மூடிய கத


மூடிய கத 
========

எண் சாண் தான்
எண்ணிக்கையில்
என் சாணும்
எட்டிருக்காது
எட்டை,?

ஈரெட்டில் விழும்
கட்டில் தொழும்
தொட்டில் அழும்

பின் ,
கட்டில் இடும்
சில எட்டில் தொடும்
இடுகாட்டி
எண் அடி
எட்டில் வெட்டி
கொட்டினால்

முட்டி முனகினாலும்
தரையிட்டு மூடிய
இக்கட்டை
எட்ட முடியாது
ஒரு கட்டை?

,,,,,த்தானை?



மின்சாரம் போனபின்
அணைக்க முடியவில்லை,
வந்துவிட்டால்??.

தினமும் தொலையும் கனவு -


கனவை தொலைத்து
தலையனையடியில்
தேடுகிறேன்,
காலை
கனவை
கிழித்துபோட்டது,

யார் கண்டாரோ
என் கனவை?
கண்ணாடி கடல்,
கையில் வானவில்,
மதுவிலாடும் வண்டு

கடைசி முத்த கரிப்பு,
எச்சில் தொடும் ஏகாந்தம்
இதழ்பிரியா காந்தம்
கட்டிபிடித்த தடம்,

களம் மீறிய நழுவல்
நழுவல் நகர்த்திய நகம்
நகம் காட்டிய கீறல்
கீறல் காட்டும் அடையாளம்
மூடி திறக்க முன் ஆணை
முடிந்த முந்தாணை,

முடிந்த காதை போர்வை
போர்வை மீறும் தனல்
தனல் தணிக்கும் தகிப்பு,
தோய்ந்துயரும் தூக்கம்
தூக்கத்தில் வந்த
கனவு,

கனைவை தொலைத்து
தலையனையடியில்
தேடுகிறேன்,
காலை
கனவை கிழித்துபோட்டது,

தினம் ஒரு தந்திரம்



தேசபக்தி,
இன்றைக்கு
யார் வெள்ளையன்?

கதர் ஆடை,
கரை வேட்டி
தோளில் துண்டு.

கடைசிவரை



நமக்குள் உண்டான
நிகழ்வுகளுக்கு 
பெயரில்லை,

நீயோ?
நானோ?
இருக்கும்வரை
பெயர்வதுமில்லை?

கெட்ட பின் ஞானம்


நீ...,
பிடிக்கவில்லை 
என்று
முன்னமே
சொல்லியிருந்தால்
காசும்,
காலமாவது
மிச்சம் இருந்திருக்கும்,

இரண்டையும் தொலைத்து
வாழ்க்கைக்கு
வெளியே தேடுகிறேன்
எதையோ?

ஆசையில்.......


கடைசிவரை கூட இருப்பேன்
என்றாய்!!!
எவன் கூட
என்று சொல்ல
மறந்துபோனாய்?
எல்லா.........

வார்த்தைக்கு வார்த்தை உம்,,
போடுவதுன்னியல்பு

சம்மதம் இல்லாத வார்த்தைக்கும்
கொட்டிவிட்டாய் ஒரு உம்,,

ஏமாற்றத்திற்க்கு உதா(ரணம்)
ஆனேன்?

நிகழட்டும்....?


யாருக்காவது என்னை பிடித்திருந்தால்
அவளிடம் சொல்லுங்கள்,

யாருக்காவது என் குரல் பிடித்திருந்தால்
அவளிடம் சொல்லுங்கள்,

யாருக்காவது என் முகம் பிடித்திருந்தால்
அவளிடம் சொல்லுங்கள்
,
யாருக்காவது என் கவிதை பிடித்திருந்தால்
அவளிடம் சொல்லுங்கள்
,
யாருக்காவது என் அன்பு பிடித்திருந்தால்
அவளிடம் சொல்லுங்கள்,

பொறாமை கொண்டு என் பக்கம்
ஒரு முறை திரும்பட்டும்
அவள்,

ஜன்னல் பூக்கள்

ஜன்னல் பூக்கள்
=============

தெருமுனை 
திரும்புகையில்
ஜன்னல் திறக்கும்,

வீடூ கடக்கையில்
இரு
கண்கள் துடிக்கும்,
திரும்பும் செய்தி
யார் தருவர்
உன்னிடம்!!

