பிரியம் அரிய


ஒரு ஒப்பந்தம் 
செய்துகொண்டோம்,
இனி பேசவோ!!!
பார்க்கவோ!!!! 
செய்யாதிருப்பது

கால அவகாசம் மாதத்தில்
தொடங்கி 
நாட்களை விவாதித்து
நேரங்களில் யோசித்து
நிமிடத்தில்
முடிந்துப்போனது,

கால அவகாச இடைவெளியில்
யாரேனும் தவறுதலாய்
முந்துவோமாயின்
தண்டனை பெற்றுகொள்வதென,

தண்டனையின் சாரம்சம்
முத்தம்தான் என
முத்த நேரம் கூடுதலாய்
இருக்கவும்
முடிவானது
தவறு செய்வோருக்கு,

ஒப்பந்தம், 
ஒப்புதல் ஆனபின்
தவறுக்கு 
முந்த
தவற்றின் தண்டனை
ஏற்க குற்றவாளி 
கூண்டில் இருவரும்,

முறிந்து போன ஒப்பந்தம்
முத்தத்தில் விரிந்து
 நொடி,
நிமிடம்,நாள்,
மாதம் வருடம்
ஆயுள் என,





No comments:

Post a Comment