கனவில் தொட

கனவில் தொட எத்தனிக்கும்
போதெல்லாம்
விழிப்பு தட்டிவிடுகிறது

நிஜத்தில் நெருங்கி சென்றால்
கனவில் கலந்து
விடுகிறது?

கனவாகும் நிஜமும்,
நிஜமாகும் கனவும்
கிடைக்குமா?

கேட்டுப்பார்க்கணும்




கோபமா இருக்கிறாயோ?
ம்ண் நீ களி மண் நீ
மண்ணின் தன்மை கொண்ட
பெண் நீ
குழைத்தால் பாண்டமாகும்
குணம் கொண்ட
மண் நீ.,

மன்னித்து விடு
இல்லை
மண்ணில் நிற்கவிடு?
ஏணிப்படி ஏற்றிவிட்டு
எங்கே போனாய்?
நீ .,

பிடித்திருக்கிறாய் என்றே
ஏறினேன் பிடிவிட்டால்
அடியில் வீழ்ந்து
அடி விழுமே?
அழுவதுதான்
உனக்கு பிடிக்குமென்றால்

விடு, ஏணியின்
பிடியை விடு,
உன் பிடியில் இருக்க
ஏணி ஏறிவிடப்போகிறது
மேலே மேலே?

திசை காட்ட வந்தாய்
உன் திசை நோக்கி
நிற்கிறாய் !
எத்திசை என் திசை
ஒத்திசை செய்,

ல”கரமும் ன”கரமும் ற”கரமும்
கற்றிசைத்தாய்
பின் ஏன் ?
ந”ரகமாய்
கையசைத்தாய்?

மின்வெட்டில்
என்னை வெட்டி விட
திட்டமா?.
நான் சொல்லிவிட்டால்
மின்வெட்டே இல்லாது
செய்து விடும்
அம்மா?....தெரியுமா?

இதோ பூக்கள் மண்ணில்
சிரிக்கிறது,
புழுவாய் மனம்
மண்ணில் நெளிகிறது
வேரில்? தொடர்பு
அராதினி.,?

கூடாய்




கிடைத்த ஒரு கிளையும்
முறிந்து விடும்
போல்?

கூடு தூக்கி திரிய
வேண்டும்
போல்?

பழைய கூடு
இருந்திருக்க
வேண்டும்
போல்?

இனி ஜோடி
வந்தால்
சொல்ல
வேண்டும்
போல்?

கூடாதிருக்க
வேண்டும்
போல்???

கூடு இனி
கிடைக்காது
போல்?

சருகாய் இரு




உதிர்ந்துப்போன பிறகும் !!
தன்னுடன்
வைத்திருக்கும்
சத்தமெனும்
சலசலப்பை
சருகுகள்,

உதிர்ந்துப்போன பிறகும்!!
தன் கண
பரிணாமத்தை
இலேசாக மாற்றி
இருக்கும்
சருகுகள்,

உதிர்ந்துப்போன பிறகும்!
கிடக்கவும் ,பறக்கவும்
காற்றுடன் சேர்ந்து
சுழலவும்
கற்றுக்கொண்டிருக்கும்
சருகுகள்,

உதிர்ந்துப்போன பிறகும்!
உக்கிரமாய்
பற்றிக்கொள்ளும்
தீயையும்,ஈரத்தையும்
இயல்பை பெற்றுவிடும்
சருகுகள்,

பச்சையாய் இருந்தபோது
இல்லாத
அத்தனை
செளகரியங்களும்
சருகானதும்

உதிர்ந்த பிறகு
தனித்தோ
தாடி ,
வளர்த்தோ
திரிவதில்லை
சருகுகள்,

முழுதும் மாறிப்போகிறது
சருகிடம்,
மனிதன் உதிர்வதில்லை?
உதிர்ந்த ஒன்றாய்
உதிர்கிறான்
உறவுகளை
உதருகிறான்.

உள்ளிருக்கும்




துருவளாக விழுந்துக்கொண்டிருக்கும்
தேங்காய் பூவின் தூவளாய்
வெண்சிரிப்பு

உள்ளிருக்கும் சாற்றின் பாலாய்
குறுகுறுப்பு

பிழிந்ததும் வீசும் மணமாய்
ஒரு தெளிப்பார்வை

குடித்த பின் உண்டாகும்
மயக்கமாய்

ஒரு உள்மந்தம்.

தெரிவதில்லை உண்மை எதுவென்று




இதோ
போர்த்திக்கொண்டிருக்கும்
தோலில் தெரியவில்லை
அது தரும் பாலின்
வெண்மையை,

இதோ.,
தொடர்ந்துகொண்டிருக்கும்
நிழலில் தெரிவதில்லை
அது பெறும்
நிஜத்தின்உண்மையை,,,,

இதோ.,
எச்சமாய் விழும்போது
விதைக்கு தெரிவதில்லை
எத்தனைவிருட்சகங்களை
வேர் விடபோகிறது
என்றஉண்மை,,,,,,

இதோ.,
கட்டிக்கொண்டிருக்கும்
கைகளில் தெரிவதில்லை
அணைத்தது
எத்தனைபெண்மை
என்றஉண்மை,,,,

இதோ..
வீசி கொண்டிருக்கும்
காற்றில் தெரிவதில்லை
அது உதிர்த்துவந்த
பூக்களின்
எண்ணிக்கையை

இதோ.,
காத்துகொண்டிருக்கும்
எனக்கு தெரியவில்லை
நாட்களை எப்படி?
கடத்துவதென்ற
உண்மையை,

எப்படி புரிய வைப்பது
நட்சத்திரங்களை எண்ணியே
நாள் கடத்துகிறேன்
என்ற
உண்மையை.,,?

எழுதியதும்




எழுதிசாகிறேன்,
எழுதியதில் 
சாகிறேன்,
எழுத, எழுத சாகிறேன்
ஒன்று ஏதேனும்
எழுதிவிட்டு சாகிறேனே?

