ஒரு கன கனவு

நேற்றைய கனவில் துரத்தி
வந்தவளா நீ
வளையல் இருந்ததே
இதென்ன
கீரல் அடையாளமாய்?

முகம் முக்காடு இட்டுருந்தாயே
இதென்ன
கோலம் தலைவிரி?

மருதாணி சிவப்பிருந்ததே?
இதென்ன
இரத்தம் சொட்ட சொட்ட

கால் கொலுசில் யார் விலங்கிட்டது
புன்னகையாய் துரத்தி வந்தாயே
இதென்ன்
கூக்குரலான ஓலம்
விடியும் வரை விளையாட்டு
நீடித்ததே?

இதென்ன
நீ மட்டும் குழிக்குள்
மரணித்து பிணமாய்


ஏதும் மறந்து சென்றதை 
எடுக்க வந்தாயோ ?
இல்லை
எடுக்க வந்ததை
மறந்து போக
வந்தாயோ,

அத்துவன காட்டில் விட்டு
போனதாய்
நினைத்தாயா?

நீ இருக்கும் வரை
இருந்த ஈரம் 
உன் குழிக்குள்ளேயே
புதைத்து 
விட்டேன்
காய விடமலும்
காயாமலும்
காத்திருப்பேன்

கனவிலும் முகம் மூடாதே
முடியாதே என்னால்

Comments

Popular Posts