அங்கலாய்ப்பு
உயிர்ப்பு இல்லாத ஊசலாட்டமாய்
உன் தரிசனம் மறைத்து,மறைந்து
விடக்கூடிய விரல் பிடிப்பில்கோர்த்தும்,
கோர்க்காமலும்,
பயமாகும் போது தேற்றிக்கொள்ளும்
பாடலாகவும், ஓடலாகவும்,
யாருமே பார்க்காதிருக்க பிடரியில் கண்ணும்,\
காதும் சில வேளை கண்ணாக
சூல் சுமக்கும் தாயாய் வலம் இடம்
பிரளாமல் நீண்டி நிமிர்ந்த படுப்பாய்,
தொற்றிக்கொள்ளும் நோய் பயத்தில்
முதலுதவி என் செய்வதென அவசரத்தில்
அணைப்பில் அருகில் இருக்க தூரம்
தாவும் தவிப்பாய் கை பரபரப்பில்
சூட்டிக்கொள்ளும் பூவில் மணம் இருக்க
தலை முகர்ந்த மூக்கில் சுவாசம் மறுக்க,
நிலைப்படியில் இடித்த தலை தடவ
கையில் சம்மட்டியாய் விழும்
தழுவல் கூட,
Comments
Post a Comment