வேங்கியாரியாப்பா?




தொலைபேசி பிடுங்கி சொன்ன
செய்திகளில்

நீ வரும்போது ..

எனக்கு,
கப்ப ஒண்ணும் கடலு ஒண்ணும்,
எனக்கு,
ரயிலு ஒண்ணும்,ரயிலு டேசன் ஒண்ணும்,
வாங்கியாரியாப்பா?

இப்படி
வச்சி வச்சி வளஞ்சி ருக்குமேபச்சையா
மூக்கு மாரிதி
பச்சைக்கிலராருக்குமே
வச்சா போமேஅந்த மாரிதிப்பா.

அவன் செய்கை எனக்கு விளங்குவதாய்
விளக்குகிறான் விளங்கவில்லை
விளங்குவதாய்
ஒப்புக்கு, சிறு மனம் ஒடியக்கூடாதென
ஒப்பு
கொள்கிறேன்

எதை கொடுத்து அவன்
கனவை
பூர்த்தி செய்யப்போகிறேன்?

அவன்,
கனவில் துள்ளித்திரிவான்
நானோ,
கவலையில்
சொல்லி சொல்லிதிரிகிறேன்.

மின்னியதால் பிழைதிரு(த்த)க்க முடிந்தது?




இருட்டில் நடந்து நடந்து
ஆற்றில் வீழ்ந்து
காணமல் போக
இருந்தேன்

அந்த மின்னல் மட்டும்
வராதிருந்தால்
என் ஆசை மண்
மூடி போயிருக்கும்

கண்மூடிதனமா போன
என்னை மின்னல்
ஓளி மின்னி
காப்பாற்றியது

கரை கண்டேன்
அந்த மின்னல்
முகம் காட்டி
வழிக்காட்டியது
வழுக்காது பாதை
கடப்பேன்

இனி வருங்காலத்தில்
மின்னல் ஒளி உள்வாங்கி
பின்னுவேன் பல கதைகள்
மின்னுவேன் /

ஊசிதான் அதன் ஒளி
ஆனால் வலிக்காது
போடும் வகை திறன்
வாய்ந்த கை
அதன் கையிருப்பு
பெரும் படிப்பு

என்ன இருந்தாலும்
என் இனமல்லவா
அது,
நான் இடி
சப்தம் மட்டுமே
பேரிரைச்சளாய்,
மின்னல் அவ்வாறல்ல
தூர தெரிந்தாலும்
பூமி துளைப்பதுபோல்
வீச்சு அதன் ஒளி
வீச்சு

தூர மழை வாசணை
மன்(ண்)(னி)பாயாக நீ சூடிய
பூ விசியதால்
மண் வாசனை வீசுதோ
சூரணமாய்.

நேரம் கடந்தால் வரும் ஞானம்



அது ஏன் ?
காத்திருக்க செய்கிறது
இருட்டு வரக்காத்திருக்கும்
கள்வர் குணமா?

அது ஏன்?
சோகமாய் படுகிறது
பால்,
மடியில் கட்டியதும் வரும்
வலிபோல்
கனக்கிறது.

அது ஏன் ?
முன் எப்போதுமில்லா
மனம்,
குதிக்கிறது
புதிதாய் விதைத்த
பயிர்,
முளை விடுதல் போல்
வந்தும் வாராததுமாய்/

அது ஏன்?
நம்பிக்கை வருகிறது
தாயும்,இறப்பும்
உண்மை.
அப்பனும் , ஆண்டவனும்
நம்பிக்கை.
என்பது போல்
நம்பிக்கையிலா?

அது ஏன் ?
முகம் காட்ட
மறுக்கிறது,
கருகிவிடும் காயம்
ஆகிவிடும்,
என்பதாலா? புதிதா
பள்ளிக்கு
செல்ல மறுக்கும்
குழந்தைபோல்
மறைந்துக்கொண்டு,
அடமாய்?

முகநூலும் பபுள்கமும்



முதலில் இனிக்கும்
அப்புறம் சவச்சிக்கிட்டே
இருக்கச் செய்யும்,

முடியாது விழுங்க
,முடியாது துப்ப,
சுவை
மரத்து போய்

காலில் ஒட்டினால்
எடுப்பது
ஒரு கலை

வாளில் ஒட்ட
வேறு ஒருவர்
ஷேரிங்கை எடுப்பதும்
ஒரு கலைதான்

உட்காறும் சேரில்
ஒட்டி விட்டால்
லைக் போடுவதுபோல்
இழுபட்டுகிட்டே
இருக்கும்,
பட்டென
அருந்து போய்விடும்

பயணம் செல்ல செல்ல

பயணம் செல்ல செல்ல>?
=====================

காத்திருக்குமோ இன்னும் ?
விடை பெற்று செல்ல
விம்மும் விழியை படபடக்க
வழியனுப்பிய விழி ஓசை

காத்திருக்குமோ இன்னும்?
வீட்டில் நுழையும்போதும்
வெளியேறும் போதும்
நிலை இடிக்காமல் பார்த்து வா
என்றே சொல்லும் அம்மாவின்
சொல்,

காத்திருக்குமோ இன்னும்?
ஒவ்வொரு அடி கடக்கையிலும்
திரும்ப்பி பார்க்கும்போதெல்லாம்
மகனின் தொடர் கையசைப்பு
அழுதும் சிரித்தும்,

காத்திருக்குமோ இன்னும்?
தூரம் செல்லச்செல்ல
ஜன்னல் கம்பியில்
கண்ணம் தோய வெளியெ
வீசிய காயப்பார்வை

காத்திருக்குமோ இன்னும்?
வீதீயின் திருப்பத்தில்
கடைசியாய் திரும்ப்பி
பார்க்க வெரிச்சோடிய
தெருவாய் மனம்

இவையாதும் இனி
காணக்கிடைக்குமோ?

