வாழையடி வாழை


தவிட்டிற்க்கு வாங்கியதாயும்,
வறட்டிக்கு வாங்கியதாயும்
எங்கெடுத்தேனோ!
அங்கேயே போட்டு
விடுவதாயும்,

சிறு,சிறு குறும்புகளுக்காக
மிரட்டலாய் சொன்னவைகளை
என் வாரிசுகளிடமும்
சொல்கிறேன்.

தவிடும்,வறட்டியும்,
காணவேணும் திரும்ப
கொடுத்திடு என்கிறான்?
என் உலகத்தில் இருந்தது,

எப்படி காண்பிப்பது!!
அவன்,
உலகம் தாண்டியிருப்பதை
எல்லாம் உலகமயம்,
மாயமான ஒன்றை
காட்சிபடுத்த இயலாத
கதியில்.

காணாதிருப்பதே மேல்



சந்தித்தபோது பேச்சை 
நிறுத்தினாய்
எழுத சொல்லி கேட்ட
நீ,,,
எதிர் நிற்க ஏன் வெறுக்கிறாய்?

எழுத்தில் வழியும்
எண்ணம் பிடிக்கும்
உனக்கு,
என்னை ஏன் பிடிக்கவில்லை?

காகிதத்தில் வரையும்
கோடுகளில் மயங்கும்
நீ,,,
காண வியக்கும் காரணம்?

எழுத்தில் மூக்குமில்லை
முழியுமில்லை
முண்டம் ரசித்த
நீ,,,
உருவம் தவிர்க்கிறாய்,

எண்ணம் வழியும் எழுத்தை
எண்ணெய் வ்ழியும் முகத்தில்
எதிர்ப்பார்க்கவில்லை
நீ...
தவிர்த்திருக்கலாம் ,

தவிக்கும் உன் முகம்,
தகிக்கும் என் அகம்,
தெரிய வாய்ப்பில்லை
உனக்கு
நிஜம் மறுத்து நிழலை
அனைக்கிறாய்,!!

ஒன்றானபின்



திரும்பி பார்ப்பதற்க்கு நீ 
ஒன்றும்கடல் இல்லை 
என்கிறாய்
அலைபாயும்
மனம் கண்டும்,!!!

சந்தித்தவேளை



நிலம்பார்த்து
சுவற்றில் கிறுக்கி
நெகம் கடித்து
தலை கோதி
நேர் பார்வை
தவிர்த்து,

பிடிக்கும் வார்த்தை
தேடிபிடித்து,
பிசகில்லா நடிப்பை
காட்டி,
உடல் ஒரு பொருட்டே
அல்ல என்பதாய்
கவனமாய் செய்த
பொய்.

நிஜம், கனநொடி
கவனபிசகில்
காம பேய் கவனமாய்
கையாளும் விந்தை,
அரியா அங்க
அளவீட்டில்
பிசையும் கையில்
அடங்குமோ பார்த்த
பாகாம்,

கற்பனை காண
நேர்ந்தால்?
மிருக புணர் எண்ணம்
அங்கமெலாம்,
சந்திக்கும்போதெலாம்,
யோக்கியனாய்
பூசியிருக்கும்
முலாம்,

குளம் வீசும் கல்


வீசும் கல்லில் விசை 
ஆசையின் ஆழத்தில்
மூழ்கிபோனது,
துவண்டுபோன கையில்
துளி கல்லும் இல்லை,

எரிவதில் கிடைக்கும்
சந்தோஷம் இல்லை
அலை ஓசையும்
அது தவழும் திசையும்
கரை மோதி கறைந்திடும்
கலையும் காண்பதிற்க்கில்லை,

விளிம்பில் இருந்த போது
ஆழம் தெரியாது,
ஆழம் தெரிந்த போது
விளிம்பில் பிடி நழுவி,

தொட்டதும் சிலிர்த்து
தெரிக்கும் துளி
அதன் மேலேயே வீழ்ந்து
மூழ செய்யும் மோகம்
அமிழ்ந்து ஆழமாய்,

கரையின் காத்திருப்பு
குளம் வீசுமோ இனி
கல் ஒன்றை,?

தூர வீசியதில்



எரியப்பட்ட நான்,
வரம் கேட்டு வளர்த்த
வேள்விதீயில்,

ஞாபகம் மாறாதிருக்க
மதுகடைதான்
ஞானக்கூடம்,

விழித்திறந்தால்
வீதி எங்கும் அவளின்
வியாபித்தல்,

மூடிய விழிக்குள் சிக்கிய
முடி உறுத்தல்
கசங்கலாய்,

சக்கையாய் வீசியதில்
இன்னும் எண்ணம்
பிசுபிசுப்பு,

மறந்தாள் என்ற
கேள்வி மனம் மறுக்க
மறு கேள்விக்குள்,

பாதசுவட்டில் முத்தம்
பதிக்கும் கண்ணீர் துளி
ஈரம் காயாதிருக்க,