பட்டுகண்ணம்
தோய்க்கும்
ஜன்னல்
கம்பியில் ஈரம்
காய்வதாலா?

சிட்டு குருவிகள்
இரண்டு
நம் கதை பேசும்
மொழிகள்
அறிந்ததாலா?

சமிஞ்ஞை ஏதும்
தந்ததில்லை
வரும் சமயம் ஏதும்
அறிந்ததில்லை,

பிறகெப்படி பூக்கிறாய்
ஜன்னலில்,
சமயோகிதி நீ..?

வந்தால்!! நொந்தான்???


சந்தேக கிளி
சிறகு விரித்தால்
வல்லூறு,

சந்தேக கணவன்
கண்ணில் படுவதெல்லாம்
சாக்கடை,

சந்தேக
வைக்கோல்
தீ பந்த உறவு,

சந்தேக
நடை பிண
வாழ்க்கை,

சந்தேக விளக்கு
தீ இல்லாது
எரியும்.

சந்தேக
ஜன்னல்
கம்பியில்
விந்து விழும்,

சந்தேக
இரும்பு திரையிலும்
காற்று நுழையும்,

சந்தேகம்
தேக
உயிர் கொல்லி,

சந்தேக நோயில்
குழந்தைகளும்
போகர்களே??

சந்தேகம்
இரு பக்க கூர்
வாள்,

இந்நாளை சந்திக்க...


கீழ் வரும் ஒரு நாள்,
ஆட்டம் முடியும்
துணைக்கு
தூணைபிடித்தெழும்பும்

வயதுன்னை வாட்டும்
பாய்ந்த
வாய்க்கால்,
வரப்புகள்,
பயமுறுத்தும்,

தட்டில் சோறு
கை கொட்டி விழும்,
மெல்லும் முன்
உனதிலை எனவாகும்,

ஊன்றுகோல்
ஒரு கால்
வேண்டா பேச்சு
வேண்டா பார்வை
தீண்டா தேகம்
வேண்டும் ,

தரையிருக்கிறோம்
என அறியா ஆணவம்

தரை கூனி நடக்க
புரியுமே அத்தினம்,

ஆடி ,ஓடி,தேடி
சேர்த்த காசு,பணம்
செங்கல்,சிமெண்டும்
இருப்புமாய்,
விரும்பினாலும்
திண்ண இயலுமா?

புழுதிபட


உன் மெளனம் உடைபட்டு
வெள்ளபெருக்காய் 
வார்த்தைகள்
பாய்ந்துவரும் என
காத்திருந்தேன்?

உன் குரல்வலை
ஒரு கைபிடிக்குள்
கசங்கியதை
காண மறந்தேன்,

உன் மெளனம்
குடையென
விரியவும் துளிக்கூட
படாது தப்பிக்க தான்
வந்தேன்,

காற்று பிரட்டியதா?
காலம் பிரட்டியதா?
குடையை ,
தொப்பாய்
நனைந்தேன் நாணம்
கெட்டு,

உன் மெளனம்
கதவாய் திறக்க
தாழ் ஒலியில் மசி
சப்தமின்றியே,

செவி சேர்க்கும் காற்று
மெளனமாய் இன்று
வாயசைவை
காணத்தான் கண்
ஏது ஒளி பிடுங்கிய
பின்,

இறவா பகல்


இரவு தூங்க
நான் காவல்,
பகலில்,
,
நான் தூங்க
இரவு காவல்
இரவான பகல்,

நான் காக்க
இரவில் இல்லை
இரவு,?

நான் தூங்க
பகலில் இல்லை
இரவு,

பொழுதுபோக்கி


பொழுது கழிக்க

பொழுது கழிந்து

பொழுதில்லாது

போன பொழுது??

ஒரு நாள்


கனவிற்க்கான
பதிலை காலத்தில்
தேட......

கனவான காலம்?

தேகம்,,,,


ஓட்டை பாத்திரம்
ஒழுகாத
உயிர்!!!