யோசிக்கிறேனா/




எண்ண ஓட்டத்திற்க்கு ஈடு கொடுக்க
முடியாமல் எழுத்துக்கள் பின்னி
பிழையாகிறது

திருத்தி பின்ன இடைவெளி விஞ்சி
விரும்பம் தளர்கிறது

எத்தனை முறை சலித்தாலும்
சாப்பிடும்போது கடைவாய் பல்லில்
அகப்படும் கல்லாய்
சலிப்பு, சங்கடம்/

முழுதும் கல்லாக இல்லையே
என ஒரு மனத்தேற்றல்
கொள்ளாமலில்லை

எப்போதும் ஒரு கல் இட்டு
சமைப்பதில்லைதான்
சமயத்தில்?

பிறவி எழுத்தன் இல்லைதான்
பிற எழுதாளன் போல் ஆக
முடியா விட்டாலும்

பிறகு ,ஒரு நாள் ஆகிவிட்டாள்
பாவம் நான் மட்டும்
இல்லையே?

உன்னைப்போல் ஒருத்தி




முகத்தில் விழும் முடிகற்றையை ஒரு விரல்
கொண்டே ஒதுக்கும் லாவகமாகட்டும்,
நிற்காது வழுக்கும் போதல்லாம்
முனை பிடித்து முதுகு வரை இட்டு செல்லும்
ஆடை திறுத்தலாகட்டும்,

எதிர் பேசும் எவராயினும் கண்ணில்
ஊடுருவி காதுமடல் சிவக்க செய்வதிலாகட்டும்,
வார்த்தை படகாய் அர்த்தம் கடலாய்
அதீத நம்பிக்கையாய் பேசுவதில்லாகட்டும்,

அச்சு அசலாய் உன்னின் மரு உருவாய்
ஒருத்தியையும் காணேன்?

தாவி செல்லவேண்டும்



ரோஜாவின் இதழ் மென்மை
என்ற உண்மை 
தாவிச்செல்லும்
தவளைக்கு
ஒப்பிட

இது கும்பிடும் கை
மலராய் விரிந்தே
இருக்கே?
மலர் கை யாகி
மலர்
மலடாகி
கற்பனை கடலாகி
வார்த்தை
உப்பானது?

கசக்கும் வார்தையில்
சொட்டும் தேன்
சிலருக்கு
மருந்தும்
சிலருக்கு
விருந்தும்

இவையாருக்கெல்லம்
பொருந்தும்,>?

இவர்கள்



இவர்கள் 
கனவில் வண்ணம் பூச
நிஜத்தை குழைத்து கொண்டிருக்கிறார்கள்?

விடுபட்ட விலங்கை மறக்கவேண்டி
இங்குதான் பூட்டப்பட்டிருந்தாக ,
நினைவுபடுத்துகிறார்கள்?

தொலைந்து போய் விட்டதை தேடி
தொலைந்து போகிறார்கள்.

வசிகரிக்கவே பூசியதை ,மழை நாளில்
காண்பிக்க கலைந்து போகிறார்கள்.,

பிச்சை போட கையேந்திக்கொண்டும்
கையேந்துவோனிடம் பிடுங்கி கொண்டும்

சூடவேண்டிய மலர்களை நாரிலிருந்து
உதிர்த்தெடுக்கிறார்கள்

தூசு கசக்கி, கண்களில் தட்டி கொண்டிருக்கிறார்கள்,

இவர்களில் இவர்கள் யாரென்றே இவர்கள்
அறியவில்லை?
இவர்கள்
கல் லாதவரை?

வெள்ளையாய் ஒரு மயில்



பனை மட்டையில் காற்றாடி செய்து
கருவேலமுள்ளில் குத்திட்டு
காற்றின் எதிர்ப்பில் காட்டிச் சென்றபோது
எதிரே காற்றுடன் வந்து எனக்கும்
இது போல் ஒன்று செய்து தா!
என்று கேட்டவள் தானே நீ?.,,

கூர் உடைந்த பென்சில் சீவ
சீவியதென்னவோ விரலை
வேதனையாய் விரல் பிடித்தழ
ஒரு சோதனையாய் என் விரல்
எடுத்து வாயிலிட்டு குருதி
குடித்தவள் தானே நீ?.,,

திறக்க முடியா பேனா மூடியை
திறந்தேனும் தாடா என்று
என்னை மட்டும் கேட்டு ஏங்க
பலர் முன் பலசாலியாய்
பல்லால் கடித்தே நொருக்க
பளிச் சென்று கிள்ளி சென்றவள் தானே நீ?.,

பூத்திட்ட மரம் வாடை தரும்
நீ பூ தீட்டாய் ஆனதரிந்தே
வாசல் வந்தே தெரு விளக்காய்
தலைக்குனிந்தே ,மரக்கதவின்
பின் நின்று ,முன் விரல்
கோலம் செய்து சிட்டி பாவடை
சிரிதே தூக்கி கொலுசால்
ஜல்,, ஜல்,என சைகை செய்தவள் தானே நீ?.,

கல்லூரி பயணத்தில் ,பஸ்
படியில் பயணம் செய்ய
கடிந்தே முனகி கண்ணால்
மேலே வா என்று மேலிழுத்தவள் தானே நீ.,,

பனியாய் உருகி காலம் கடந்தே
கடலின் அலைத்துரத்தலை
சேர்ந்து வரும் ஒரு முறை என்றே
காத்திருக்க, சேர்ந்து வந்தாய்
உன்னவனுடன், சோர்ந்தே
போவேன் என்று என் தெருபையன்
என அறிமுகம் செய்து வைத்தவள் தானே நீ?

