அப்ரூவர்


உடைந்த கண்ணாடி
சாட்சி கூண்டில்
கல்லாய்.!

தொடரும்............?



எண்ணெய் தீர்ந்த பின்
இரத்தத்தில்
எரியும்

இரத்தம் தீரும்
உயிர், திரியில்
எரியும்

உயிர் போனபின்
ஒளி வீசிய
இடம்
மீதம்

காலம் காலமாய்
காதல்
மீதம்

உடுத்துபவர்
இல்லாது?

அடுக்கலை கோலம்

அடுக்கலை கோலம்


அடுப்பு கரியால் கோடிட்ட
சுவற்றில்
எது?
பால் கணக்கு
எது?
தயிர் கணக்கு,

சாத்தியபடுதல்
எவ்வாறு?
அழிக்கப்படாத
அத்தனை கோடுகளிலும்
மாதம் பிரித்த
கணக்குகள்

ஒரே சுவற்றில்
பல பக்கம்
ஒரே மாதிரி கோடுகள்,

கோட்டின் மேல் கோடும்
அமிழ்ந்த கோடுகளையும்
அடுக்கடுக்காய்,

அழிக்க மனமில்லை
கோட்டில் வரவும்
செலவும்
வகை படுத்தல்
எங்கனம்,
திகைப்பில்
மீளாது இதுவரை,

அம்மா நீ ஆச்சர்யம்!!!!

எது வலி



குடத்தை முகத்தில் சுமந்து
இடையில்
வெட்கம் 
காண்பிக்கிறாய்?

முரண்டு



இவள் அருகில் இருக்க
எவளைப்பற்றி
எழுதமுடியும்

கசிந்து கொண்டிருந்தப்போது

கசிந்து கொண்டிருந்தப்போது


மரப்பட்டையாய் பெயர்ந்து 
கொண்டிருக்கும்
ஞாபகம்,

அழுத சமயமும் ஆங்காங்கே
மரப்பிசினாய்
திடமாய்

தொட்டுப்பேசிய சமயம்
கரையான்
அரித்து

இதில்தான் துளிர்த்தது
என்பதையரிய
கிளை வடுக்கள்

இடம் மாறாதிருக்கவே
வேராய் புதைந்து
மறைந்து,

முதிர்ந்த நரை
கூடியதாய்
மாவென
உதிர்ந்து,

விழித்து பார்த்தேன்



உறங்கப்போன பின்னே உன்னை
உசுப்பியது எது பெண்ணே
கனவில் நிலா
கண் இமை மேகம்
மறைக்க விளக்க எழுந்தாயோ?

உன் தலையணை கதை கேட்டு
உசுப்பியதா/
இல்லை உன் பாயில்
ஞாபகம் விரித்தாயா?

நிரடியது எது நிழலாடியது
என்ன?

இன்னும் மாறவில்லை

எனக்கும் அவளுக்குமான தூரம்
குறைந்த பின் மெளனித்து
பேசுகிறோம்,

அசைவின் மொழி அழகாய்
விழும் ஓசைக்கு
வித வித அர்த்தமிசை

அருகில் அழைக்க இமையில்
பேச்சு,
விருந்து கூட விழியால்
ஊட்டுகிறாள்,

தேநிர் எனும் சொல்லே
குடித்த திருப்தியாய்

கோப்பையில் மதுவில்லை
கோதையவள் தரும் போதை

தேர்ந்த வசிகரத்தால்
ஏவல் செய்தே,

கோலிர்க்காடும் குரங்காய்
மனம் குட்டிகரணமடித்து,

விட்டு விலக எத்தனிக்க
கட்டிப்போட்ட
பார்வை

கனவு அவள் காது மடல்
தொங்கலாய்
ஆடி ஆடி,,

விசை அவள்,

காதல்



இலவம் பஞ்சை இடையில்
சுமக்கும் தீ

சாம்பல் அலங்காரம்



தீர்ந்து போனதாய் 
நினைத்திருந்த,
கங்கில்
பூத்திருக்கும்
சாம்பல் போர்வைக்குள்
உக்கிரமாய்
நீ ,
நிரம்பியுள்ளாய்
நீங்காது,,

ஒரு கன கனவு

நேற்றைய கனவில் துரத்தி
வந்தவளா நீ
வளையல் இருந்ததே
இதென்ன
கீரல் அடையாளமாய்?

