தெரிந்தது அவ்வளவே


ஒரு கை பாத்திரம்
ஒரு கை மாத்திரம்
துளிகளை தூவியது
பூவாய் நீரை,

மண் மலர்ந்தது 
மழை வரவாய்
மனத்தது,

கால் கெண்டைகாலில்
சொருகிய பாவடை
நனையாது

குத்துகாலிட்டு
குவியும் விரலில்
எழுதும் கோலம்,
யாரும் காணா
கோலம்,

ஜன்னலின் கதவிடுக்கில்
ஒரு கண் கொண்டு
காண தெரிந்தது
அவ்வளவே,

Comments

Popular Posts