பூவின் மொழி அறிந்தேன்

காதலிக்க தொடங்கிய போதே
மலர்களின் மொழி
பயில தொடங்கிவிட்டேன்,

வீதியில் இறங்கும்போதே
தும்பை பூ சொல்லி சிரிக்கும்
துரை கிளம்பிவிட்டார்
துணையாளை தேடி,
வம்பேதும் பண்ணாது
வழி கடப்பேன்,

வழி நெடு பூத்திருக்கும்
செம்பருத்தி
சாடை பேசி
சண்டைக்கிழுக்கும்
பறித்துப்போயேன்
எம்மை
பதியாளின் சடையில்
பின்ன,அவள் உன்
பின்னே வருவாளென்று,

வாத்தியார் வீட்டு
வாசலில் படர்ந்திருக்கும்
மல்லிக்கு
என்னைப்பார்த்தால்
இளக்காரம் தான்
எவளுக்கும் இயற்கையில்
கூந்தலில் மணமில்லை
நாம் பூமியில்
பிறக்கும் வரை
என்று லாவனிப்பாடும்.

மூட்டி மோதி ஒடி
கடக்க அந்த குட்டையில்
பூத்திருக்கும்
தாமரையோ>?
தண்டோடு நானாட
திண்டாடுறேன் ஒரு
பெண்டோடு கூத்தாட
நீ ஓடுற ? என்று
கவிதை சொல்லும்

எல்லாம் கடந்து
என்னவளின் வீட்டில்
பூத்திருக்கும்
ரோஜாவோ ?
எங்கள் தலைவி,
துயில்கிறாள்
எங்கள் தலைவி,
எழுந்து விட்டாள்
எங்கள் தலைவி
உண்கிறாள், என
எனை வெளி நிருத்தி
வேடிக்கை செய்யும்?

மலர்களின் மொழியரிந்த
எனக்கு மெளனமாய்
அவள் சொல்லும்
விழி மொழியறியாது
தேமே என நிற்ப்பேன்?

இடம் கொடுக்காதே இருந்தால் கெடும்



சாத்திய கதவுக்குள்
சங்கதிகள் பல
பூட்டிய மனதிற்கு
புகுந்தாடும்
சுகம்
யார் உணர்வர்,

நேற்றை கனவில்
ஒரு பிரதி எடுத்து
பாதி பாதியா
பகிர்ந்துக்கொள்ள
கனவுக்கு
திடம் இல்லை

தொட திறனின்றி
ஊதி வளர்க்கும்
நெருப்பு,
தொட
மறுப்பதால்
வளர்ப்பை
மறுக்க வில்லை.,

ஒரு விதையிலும்
என்ன முடியா
விதை இருப்பு
ஒவ்வொரு
மனதிலும் சில
சொல்ல முடியா
கதை இருப்பு,

புதைந்து,
எரிந்து போன
எத்தனையோ
தோண்ட முடியா
மனப்புதையல்
உன் புதையலை
எரிப்பதா?
புதைப்பதா?

தூத்தி
விடு காற்றில்
யார் கண்ணிலும்
தூசாக வேணும்
உருத்தட்டும்,,,?

வசமாகி போனதால் வாசம்



அதை கடக்கும் போதெல்லாம்
புழையும், சீழ் வடியும்
புண்ணின்
வாசமே,
எதோ இறந்திருக்கிறதா?
இல்லை,

இறக்க இருக்கிறதா?
அதுவும்
இல்லை
செய்யப்போகும்
தவற்றின் வீச்சம்
முன்னே
வீசிடும்,

முரண்டுடன்
தவறை
செய்துவிட்டால்
வாசம் மறைந்து
விடும்,

உடலில் கலந்தபின்
ஒரே வாசமாகி
அதன் வசமாகி
அழுக்கும்
அசிங்கமும்
நாசியில்
தங்கிவிடும்,
வெளிவரமல்,

யார் கத்தி என்ன/



குத்தப்படும் கத்தியில் கூட உள்ளது
ஒரு பிடி,

கற்றோர் என கர்வப்படும் நமக்கு இல்லை
அப் பிடி

தீராதிருக்க கூர்மை தீட்டணும் கத்திக்கு

தீரா பகமை தீர்க்க தீட்டப்படும் புத்திக்கு,

யார் குத்தினாலும் குத்தும் கத்தி

யாரை குத்துவதென்று சொல்லும் புத்தி

குத்துவது குத்தமென அறியா கத்தி

குத்தமென தெரிந்தே குத்தும் புத்தி

கத்தி உறையில் அமைதியாகும்

புத்தி யாரோ ஒருவனின் உரைக்கு அடிமையாகும்

வெட்கமே திறவாய்



வெட்கமில்லை,
திறந்து கொள்கிறது
வெட்கமே இல்லை
திறந்து கொள்ள?

வெட்கம் வெட்கப்படும்
மூடி இருக்கும்
மூடினால் தான்
மூடியும்,
வெட்கம்
காட்ட

காட்டினால்,
வெட்கம்
பிடுங்கும் மூட தேவையானதை,
மூட தேவையானால்?
தேவையானதில் வெட்கம்
இருக்கவேண்டும்,

உட்காரும் வண்டு விரலால்
தீண்ட மூடும் இதழ்
திறந்து கொள்கிறது,
வண்டுள்ளிருக்க
வெட்கத்தால்
மூடிக்கொள்கிறது
இதழ்களை

பிடுங்கி பறக்க
இதழ்கள் இழுக்கிறது
வெட்கம்
வெரிச்சோடி போச்சு
வண்டும் தெரிச்சோடிபோச்சு
வெட்கம்,திறந்து கிடக்கிறது

தூண்டாதிருக்க எது? தடுத்தது?