முகம் முக்காடு இட்டுருந்தாயே
இதென்ன
கோலம் தலைவிரி?

மருதாணி சிவப்பிருந்ததே?
இதென்ன
இரத்தம் சொட்ட சொட்ட

கால் கொலுசில் யார் விலங்கிட்டது
புன்னகையாய் துரத்தி வந்தாயே
இதென்ன்
கூக்குரலான ஓலம்
விடியும் வரை விளையாட்டு
நீடித்ததே?

இதென்ன
நீ மட்டும் குழிக்குள்
மரணித்து பிணமாய்


ஏதும் மறந்து சென்றதை 
எடுக்க வந்தாயோ ?
இல்லை
எடுக்க வந்ததை
மறந்து போக
வந்தாயோ,

அத்துவன காட்டில் விட்டு
போனதாய்
நினைத்தாயா?

நீ இருக்கும் வரை
இருந்த ஈரம் 
உன் குழிக்குள்ளேயே
புதைத்து 
விட்டேன்
காய விடமலும்
காயாமலும்
காத்திருப்பேன்

கனவிலும் முகம் மூடாதே
முடியாதே என்னால்

இரவலாய் ஒரு இரவு

பகலை ஆதவன்
கூட்டிச்சென்றபின்
இரவை எப்படி
விரட்டுவது
என்ற போராட்டமே
மனதில்,

இரவை போக்கும்
வித்தையரிந்தவர்
யாரேனும்
உண்டாசொல்லிதாருங்கள்,

என் இரவின்
நீளம் கூடிவிட்டது,
நான் காணும்
விடியலை
இருளில் ஒளித்துக்கொண்டு
ஒளி விடமறுக்கிறது,

யாரேனும்!
அழைத்துச்செல்லுங்கள்
இந்த இம்சை இரவை
இரவலாயினும்
தருகிறேன்
இரவில்லாத
இடம் வேண்டும்,

இதழாய்ந்து

இதழ் அழகாய், அசைதழைக்க, இசைபாடி வண்டு ,

ஒன்றில்கூடும், ஒன்றில்மூடும், ஒன்றில் தேடும்ஒன்றில்

ஒன்றாய் ஆடும்மயக்க மயக்கமயங்க பின் மயக்க

வண்டு வந்துஉண்டு பறக்கவிந்தை விரல்பிடித்து வானில்பறக்க

வாரிசுமைதாங்கி வந்திரங்கும்அதனினம் தந்திரங்கம்,

பழகியதால் பறக்காது வண்டினி, உண்டபோதை விடாதினி

மறுமலர், மறுகூடல்மறு மூடல்மறு தேடல்மறு ஆடல்,
தேடி......,

குழலாய் ரீங்காரித்து வரும் திரிந்தேயிதழ் தேடி

சூல்நிலை ஆகிய சூல் கொல்லும் மலர் மூடி

விடாதினி அண்ட,அண்டையிதழ் தஞ்சம் இனி

ஆர்ப்பரிக்கும் வண்டினம்

பொய்யா இருக்கணுமே

அது பொய்யா இருக்கணுமே..,
இப்படியே எண்ணி
பதை பதைக்கும்
எண்ணத்தை சமாதனம்
செய்தபடி
கடைசி இருக்கையில்
நடத்துனர் விழித்தும்
விழிந்திரும்பாது
வீற்றிருக்கும்
அந்தபெண்


தனக்கு வந்த ஒரு
தொலைபேசி
சந்தேகமா இருக்கு
வந்து பார்த்து
செல்லும்படி
அழைப்பு வந்ததே
அதிலிருந்தே
மீளாது மீலாதுயரத்தில்

மருத்துவ வளாகம்
நீண்டூபோவாதாய்
பட்டது
நீளம் அகல மறுக்க
நிதானமிட்ட அடியெடுத்தாள்

முடிவாய் பிணவறை
மூடிய படி,
 பிண வாடை
நடுங்கும் கை, நழுவும்
கால் பள்ளமாய் பூமியில்
புதைந்ததாய்?

