ஈன்றவளுக்கு எது ஈடு
தாய்க்கு தாயே சமம்
சொர்க்கத்தை காலடியில்
வைத்திருக்கும் தாய்,
வயிற்றில் சுமந்து
வாயிற்படி தாண்டியபோது
ஏற்படும் வலியின்
துளி,
எமக்கு அரியாது,?
குடல் பெருத்து
உரு’’ ஆக்கினாள்
குருதி திரித்து
உணவாக்கினாள்,
வலி பொறுத்து
வெளியாக்கினாள்,
வகையாய் நம்மை
உலகாக்கினாள்,
எதனை ஈடாக்கி
கடன் தீர்க்க,?
கடனாய் நினைத்தா
கருவாக்கினாள்,!
கடன் தீர ஒரே வழி,
மீண்டும் ஒரு
தாயாய் பிறப்பதை
தவிர வேறு வழி????
Comments
Post a Comment