நான்,
திரி விளக்கு
எரிவேன்
எண்ணம்
உருஞ்சும்
திறன் மட்டும்
என்னிடம்

அதை உசுப்பும்
உங்கள் விரல் மட்டும்
ஒளி தூண்டுக்கோள்,

போதுமான
வெளிச்சம்
இடம் சார்ந்தே
இருக்கும்

சூரியனுடன் ஒப்பிட
அதன் முன் நீட்டவேண்டாம்,
கருகும் திரி
கருகாதிரியிருக்க
வேண்டுகோள்
இதுவே

வரும்போதும்
போகும் போதும்
திரியை தூண்டுங்கள்,
முடியாதென்றால்?
எரியும் திரி
எண்ணமதில்
விழும்
பற்றி எரியும்,

யார் எண்ணமும்
எரிக்க மறுப்பீர்கள்,
என் எண்ணத்தையும்
சேர்த்து கொள்ளுங்கள்

பல் குத்த உதவும்
சிறு துரும்பென்றாலும்
சரியே?

ஏன் பெண் ஆனாய்?



பிறந்தது பெண் 
முதல் செய்தி முகச்சுழிப்புடன்
ஆரம்பிக்க பட்ட
வாழ் நாள் பயணம்

சுழிப்புடனே பின்னே
பள்ளி,கல்லூரி பழிப்பு
இளிப்பு, பரிவு
காதல், பகிர்வு,
பாசங்கு, வெறுப்பு
பிரிவு எல்லாம்

நீரில் நீந்த நீரை தள்ளுவதாய்
தள்ளித்தள்ளி
வேலை கரை தேடி
ஏறி அலுவலகம்

நிர்வாகி,பணியால்
என பலரும் வீசும்
பார்வை பருவத்தின்
மேல் மட்டுமே

மேல்(ஆண்)
தன்னை மேலாக
ஆதிக்க சகதியில்
பழகி,

இடை பயணத்தில்
இடி,உராய்வு, உரசல்
கழுசடை சீண்டல்
கண்டிப்பாதாய்
தாய்,தங்கை இல்லையா?
எனத்தொடுக்கும்
வார்தைக்கு
அனாதை யாம்,
துடுக்கு பதில்

வேதனை தீர
வேண்டுவாய்துணை
என துணை இனையாகி
துணித்துவைபிலிருந்து
தூக்கும் சுமை இரண்டாகி

இரண்டும் இருட்டில்
இருந்து கலந்து
கரு உருவாகி
அதற்க்கும் சேர்த்து
ஒரு கை உணவாக்கி
ஒருவாகாய்
கழிந்து களைப்பை
தீர்க்க இருக்க
நினைக்க

இவள் ருதுவாகி
இவளும் பெண்ணாகி
என் பாதை போல்
இவள் கடக்க
ஆயத்தமாகி விட்டாள்,

மூழ்குவது, கரை
தொடுவதும்
அவள் காலம் வரை
இரக்கி இருப்பேனோ?

வெள்ளையாய் இருந்தபோது



இதோ ஆயத்தமாகி விட்டேன்,
இதோ என் புறப்பாட்டின் ஏற்பாட்டில்
சதையோடு சருமத்தில் உயிர் கோத்து
எனக்கேற்ப்பட்ட அவமானத்துளைகளை

ஒன்றை அடைக்க ஒன்று மிச்சப்படுகிறது
சல்லடை கண்ணாக துளைகளின் எண்ணிக்கை,
சதை, பேருக்குத்தான் போர்த்தி இருக்கு?

கழற்றி வைக்கப்பட்ட காயத்தின் மீதி
மறைக்க எதிலிருந்து கழற்றப்பட்டதோ
அதில் அடையாளம் தங்கிவிட்டது

மிச்சமான ஊசலில் இருந்த உயிர்
உன்னிடம் கிடைக்கும்
பாயில் இடாதே நோயில் விழலாம்
உன்னுயுருடன் கலக்க முடியுமா பார்

துளைகளில் வீச்சம் இருக்கும்
அனுப்பிய தொகையின் வீச்சத்தைவிட
இது சற்றே குறைவுதான்/

சந்திப்பில் கிடத்தப்படும் இதை
சங்கடத்தில் ஆழ்த்தாதே
சற்றேனும் தள்ளி நின்றேனும் பார்?

புழுக்கள் நெழிய ஆரம்பித்து விட்டது
குருதியில்லா புழுக்கள் அவை
என்போல்/

எய்த போதும்



இது ,
அன்றிலிருந்தே 
தேயத்தொடங்க்கியது
ஆண் உருவமும்,ஆணின இயல்பும்

வியர்வைக்கூட
அழுந்த துடைக்காது
ஒற்றியெடுக்கும் வினோதம்
கண்டு,
நடையில் கொஞ்சம்
நளினம் கண்டு,
அடுக்கலையில்
அக்கறை இருப்பது
கண்டு,

அக்காள்,தங்கை ஆடைகளை
உடுத்தி மகிழ்வது கண்டு,
கண்டு கொண்டார்கள்,
மனதில்
வஞ்சம் கொண்டார்கள்,
கெஞ்சிக்கேட்டார்கள்
மாரிக்கொள் ,
இரசாயன மாற்றம்,
இது என
அரியாது அறிவியல்
படித்தவர்கள்?

வேண்டுகோளுக்கு
செவிமடுக்காது
விரட்டிவிட்டார்கள்,
விட்டு
வெளியேறிய நாட்களில்தான்
தெரிந்தது
எம் உலகம் தனிதான் என்று,

வீதியில்,..
ஒரு பொருட்காட்சி
கோசா,ஒம்போது,
ரெண்டும்கெட்டான்
சூட்டிய பெயர்கள்,
பசி,இதயம்,மூளை என
உள்ளதை ஏற்க மறுத்த மூளிகள்,


கண்டாலே.,,,
தீண்டல்,சீண்டல்
உடல் காயங்களை விட
உள்ளக்காயம் யார் அரிவர்,
கண்ணீர் இன்னும்
ஏனோ ?மாறாது
நீராக
இருப்பதுதான் ஆச்சரியம்,?