அகற்றபட்ட மூடிய ஆடையில்
இல்லை நினைத்து வந்தது
பெருமூச்சில் பீரிடல்
ஆயத்ததிலும் நிதானம்
இறங்க ,

இதற்க்கு வேர வேலையில்லை,/
யார் செத்தாலும்
எம்புருஷனான்னு
பஸ்சேரி வந்திரும்
பணியாளின்
விரட்டல்,

பலகாலமாய் இறந்த தன்
கணவன் முகம் காண
அழைப்பு வந்ததிலிருந்து
தன் பலக்கம் மாற்றாத
இப்பெண்
தேடிக்கொண்டிருக்கிறாள்
என்றுமே,

மிதவை



மிதவை எண்ணம் 
மீளும் அலை வண்ணம்
ஒதுங்கியே வழி விடும்
ஓட்ட பாதை

அலைமேல் தழுவலாய்
தாவல் ,
முட்டி மோதி முந்தி செல்லும்
எண்ணமிலா ஏகாந்தம்
காற்றில் கை கோர்த்து
கவிதையாடல்

பயந்து மூழ்காமை
எதிராய் எதிலும்
எதிர்ப்பாய்,
மோதி ஒதுங்கும்
ஒவ்வாமை

எதிர் நீச்சலில்
நிலையாய் நீந்தல்
கரையில் ஒதுங்கி
கையில் சிக்காது
வித்தக வித்தை

ஈரமாய் எப்போதும்
ஒட்டாது,
காய்ந்தே நீர்
காணாது,

போதை முதல் போதை

==================

முகம் சுழிக்கும் நீ
முன்னமே அருந்தாதிருப்பீர்

கோப்பையில் வழிந்தோடும்
போதை சுழற்சியில்
சிக்குண்ட முகம்

நா ருசி மாற
நா குலர நவின
சிந்தனை நாத வடிவமாய்

சில்லென்ற சில்லிப்பில்
கிர்ரென போதை
உண்மை தான் இதென
பொய் ஊற்றிய
கோப்பையாய்
தழும்பி தழும்பி

நேர் பாதை வழுக்கி
விழ ,
ஆகாய கால் பரப்பி
அடுத்த அடுத்த
அடிக்கும்
அகல கால் பறந்தே
விழும் ,

மேதை சிந்தனை
மென்மேலும்
நிந்தனை
குடியில் கூடி
கூடி கோபப்
பார்வை

குடி விலங்கு
குடி விளக்கி வைக்கும்
குடில் விட்டு
குடி மறக்க
குடி மறந்து போ\?

இதன் பொருட்டு தங்கிவிட்டது



மேடையில் எனக்கிட்ட
வேஷம்
பொருந்திபோனது
சிங்கப்பல்லில் சிரிக்க
மயில் தோகை
வருடலில்
வாய் கிழிக்க முடியாதே?

என் பீய்ந்த செருப்பில்
தங்கியிருக்கும்
முட்களில் முறிந்தது
அப்படியே
தங்கிவிட்டது.

ஞாபக உறாய்வாய்
பாதம் ஆணிக்கால்
அவள் ஆணைக்காய்
காத்திருந்த
கருணை இதன்
பரிசு,

எதிர் பார்ப்பு



இனி வராதே என்று 
சொல்லப்படும்
சொல் மறு
அழைப்பாய்
வரவேற்க்கும்,

பூ


வாடிப்போகவே
கோர்க்கப்படுகிறது
அழகாய்?

எப்போதுமே



கதவுகள் 
சாத்தியபின்னும்
காத்திருக்கும்
நம்பிக்கைகள்
சாத்தப்படாமலேயே.!

முன்னமே



விரவிக்கிடக்கும் மலர்
கசங்கிபோய்
கட்டில் முழுதும்,
இனி சூடபடாதறிந்தும்

நேற்றே சிரித்து?

