மழை நாடகம்

நீல அரிதாரம்
கlலைந்து
மேகச்சாயம் பூசி
கருமேக மைதீட்டலிட்டு
மழை நாடகம்
அரங்கேற இருக்கும்

மழை நாடகம்

ஒத்திகைக்கு ஒவ்வொரு
வாத்திய சத்தமாய்
இடி இடித்து
அலங்காரமேடை
வண்ண ஒளிவிளக்காய்
மின்னலும் மின்ன
மாறி காண்பிக்கும்
மாரிவர,,,,,,

திரைவிலக ஒளி 
கொட்டும் பூவாய்
கொட்டும் மழை

நனைந்து கலையும்
பூச்சின் கலவை
ஒடையில் ஓடும்
தோற்றமாய்
வண்ணம் வான் வில்லில்
தோன்றும் 
அழகாய்,

நிழல் யுத்தம்



நிழலில் யுத்தம் செய்தாலாவது
நிம்மதி கிட்டும்
உன் நினைவில்

நித்திரையை அல்லவா
யுத்தம் செய்கிறேன்
சத்தம் இடாமலும்
சங்கொலி எழுப்பாமலும்
சரீரம் முழுதும்
முறிக்கும்

யுத்தமுடிவில்லாமல்
தொடரும்
யார்? வருவர் 
சமாதான கொடியுடன்,

எனக்குள் என்னை
வெறுக்கும் யுத்த
பயிற்சியில்
நீ வென்று விட்டாய்


தோல்வி ஒன்றும் 
புதிதல்ல
தொடர்கிறது
என் யுத்தம்,
உன் யுத்த பிரகடனம்
போர்வையில்
சில நேரம்
ஓய்ந்திருக்கும்,

திடீரென தாக்கும்
நினைவு ஏவுகணை
நித்திரையில்
,
பதுங்கு குழிக்குள்
இன்னுமொரு
பதுங்கு குழி
எவ்வாறு
ஏற்ப்படுத்துவது

குறிதப்பாமல்
தாக்கி பிறகு
பிழைத்து பிறகு
தாக்கி யுத்தம்
தொடர்கிறது..????

இது ஒன்றும் புதிதல்லவே?

அவசர வேலையா செல்லும்போது
அசிங்கத்தை மிதித்து விட்டு
உதர முடியாமலும்
தடவ படிக்கல்லோ
கல்லோ கிடைக்கமல் அழுத்ததுண்டா?
எப்போதேணும்.,

இன்று இப்படம் கடைசி,
தெரிந்தவரிடம்
இரவலாக சைக்கிள் வாங்கி
வேர்க்க விருவிருக்க
வேகமாக
போய் சைக்கிள் டோக்கணும்
கிடைத்து கெளண்டர் போனதும்
ஹவுஸ்புல் டக்கென விழ
வழிதலை துடைத்ததுண்டா?
எப்போதேணும்.,

அவளை விரும்பி
அவளும் நேசித்து
விசயம் தெரிந்து இரு வீட்டாரும்
பேசி முடிக்கும் தறுவாயில் வேடன்
ஒரு மூடன் 
பேர் சொன்னால் அவன் ஒரு
கேடன்
உலை வைத்து 
எதிர்ரெதிர் திசை மாரிப்போனதும்
கண்ணீர் இன்றி!!! அழுத அனுபவம்
ஏதுமுண்டா??

பூ வாங்கி மனதுநிறைய மணம்பூண்டு
கோதையில்லால் 
குடியில்(வீட்டில்)
இருக்க கூத்துக்கட்டிய
மனவேட்கையில் பேரம்பேசா பழமும்
வாங்கி உள்ளே பொங்கும் பரவசத்தை
தெருவிற்க்கு
தெரியாதிருக்க மறைந்த கள்ளன் போல்,
குடிபுகுந்தாங்கே
முகம்காட்டா
இல்லால் ஒரு சொல்லால் 
கொடியேற்றியகாதை கோதை விளக்க
அந்த நாள் வந்தகதை கேட்டதும்
குழிந்தே பிழிந்தே
கொதித்தே போனதுண்டா?
எப்போதேனும்?

குதிரை தந்தவள்

காதல் வரம் தந்தபோது இலவசமாக
கற்பனை குதிரை ஒன்றை 
கையில் தந்துவிட்டாள்,

கைபிடித்து நடக்கும் என்றிருந்தேன்
அதன் கை பிடித்தே நடக்க செய்கிறது?