மூன்றாம் பாலில்
பெரும்பங்குள்ளதுபோல்
விபச்சார
உதவிக்கழைக்கும்
இவர்களை என் சொல்ல,

எம் இனம் கூட்டம்
கூட்டமாய் வாழ்கிறோம்
மனிதக்கூட்டத்திற்க்கு பயந்தே
அல்லாமல் வேறென்ன?

செல்லப்பிராணியாக நாயை
கொஞ்சும் இவர்கள்,
கொஞ்சவா கேட்டோம்
வஞ்சிக்காமல் இருந்தால்
போதுமே?
எள்ளுவதை
எந்த சாமி கேட்குமோ?

எங்கும் இருக்க தடை,
இருக்கையிலும் தடை,
நீங்கள் வந்த வழி வந்தவர்கள்
நீங்கள் போகும் வழி
போகப்போகிறவர்கள்
என்பதைக்கூட
தெரியாமலா
இருக்கிறார்கள்?

பூமி பிளந்தா பிறந்தோம்?

கவலை



எனக்கு இருக்கும்
ஒரே 
கவலை
நீ
கவலைப்படாமல்
இருக்கனும்
என்ற
கவலை மட்டும்தான்?

முன்னால் இருந்தது




சிலர் மென்றதாய் நினைத்து
வீசிய சக்கையிலும்
சாறு இருகத்தான்
செய்கிறது

மழைக்கூட


இடை, 
விடாது
பெய்யும்

இந்த இணை உலகம் பெரிதப்பா?இணைந்து விடு இதில் நீயப்பா

ஒரு முறை சுற்றிப்பார்க்க
ஒரே சுற்றல் தலை
சுற்றி விழுந்து 
விட்டேன்
இதில் எதைக்கரைத்தாலும்
காண முடியாது
கரைத்த வற்றையும்
கரைத்தவனையும்
இது தனி உலகம்?
நான் அப்போதே செத்திருக்கணும்?
ஏன் என்னையே துரத்துகிறாய்
என்றாயே,

நான் அப்போதே செத்திருக்கணும் ?
ஆசையா கொடுத்த காக்கா கடி
கல்லமிட்டாய்
வாங்க மறுத்தாயே,

நான் அப்போதே செத்திருக்கணும்?
நீ முதல் வகுப்பு தேர்ச்சியின்
சந்தோஷத்தில் முத்தமிட
ச்சி சீ என்றாயே,

நான் அப்போதே செத்திருக்கணும்?
எனக்கா நீ காந்திருப்பதை
மறைந்து நின்று பார்திருந்தேன்
என சொன்னபோது
விருட்டென பதில்
ஏதும் சொல்லாமல்
சென்றாயே,

இப்படியாக சாக நினைத்து
நினைத்து சாகா வரமாய்
நீ எனக்கு தந்து கொண்டே
இருக்கிறாய்?

இதய கனி




விதையாய் வீழ்ந்து
வேராய் புதைந்து
செடியாய்
மேல் உயர்ந்து

கொடியாய்
படர்ந்து
மொட்டாய்
மலராய்,காயாய்
கனியாய்,

சுவையாய்
இனித்திருக்கும்
இதயக் கனியே
நீ

உள்ளிருப்பதால்
உன்னை
விட்டு
வைக்கிறேன்?

அக்காவின் தோழிகள்



கோழிக்கு முட்டை இருக்காண்ணு
பார்ப்பதிலிருந்து....
குளிக்கையில் குளக்கரையில்
ஆடை
பாதுகாப்பதிலிருந்து....
அவர்களுடன் நான்?

பாவடையில்
முடிச்சிட்டு
தொப்பம் கட்டி வாத்துபோல்
வளைய வரும்
அக்காவின் தோழிகள்.

சில்லுக்கோடு,சிட்டாங்கல்லு
பல்லாங்குழி இவர்களின்
விளையாட்டில்
பம்மாத்து நடுவன் நான்?

என் சொல்லும் ஏற்றுக்கொள்ளும்
அக்காவின்
தோழிகள்...

கூட்டாமாக கூடி குசு,குசுவென
பேசி சிரிக்க தடுக்காது
நடுவில் ரெண்டுங்கெட்டானாய்
நான்,

மரக்கிளையில்
கயிறுகட்டி
ஊஞ்சல் இட்டு
அவர்கள்
ஆட
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொருவர்
மடியில் அமர்ந்தபடி,,,

கூட்டாஞ்சோறு
ஆக்கும்போதும்
ருசிப்பார்க்க
ஊட்டும்போதும்
தாயுள்ளமாய்
பரிமாரும்
அக்காவின்
தோழிகள்...

வரிசை கட்டி பேன் பார்க்க
இல்லாத பேனை
இஸ்,ஸ் என முறிக்கும்
அக்காவின் தோழிகள்

திசையரியா செக்கு
மாடு என எனை நினைத்து
அவர்களின் அந்தரங்க
பரிமாற்ற சம்பாசனையில்
ஓரக்கண் கொண்டு
பார்க்கும் ஒரு
தோழி..

குண்டாய் ஒரு தோழி
அவர்களை சமனாக்க
ஒரு துண்டாய் எனை
இடுப்பில் சுமக்கும்
ஒரு தோழி......
.
கடைத்தெரு
செல்லும் போதெல்லாம்
கைதுணையும் ஆண்
துணையுமாய்
எனை
அழைத்துச்செல்லும்
ஒரு தோழி.....

கொலுசு இட்டு
பொட்டுட்டு
மூக்குத்தியா
அடையாள மை
இட்டு அழகு
பார்க்கும் ஒரு
தோழி...

சாமந்தி பூ தோட்டமென
சந்தோஷமாய்
வாழ்க்கை
நகர ஒவ்வொரு
தோழி பூவையும்
தனித்தனி
தோட்டக்காரர்கள்
கொய்து போனார்கள்...