படைத்தவன்.....


அவன் மேல் கோபம்
கொள்கிறோம்
அவன் கோபம்
எதுவென்றரியாமல்

கோபத்தில் வீசி
எரிந்தாலும்
அவன் படைப்பின்
உள்ளே தான்,
வீழ்ந்து கிடக்கபோகிறோம்

முகமன்


தோல்விகளை 
தவிர்க்கிறேன்
வரவேற்க்கும்
மாலையுடன்
எதிரே!!!!

வெற்றிகளை
கேட்கிறேன்
முகம் காட்டா
தூரத்தில்
எப்போதும்,???

இரவானதும்

இரவானதும்
---------------------

இரவானதும் ,
இளகிய
முரண்கள்,
காலை முறுக்கிய
மீசை திமிர்
மழுங்கியது
மயிராய்
,
இரவானதும்,
முடியாதென வெளியேறிய
வார்த்தைகள் உள்ளுக்குள்
அர்த்த பிழையில்
மண்டியிட்டு

இரவானதும்,
எதிராய் செயல் படுகிறாய்
கேட்பதில்லை
நான்
சொல்வதை
எதைத்தான் கேட்கிறாய் ,
இதைமட்டும் கேட்க,

இரவானதும்,
பூர்த்தியாக்க படும்
தேவைகள்
சத்திய பிரமாணம்
சாட்சியில்லாது
இருப்பதால்,

இரவானதும்,
அதை விடு நாளை
பார்க்கலாம்
அவசர பிரளயம்
அடங்க இருக்கும்
புயல் அமைதிக்கு,

இரவானதும்.
முகம் திருப்பி படுத்தல்,
குழைவு கோபத்திற்க்காண
தூபத்தின் வாலிலிருந்து
ஆரம்பித்து
முகம்
திருப்ப செய்வதற்க்குள்,
கதிரவன்
கைபிடித்தெழுப்பும்
சமயம் வந்து தொலைகிறது,

கூட்டின்.........


கதவு திறக்க 
பறக்க
படபடக்க
சிலுப்பியது
இறகை,

மெல்ல நடந்து
மேலும் கீழும்
பார்த்து

கிந்தியது மனம்
பறக்கட்டும்
சுதந்திரமாய்,

திரும்ப
உள்ளுக்குள்
நடந்தது
வேகமாய்
மனம்
பறக்க

வாசல் வந்தது
குதித்தது இயல்பை
மறந்து,மனம்
கொதித்தது
பழக்கியது
பாவம்,

அவளுக்கும் அவனுண்டு



ஊமை கிழச்சி அவள்
பொடிமட்டையில்
வாழ்க்கை,

யாரிடமும் கேட்டதில்லை
பணம் ,
கேட்பது பொடி,
போராடி கேட்க
புதிர்போல்
விரித்தால் பொடிமட்டையை

அவன் ஒரு நாள்
பழகினான்,
அவன் போனதும் பழக்கம்
போகவில்லை,

சுவாசிப்பில் அவனை
திணிக்கிறேன்,
யாசிப்பில் அவனை
நினைக்கிறேன்,

போட்டாள் ஒரு போடு
பொடி மணத்தோடு,
சைகையில் அவன்
மடியென
திண்னையில்
சாய்கிறாள்,
திடீரென்று...... 

இறப்புகளை கண்டால்

வயதை எண்ணுகிறது,

நல்லது மட்டும் செய்ய

எண்ணுகிறது மனது

புதைத்து முடிந்தால்

எண்ணமும்

புதைந்து போகிறது,

இந்நாளை சந்திக்க



கீழ் வரும் ஒரு நாள்,
ஆட்டம் முடியும்
துணைக்கு
தூணைபிடித்தெழும்பும்

வயதுன்னை வாட்டும்
பாய்ந்த
வாய்க்கால்,
வரப்புகள்,
பயமுறுத்தும்,

தட்டில் சோறு
கை கொட்டி விழும்,
மெல்லும் முன்
உனதிலை எனவாகும்,

ஊன்றுகோல்
ஒரு கால்
வேண்டா பேச்சு
வேண்டா பார்வை
தீண்டா தேகம்
வேண்டும் ,

தரையிருக்கிறோம்
என அறியா ஆணவம்

தரை கூனி நடக்க
புரியுமே அத்தினம்,

ஆடி ,ஓடி,தேடி
சேர்த்த காசு,பணம்
செங்கல்,சிமெண்டும்
இருப்புமாய்,
விரும்பினாலும்
திண்ண இயலுமா?