தேடியபோது காணாது

அவர்கள் என்ன உன்னைபோலா!!!!
அவர்கள் இல்லாது போனால்??
அரற்றும் மனதை தேற்றுகிறேன்

அரவம் அற்ற காட்டில் ஆர்வமின்றி,.
அழைகிறேன் கைபிடித்தழைத்து
செல்ல கையாய் ,இருந்த
கை காணாது ,

கொட்டித்தீராத நீர்வீழ்ச்சியில்
குதித்து விளையாட
பயம் தலையில் விழுவது
நீரானால் நன்று
கல்லானால் ?

கனற்று பிதற்றும் மனம்
காணா தேடும் வீணாய்
மனம் கூனாய் போகும்
தேனாய் வருமோ இனிதாய்

அச்சம் விதைத்து  அச்சம் வித்தைத்து
மிச்சம் ஏதுமில்லை நீங்க
நீங்க வரும் நாளை நீங்காதிருக்கும்
நாள் வருமோ, இனி

பச்சம் பசேல் புல்வெளியிது
தொட்டுத்தெரிக்கும் பனி துளியில்
மின்னலாய் ஒரு கீற்று தெரிய
ஒளிகீற்றில் ஒழுகினம்
ஒழுகிடும் உண்ணதம்
பருகிட தருகிறேன்,

நடமுறையில் நட்பாகும்
நாட்கள் கடக்க உப்பாகுமோ?
தப்பாது ஒரு முறை கண்ணில்
படும் போது கேட்க வேண்டும்
என்னிடம் எது ஒப்பாது
விளகினார்,

காரிதுப்பாது விட்டேனே என
சொன்னாலும், கார்மேக துப்பலாய்
எண்ணி நனைவேன் தப்பாது.,



சோதரி

நாகரிக நாவண்மை
முடிவெடுக்கும் தூரிதம்
அங்க அங்கலாய்ப்பில்லா
ஆத்மார்தம்

பிடி இடம் கிடைத்தால்
மடியில் விழும் பழமாய்
பாச சோதரி அவள்

எட்டாதூரம் இருந்தும்
ஏட்டின் சாரம் அரிந்தவள்
என் பாட்டின் சோரம்
குறைப்பவள்

ஒரு வீட்டிர்க்கு விளக்கானாள்
பின் அவ்வீட்டீன் விலங்கானாள்
ஏவலுக்கும் தூவளுக்கும்
நன்றிக்கு நாயாய்யும்
கட்டிபோடா தாயானாள்

எரிக்கும் கொள்ளி வாய்
வார்த்தைகளில் தீயானாள்
நிதம் நேரம் மட்டும்
கிடைக்காது உண்ண
அதனாலேயே நோய்க்கும்
ஆளானாள்

திட்டியே தாபம் தேடும்
தீயவன் அவனின் கட்டிலில்
அசை பிணமாய் இச்சை
தீர தீர்வானாள்,


கடைசி கடைசியாய்

கடைசி முறை சந்தித்திபோது
கண்களும் சந்திக்கவில்லை
கைகளும் பிணையவில்லை
மெளனம் மட்டுமே
இழையோடியது

மனம் வேண்டியது
மண்டியிட்டு
மறுபடி சந்திக்கசெய்,?

உரையாடலும்
அதிகமில்லை
உள்ளத்தின் ஆட்டம்
தவிர்க்க,

உள்ளம் மட்டும் 
உள்ளே உறைந்துபோய்
உருகிவிடுமோ என
கண்ணீரில் அணை,

வெரும் பார்வையில்
உரமாய் நினைவுத்தூவ
விளைச்சலில்
அதிக லாபமீட்ட
வேரூண்டிய பயிர்ப்பு,

விடைபெற கடைசி நொடி
இறக்கவேண்டி
இருவரின் பிரார்த்தனை
பலித்ததா ? பழி பீடம்
இரு தலை கவிழ்ந்து,

வெளியேற மண்ணில்
புதைந்து பார்வை
வின் பொழியா மழை
விளைந்து விடுமோ
மறுபடி தேடல்
ஒடியே ,,,,?