தேவதை நீ

காண்போரெல்லாம் வியக்கும்

சில கன்னியர்கள் கூட திகைக்கும்

பேரழகின் பெருமை 

அதரம் மாறி அசைவினில் தேறி

செத்தேன் போ

மின்னும் பொன்னும் எண்ணும் வண்ணம்

அடங்கிய தேகம் ஒடுங்கிய பாகம்

பட்டு பூ கண்ணம் தொட்டுப்பார்க்க எண்ணும்

இட்ட இதழ் வண்ணம் தொட்ட கை மின்னும்,

சுட்ட கை பின்னும் எட்ட போனாலும் தின்னும்,

ஆடை அழகூட்ட அங்கம் திகைப்பூட்ட

பார்த்த வாய் பிளந்து பூட்டாதிருக்கும்,

படிந்த சிகையலங்காரம் கொல்லும்

பார்க்க சிலையும் ஆகங்காரம் கொள்ளும்,

மகுடத்திற்க்கழகு மரகதம், மாணிக்கம்,முத்தென்றால்

உனக்கு மட்டும் சிரிப்பே போதும் செத்தேன் போ,,

சிலையும் மயங்குமுன்னழகே,

படிந்த சிகையை ஒரு பக்க வகிடு பிரிக்க

வழியும் வியர்வையை ஒரு சில முடி தடுக்க

புருவ மசியில் அருவம் ஊற,

இமைக்கும் கண்,இமைப்பதறிய இளமை யூர,

உருட்டும் விழியில் திரட்டும் பார்வை,

அழகிய மூக்கில் முடிச்சிடும் நீள்மூக்குத்தி 

அருகே திருஷ்ட்டிற்க்காய் இட்ட கரும்புள்ளியாய் மச்சம்,

பூனை முடி புசுபுசுக்கும் மேலுதட்டில்

மேல் பொடிபொடி பனித்துளி வியர்வை சிம்மாசனமிட்டு

சிருங்காரிக்கும் சிங்காரிக்கு,

அழகிய இதழில் அதற்க்கேற்ற வண்ணம் பூச்சீலும் மின்னும்,

பேச்சிலும் மின்னும் என்பது மிக மிக திண்ணம்,

நசுங்களாய் வழியும் கீழுதட்டில் வழியும் நாடி பார்க்க,

நாடி அற்று போகும் நமக்கெல்லாம்,

வெண்சங்கு கழுத்தில்லை ஆனாலும் கொழுந்தளிர்,

அதன் வழியே கீழிறங்க தடுக்கும் தவக்கோலம் 

தடிப்பில்லையானாலும் முறைப்பாய் ,

உப்பியதில்லை தொப்பை,முடியும் தொப்...?

விட்டுவிடுகிறேன் வேறில் வேரில்லை,

பூ வைத்த நிலா,

நிலவிற்க்கு பூவைத்த பூரிப்பு,

துள்ளல் நடையில் வெள்ளை சிரிப்பு,

அள்ளும் விழியில் கொல்லன் துடிப்பு,

நளின நடையில் முன் சென்றாலும் 

பின் இருக்கும் கண்ணும் மனமும்

இழுத்து போர்த்தியதும் தேடியதுன்னாலே,