உண்ணும்போதும், உடுத்தும் போதும்
என்னுடனே 

என் தூக்கத்தைதான் அது உண்கிறது
கடிவாளம் எனக்கு பூட்டி என் மேல்
பயணம் செய்கிறது?

விட்டு விலக எவ்வளவோ முயன்றும்
என் காலில் அடித்த நினைவு “லாடம்”
அதனிடமிருந்து தப்பிக்க மறுக்கிறது

துளியாய் தொடங்கும் ஒவ்வொன்றையும்
நீர் வீழ்ச்சியாய் கொட்டச்செய்கிறது,

கானல் நீரெடுத்து பருக கொடுத்தேன்
கவிதை ஊற்றே என காவியம்
சொல்கிறது?

திருப்பிக்கொடுத்து விடுவதென தீர்மானித்து
தேவதையிடம் கொண்டுச்சென்றேன்

அவள் இரண்டு கற்பனை குதிரை பூட்டிய
சாரட் வண்டியுடன் ஊர்வலமாய்
எதிரே வந்தாள் ?
பாவம் அவள்.......?

காரணம்?

திரும்ப திரும்ப வந்து உன் பாதம் முத்தமிடும்
அலை சொன்ன காரணம் என்ன?
தெரியுமா?

சுல்லென சுடும் சூரிய சூட்டில் வேர்வை
முத்தில் நினைய விடும் காரணம் என்ன?
தெரியுமா?

தென்றல் உன்னைக்காணும் போது சுழற்கொள்ளும்
காரணம் என்ன? தெரியுமா/

எல்லாம் ஒரு காரணமாகத்தான்/

உண்மையா இல்லையா

எரிவதா? வேண்டாமா?
யோசிக்கும் சமயமெல்லாம்
எதிர் நிற்கும்
நீ,,,,
காலையில் கசங்கிய
பூவிடம் பேசியபோது,

துடைப்பதா ?வேண்டாமா?
கைதுண்டெடுக்கும்
நேரத்தில் கண்ணாடியில்
நீ,,,
உணவுண்ட வாயுடன்
முத்தம் தந்தபோது,

இழுப்பதா? வேண்டாமா?
முயலும்போதெல்லாம்
புரண்டு படுக்கும்
நீ,,,,
சுற்றிக்கொண்டு படுத்திருக்கும்
பாதிசேலையை இழுக்கும்போது

அழுவதா, வேண்டாமா?
அறுவை சிகிச்சையின்
ஆடை யுடுத்திய சமயம்
கை பிடித்த வண்ணம்
நீ,,,,
உயிருடன் காண்போமா
என கண்கள் பேசிய போது?

சில நேரம் ஏற்படும் இதுபோல?

கனவில் கடல் வற்றி
மணல் திட்டுகளில்
ஞாபகம் புதைந்துபோயிற்று,

பிம்பத்தை பிரதிபலிக்க
எப்போதும்
மறுக்கும் நிலைக்கண்ணாடி,

தவம் இல்லாத வரம்
வேள்வித்தீயில்
கருகிப்போனது,

தாம்புக்கயிற்றில் சுற்றி
வீசிய நினைவுகள்
ஆழியில்
நங்கூரத்தின் அடியில்
நிலை கொள்ளாது
தழும்பும் மனக்கப்பல்


யாரிடம்சொன்னாலும்
திரும்பி வரும் செய்திகள்
வார்த்தைகள் மரணித்து
மெளன அஞ்சலிக்கு
நிற்பதாய்,

மழையில் வெளுத்துப்போனதாய்
காட்டிக்கொள்ளும்
சில அன்புத்துளிகள்
அலை எழுப்பியபடி
காலில் புதைந்துதான்
போனது,

சாட்டியதுன்னை

ஏக்கமாய் பார்க்கும் தரையில்
விழ ஏனிந்த
அவசரம்

விரல் ஓடும் வீணையில்
நாதம் தொடும் முன்
இதம் கூடும்
இன்பம்

தானே எரியும் தீயீல்
நீ தெரிவது ஒளியிலா
திரியிலா?

போதும் உன் புன்னகை
பூட்டிவை


பேசு

பேச மறந்த சமயம்
மொழி தவழ்ந்து
வந்து
உன்னிடம் மடியில்
இடம் பிடிக்கும்,

பேசும் சமயமோ
மடிவிட்டு
இறங்கி இருக்கும்

அதுவாய் எழுந்து
நடக்க
நீ விரல் பிடிதழைப்பது
ஏன்?

