சில நேரம் ஏற்படும் இதுபோல?

கனவில் கடல் வற்றி
மணல் திட்டுகளில்
ஞாபகம் புதைந்துபோயிற்று,

பிம்பத்தை பிரதிபலிக்க
எப்போதும்
மறுக்கும் நிலைக்கண்ணாடி,

தவம் இல்லாத வரம்
வேள்வித்தீயில்
கருகிப்போனது,

தாம்புக்கயிற்றில் சுற்றி
வீசிய நினைவுகள்
ஆழியில்
நங்கூரத்தின் அடியில்
நிலை கொள்ளாது
தழும்பும் மனக்கப்பல்


யாரிடம்சொன்னாலும்
திரும்பி வரும் செய்திகள்
வார்த்தைகள் மரணித்து
மெளன அஞ்சலிக்கு
நிற்பதாய்,

மழையில் வெளுத்துப்போனதாய்
காட்டிக்கொள்ளும்
சில அன்புத்துளிகள்
அலை எழுப்பியபடி
காலில் புதைந்துதான்
போனது,

Comments

Popular Posts