நேற்று பெய்துபோன மழை


எழுந்து கொல்லைக்கு சென்றால் 
,தென்னம்பாலையை காற்று 
தள்ளிவிட்டு 
கொய்யாவின் முதுகை 
பதம்பார்த்திருந்தது ,

வலியில் துடித்து 
கிளைகலை
அசைக்காமல்
துயரம்மிகுந்து
யார் வருவர்
என எதிர்பார்த்து?

சுற்றி இருந்த
நார்த்தை, மாதுளை
பூவரசு,மா,எலுமிச்சைகள்
செய்வதரியாது,

இடம் கொஞ்சம் பெயர்ந்த
வேதனை வேரில்
மண் அணைப்பை
விட்ட சோகம் வேறு
விசும்பலாய் தெரியும்
மண் பெயர்ப்பு,

ஓடோடி சென்று
ஆறுதலாய்
கிளைத்தடவ
கிளர்ச்சியில்
சலசலக்கும்
இலைகள்,

சுற்றியிருக்கு வேரின
சோதரர்களின் கை கொட்டல்
கிவ்வென காற்றிசைத்து

தலை கனத்த தென்னை,
அன்னார்ந்து பார்க்க
இல்லை நான் காரணம்,
மறுப்பாய்
வீசியகை,

இரு உன்னில் இழுத்து
கட்டுகிறேன் இனி
நீயும் துணை கொய்யாவிற்கென
கட்டிபோட்டு
கட்டியனைக்க தென்னை
சிரிக்க மனம் மகிழ
ரசிக்க கொல்லையில்
மனம் கொள்ளை
போனது,,,,.

No comments:

Post a Comment