பிடிக்குமென்றால்

விழியில் வழிந்தபோது
கண்ணிரென காண்பாயோ?
குருதியின் மறு உருவமடி
அது?

வலியில் துடித்தபோது
நடிப்பென நகைப்பாயோ
நான் படும் வேதனை
கூட உனக்கு விளையாட்டு
என்றால்

வாழ் நாள் முழுதும்
விளையாடி
காண்பிக்கிறேன்

பணம்

கறைந்தபின்
தேடுவது?

மீதமாய் இருக்கும்

உன் வார்தைக்களை
ஒட்டு கேட்பதுபோல்
உற்றுக்கேட்கிறேன்

உற்று நோக்கிய பின்
வெற்று வார்த்தைகளாகிறது
நீ வார்த்தைகளை
வழங்க்குறாய்

உன் வார்தையில் ஏனோ
மயங்குகிறேன்
நீ சொல்,ஒன்று
பொருள் தானே
அமையும்


பார்வை வீசு

நீ வருவாய் நீஜமாய்
நீயே ?
சொல் செழிவாய்
ஒன்றை

நன்றி

வழிகாட்டி பலர்
விரல் காட்டி
விட்டே

புதிய காதல்



பழகிய குளத்தின்
பாசி படிந்த
படிக்கட்டில்
பார்த்து பார்த்து
கால் பதிப்பதுபோல்

எப்போது
வேண்டுமானாலும்
வழுக்கி விழக்கூடும்,

ஒரு தரம், ஒரு தாரம் இரண்டாம் தாரம்.



வெட்டும் அருவாளும் வேல வந்தா
வெட்ட வரும், குத்தும் ஒமீசை அருவாளோ
என் குடல்வரை கிழிக்குதையா..,

பத்தி எரிஞ்சதையா இப்பாதகத்தி மனதெல்லம்
கச்சைக்கூட கருகுதையா
கண்ணுக்குள்ள என்ன வச்சி
இந்த காரியத்த செஞ்சீக.,,

பேருவச்ச ஏஆத்தா,மாரில் காத்த
ஏஅப்பன்,முதுகிலாடிய எம்பொறப்பு
மூனுயிரு தடுத்துச்சையா இருந்தும்
ஏஉசுரு உம்மேல.,,

எவ்வூரு பஞ்சாயத்து எத்தனையோ
எடுத்துசொல்லி,தடுக்கத்தான்
தவிச்சதையா தாவித்தாவி
குதித்ததையா ,ஏராசா நீ
மிரட்டையிலே பஞ்சு பஞ்சாச்சே
பஞ்சாயத்து துண்டாச்சே..,

உம்மேல உள்ள ஆசயிலே வெட்கம்
வெலகிபோச்சி வெவரமாக நின்னாச்சி
எட்டி இடரி விட்டு எங்கூட்ட தள்ளிவிட்டு
உங்கூட நானும் வந்தே நடுஜாம வேலையிலே
உன் ஊர காணுமுன்னே ,

மஞ்சைகொல்லை சத்திரத்தில் மயங்கியே
ஒம்மடியில் கூறுகெட்டு கூடி விட்டேன்
கும்மாளமா நினைச்சுபுட்டேன்,
விடியுமுன்னே பொட்டிதூக்கி பெட்டிப்பாம்மா
நா நடந்தேன்

வீடு வந்து ஆழியூரு, விதியே வந்து நீ பாரு?
உன் குடிச மின்னால குத்துக்கல்லா
ஒருத்திருந்தா, அத்தேன்னு வாயெடுத்தேன்
தூத்தேரின்னு துப்பி புட்டா,

சிதேவி நாயிருக்க இம்மூதேவி இங்கென்ன
இட்டாந்தே சக்களத்தி எனக்கு வேணாம்?
சாடையிலே திட்டிபுட்டா/

பொட்டுத்தெரித்தம்மா பொலபொலன்னு
கொட்டுதம்மா?இளிச்சி ஏமாத்தி
இப்ப நான் சக்காளத்தி
எம்பாட்டில் சொல்லிபுட்டேன் ,
வெவரமெல்லாம் கொட்டிபுட்டேன்
புத்தியோடு பொலச்சுக்கோ???