முகத்தை மூடி

ஆசையில் விழுந்தே போனது

 மண்.,

மண்ணில் தவழும் முதுகு,

முதுகில் நழுவும் விரல்,

விரலில் வடியும் வெட்கம்,

வெட்கம் திறக்கும் ஆசை
,
ஆசை பேசும் மெளனம்,

மெளனம் குழையும் சப்தம்,

சப்தம் ஏற்க்கும் வலி
,
வலி தீர்க்கும் இசைவு,

இசை தீர்க்கும் இச்சை,

இச்சை தீர, வேண்டும் 
 
வேண்டுதல் முடிய பிரார்த்தனை

பிரார்த்தனைக்கு காரணம் நீ

நீ இல்லா முடிவு

முடிவில் எல்லாம் நான்

நான் காணும் நீ

நீ என்பதால், நீ

நீமட்டும் நிஜம்.

No comments:

Post a Comment