தோட்டதில் வண்ணத்து பூச்சியா
இல்லை இல்லை
வண்ணம் அற்ற பூச்சியாய்
பறிக்கப்பட்ட
இடத்தில் பறந்து
பார்ப்பேன்
அக்காவின் தோழிகள்
மறந்தே போனார்கள்
இந்த தம்பியை?

இருக்கிறாய் கிறுக்கனாய்?



ஏமன் நாட்டு மஜ்னுவும்
அராபிய தேச லைலாவும்
காதலித்த சமயத்தில்;

லைலா வசிக்கும்
நகரத்தில்
மஜ்னு நுழைந்த
உடன் அந்த மண்ணையும்
மரச்செடி கொடிகளை
முத்தமிடுவானாம்.,?

படித்த எனக்கோ
பைத்தியக்காரத்தனம்
என தோன்றியது
உன்னிடம் பழகுவதற்க்கு
முன்பு,

அந்த நோய் என்னை பீடித்த
பின்பு,
உன் வீட்டின் வாசற்கதவில்
என் கைரேகையை
விட
இதழ் ரேகை அதிகமடி
பெண்ணே.,?

தீரா தீ தீராது இனி

தீரா தீ தீராது இனி
==============

தீர்ந்துப்போனதாய்
நினைத்து
மறைத்து வைக்கப்பார்க்கிறாள்
மனத் தீயின்
கங்கை
வைக்கோல் போரில்

போரில் ஊர்ந்து
உள்
ஊடூருவி
கை பரப்பி விரித்து
முழுங்க்கும்
விசயமரியாது

கடைசியில்
கருகும் வாசம்
வீசும் புகையில்
பொசுங்கி
தீர்ந்து சாம்பலை
உமிழும் சங்கதியறியாது

மறைத்து வைக்கப்பார்க்கிறாள்
மனத்தீயின் \
கங்கை
வைக்கோல் போரில்.?

சாபமிடுடா?



ஒரு 
சாபமாவது
என் மேல் இடடா
அந்த சாபத்தின்
சாயலிலாவது
நீ
தீண்டியதாய்
பெருமை
பட்டுக்கொள்கிறேன்

அழ பிறக்கவில்லை


விளையாட்டாய் நடந்த எம் காதல்
சந்தையில் எனக்கான
பொருளாய் நானும் ,அவனுக்கான
பொருளாய் பண்ட மாற்று
நடந்தேரியது

கூட்டிய பொருள் கூட.
கூடலில்
இரு கண்மனி கவிதைகள்
கையிருப்பாய் ஆனது

அவனுக்கான தேவையில் 
சேவை எம் பாக்கியம் ,
குதுகலித்து ம்னதிழைப்பில்
வார்த்தைகளையும்
வாழ்க்கை நடத்தையிலும்
வசந்தம் தவிர எம்மை
ஏதும் அண்டவில்லை,

கவிதைகள் காவியமாயின
கனவுகள் எம் கண் முன்
ஓவியமாயின
கற்றும் பெற்றும் காலம்
தன் இயந்திரத்தை
ஒரு முழு சுழற்சியின்
கடைசி நொடிகாய்
காத்திருக்க

மலை என வீழ்ந்தான் எம்
மணவாளன் சற்றேனும்
நிலை குழையா அவன்
தந்த பயிற்ச்சியின்
காரணமே எம்மில்
கலக்கமில்லை
கண்ணீர் இல்லை,

உற்றும் பற்றும் ஒப்பாரியும்
ஊலையிடலும்,ஓங்கியறைந்தழுதலும்
என் கண்ணில் நீர் வரவழைக்க
வில்லை ஏன் அழவேண்டும்
வலித்தால் அழு அடியில்,
மனம் வலித்தால் தொழு மனதில்
என சொன்னவன் என் மன்னவன்
அவன் சவத்தின் முன்
எப்படி முடியும் என்னால்,

காவியமான எம் பிள்ளைகலும்
கையை பிசைந்த படி 
இருந்தார்களேயொழிய
கண்ணீர் தரவில்லை
தந்தையின் சொல்லாய்
வாழும் பிள்ளைகள்,

வெரித்த பார்வையோ,
விட்டேத்தி நிலையில்
நடிக்காமல் இருந்த என் நிலை
கண்டு
எம் உறவோ
திட்டித்தீர்த்தன மனதிற்குள்

என் மன்னவன் தேர் ஏறி
ஊர்கோல கோலம் பூண்டு
ஒய்யாரமாய் சென்றுவிட்டான்
வீதி வரை சம்பிரதாய 
வைபவத்தில் திரும்பாதே
என தீட்டென பழக்கம்
போதித்து அழு வென
அதிகார தோரணை\

எல்லாம் முடிந்து இல்லம்
வரும் எம் வாரிசின்
சின்னவன் மட்டும்
பாவம்,

தகப்பனின் கையிலேயே
உறங்கிய பழக்கம்
இனி யார் கைதருவார்
தகப்பனாய்,
விம்மலும் விசும்பலும்
உன் முன் நடக்கவில்லை
கண்ணாளா.
,போதும்
இனி என்னுள்
அழத்தயறாகிவிட்டென் 
என் காலம் தீருவரை,

உன் பொருட்டு ஒரே வேண்டுகோள்
கண்ணீர் சிந்துவதால்
கனவிலும் வர மாட்டேன்
என இருக்காதே
அவ்வாறு நீ இருந்தால்
இவள் உயிர் 
இனி இருக்காதே?

நீரானால், நீ நிறைவாய்?


நீராய் நீ இருந்தால்
நிரப்ப படும்
பொருள் முழுதும்
நீ நிறைவாய்?

