என். மரணம்

என் என்பது
மரணத்தின் இனிஷியல்
நான் அதற்க்கே பிறந்தேன்.

கோவம் தனிய

ஒர் பார்வையோ
ஓர் பேச்சோ
ஒர் சைகையோ
ஏதேனும் ஒன்றை
உன்னிலிருந்து கண்டால்
தானே விலகிடும்..?

அகம்

புறம்சொல்லாத அகம்
என்னில் நீ
என்பதே  உண்மை.


தையல் நடனம்





அரங்கேற்றம்
மேடை இல்லை
மேள தாளமில்லை

தையல் இயந்திர
கட கட ஜதியில்
உன் அபிநயம்,

தை தைக்கும்
விரல்
முன் பின்
பதம் முந்தும்
பாதம்,

நவரசம் தாங்கும்
நாற்காலி
ரசித்து,

நடு நடுவே
நளின
சிருங்காரம்,
நாக்கில் தடவும்
நூல்,

ஊசியில் நூல்
கோர்க்க
நெற்றி திலகமிடல்
நேர் பார்த்தலாய்,

தாண்டவமாய்
ஒரே மடிப்பு ஒரே மூச்சு
ஒய்யார ஓட்டமாய்
வழிந்தோடும்
துணியுருகி,

தீம் ததிகிட தீம்
ததிகிட
தீமென,,

இடையிடையே
அனிச்சையாய்
அங்கபிரதட்சம்
தலை சொரிதல்
ஆடை
சரி செய்தல்,

உன் நடனம்
சரி பார்க்க
நானிருக்கேன்

நாள் தோறும்
தை தை
மனதை
தை தை தை...

உனக்காகவே,


உண்மை சொன்னால்
உனக்காகவே இருக்கிறேன்
பொய்யாயினும்.