் மட்டும்,

உணவும்,உணர்வும்
கண்டு காலமாச்சி
உறவும்,உடலும்
கெட்ட கானலாச்சி,
ஏனோ இருக்கிறேன்

நீ தூக்கி சென்று
அள்ளிப்போடும்
ஒரு கை பிடி மண்ணில்
ஈரம் இருக்கும்
என்ற நம்பிக்கையில்,

Comments

Popular Posts