நீ நீரால் வந்தவன்
நீருக்கு நிகர் 
நீர் 

நீரின்றி அமையாதுலகென்றான்
நிஜம் நீ உணர்  நீரின் குணம்
கொள் ,
இல்லாத இடத்தை
நோக்கி நகரும்

நீ இல்லாதவனிடம் தேடி
கொடு நீர் போல்
வருமை நீக்கும் நீர்
பெருமை நீக்கும் நீர்

நீ எதனுடனும் கலவாதே
நீர் எதனுடன் கலந்தாலும்
குணம் மாறும்
குணமாறதிருக்க
கலவாதே
இயல்பை இழந்து
இன்பம் காண்பதை விட
இயல்பாய் இருந்து
ஓடும் வெள்ளத்தின்
கீழ் நீரோட்டமாய்
அமைதி கொள்ளும்
மனது 
ஆனந்தம் அதுவே

சீட்டுகட்டு வாழ்க்கை

அடுக்கடுக்காக அடுக்கி
காலம் வாரியாக வகுத்து
ஏடுகளை ஒவ்வொன்றாக
புரட்டிப்பார்க்க
 தொலைத்தவைகளின்
கணக்கோ ஈவு இரக்கமின்றி
அதிகம்
?
மீட்டல் இனி இயலாது
மறுபடியும் வரிசைமாற்றிப்பார்த்தாலும்
பால்யத்தில் கண்டது
கேட்டது என
சிராய்ப்பின்
எரிச்சலாய் ஆங்காங்கே ரத்த
கசிவுகளாய்
வலிகள் மரத்து போய்
ரணம் பட்ட அடையாளம்
மட்டும் மிச்சம் மீதியாய்
எதனை எடுத்து எதில் கூட்டியோ
வகுத்தோ கழித்தோ பார்த்தாலும்
அதே பதில்தான்
எல்லாம் எதற்க்காக
?
சடுதியில் மாரிப்போனதாய்
நினைப்பு எத்துனை மணித்துளிகள்
நழுவியது எதில் மூழ்கியிருந்தேன்
ஏன் யாரும் என்னை உசுப்பவில்லை
நண்பர்கள் யாரும் எனக்கு
உதவியதில்லை ஏன்
?
எதில் அவர்கள் வைத்துள்ளார்கள்
என்னை
அதாரம்,தாரம், பொருளாதாரம்
என இவைக்களின் தோள்கலில் நானோ?
இவைகளோ?
மாரி மாரி பயணம்
யாரோ அவள் கொஞ்ச நாள்
அவளுடனும் பயணம்
பிரிவுகளில் சில நாள் ஏக்கம்
வசவுகள், வாழ்த்துகள்
வந்து போன நாளும் உளது
மீதம் இருக்கும் காலம்
யார்மீதோ
? என்மீது யாரோ?
கழியப்போகிறது
மீண்டும் அடுக்குகளை
கலைத்துப்போட்டேன்
இடையில் வெளிச்சம் பட்ட
ஒரு சிறு கூட்டின் ஒளிக்கீற்றை
இது என் கையில் மட்டும்
பிடிபட மறுத்த மீதமிருக்கும்
பாக்கி, மரண விழல்
மரணவெளி வெளிச்சமாக 
இருக்கக்கூடும்.

என் குளம்
--------------
தவளை தாவல் கொள்ளும்
அழகான குளம்தானது,
மீனுடன் சேர்ந்தே நீந்தும் பாசிபூவும்
அழுக்கை நீக்கும் நீருடன்
சேர்ந்தே மீனும் நீந்தும்
தூண்டில் மாட்டியதும்? 

கொதிக்கும் சட்டியில்
மீந்தும் மீனை
கண்டதும் எதன் அழுக்கை நீக்க
வந்ததோ? என தோன்ற
சுவையில் சுட்டது வாய்,
உண்மை எப்போதும்
கருவாடாய் காய்கிறது
அழுக்கை அதன் உருமாற்றி
சாறாய் குடித்தபோதும்
அழுக்காய் சிக்கும்
முள் குரல்வளையில்;

புதிய ஆச
===========
எல்லோரும் புத்தனாக
ஆசைப்படுகிறோம்,
ஆயுதமாக ஏந்தியே
அஹிம்சை செய்கிறோம்
கண்ணம் காட்டாமல்
சிலுவையை
வேண்டுகிறோம்
,பாட்டெழுத பாரதி
மீசை மட்டும்
வளர்க்கிறோம் 
நீயூட்டன் விதி எதிர்க்க
மேலே பறக்கிறோம்
என்றேனும் நாம்
முள் கிரிடமான
மனமுரண்டை மாற்ற நினைத்ததுண்டா?

பாச்சை


கோணல் வகிடு,
கும்மிருட்டின் நிலா ஒளி,
சுருக்கிய நெற்றி,
நிமிடத்திர்கொருதரம்
யாரும் அறியாதருணத்தில்
விழியால் தீண்டல்,

வியக்கும் வார்த்தைகளுக்கும்
விழி விரியாமை?
பதிலலிக்கும் முன்னமே
கேள்விக்கான வழிவிடல்.

திணராத் தமிழ்
திக்கி திரியும் என் வார்த்தைகளுக்கு
சப்தமில்லா சிரிப்பு.

பேச்சின் ஊடே சிலவேளை
மூன்றாம் பாலின் வசியம்
முடி ஒதுக்கல், புடவை திருகல் என
நாட்டிய பாவனை ஏதும் செய்யாதிருத்தல்.

கதை ஒன்று சொன்னால்
அழகானதொரு தலைப்பிடல்
இவையல்லாமல்
இடைச்சொருகளாய்
ஏகாந்தமான ஏக்கபெருமூச்சு.,

வடித்த சோற்றுக் கஞ்சியின்
ஆடையாய் உள்ளாடல்
அரிய செய்தல்
கோபத்தில் ,

இவைமட்டுமா உன்
அடையாளம் இருக்கே
இன்னும் ஏராளம்,