எடுக்கவியலா

தலையணை உறையில்
திணித்துக்கொண்டிருக்கிறேன்
ஞாபகங்களை,
பஞ்சாய் பறக்கிறது,

பிதுங்களாய் சில ,
பிரித்த வெளி சில,
ஈரமாய் சில,
ஈனமாய் சில,

தலையை தலையணை
ஆக்கியது,
என் மீதுறங்கும் படுக்கை
வெளியுலாவும்
தூக்கம்,

நான் சுருட்டி வைக்கப்பட்டேன்
ஒரு மூலையில்,
உதறினால் கொட்டலாம்
நானாய் விடுபட,

காகித கப்பலின் நங்கூரம் இவர்கள்

மேதமை பூச்சு அவர்களுக்கு
ஊன்றியிருக்கும் செங்கோலில்
கரையானின் வீடு
வீழ்ந்திடும் நாள் இல்லை
நாள் பட நகர்த்த நினைக்கும்
ஆளுமை எனும் அகங்காரம்,

ஆற்றலில் தோற்றாலும்
மலுப்பலில் வெள்ளாமை
பாலையில் ஏர்கட்டி
முப்போகத்திற்க்கு உத்திரவாதம்
வாதப்பேச்சு,

சவடால் அடிவருடிகளின்
அறியாமையில் பயிற்சி,
மேலிருப்பை எப்போதும் அறியாமை,
கீழ் தள்ளப்படுவதில்லாமை
எனும் கீழ் எண்ணம்,

காகித கப்பலில் நங்கூரம்,
நம நமோவென பாடல்
வேணும் இவர்களுக்கு
நமச்சல்,

முன்னம் இருந்தவன் சொல்,
இல்லையானால் பின்னம் வரும்
சொல், இவர்களுக்கேது சொல்,
பசிக்கு வானம் குடிப்பதாயும்
தாகத்திற்க்கு மேகம் தருவதாயும்
கூக்குரல்,

ஆடை விளக்கி மலம் கழிக்கும்
நீ..நான் வேறு எவ்வாறு?
இவர்களுக்குள்ளும் இயலாமை
இருந்தும் சொல்ல இயலாமை,
அதிகாரத்தில் ஆட்படுவதால்?

இவர்கள் இடம் நிரப்ப படுவதில்லையாம்
ஆம் ,இவர்கள் இடம் நிறம்ப பெருவதில்லைதான்,
முழுதாய் இருந்தாலொழிய,
வான் பறக்கும் அதிசயம்
கீழிருந்து புறப்பாடு மறந்த!!!

கடைசிவரை

நமக்குள் உண்டான
நிகழ்வுகளுக்கு 
பெயரில்லை,

நீயோ?
நானோ?
இருக்கும்வரை
பெயர்வதுமில்லை?

காதல் பிசாசு

மரணமானதை மடியிட்டு
தாலாட்டி சீராட்டி
ஏது செய்ய?

கடந்த வழியை தோளில்
சுருட்டி போக
ஏன் கடக்க வேணும்?

வெள்ள ஓட்டத்தில்
காய்ந்த மணல்
காண்பதெப்படி?

மோதி சென்ற அலை
திரும்ப மோத
யுகம் ஆனாலும்
பயனேது?

ஓடிபோன பிள்ளை
ஒன்பது வருட காலத்தில்
அதே உடை தரித்திருக்கும்
என்ற ஆசை ஏன்?

காதல் சொட்ட சொட்ட
வழுக்கி விளையாடிய
வாழ்க்கை போயும்

சொட்டிப்போன காதல்
கேட்டு காத்திருப்பில்
கால விரயம்

தெரிந்தும்,
அதே நினைவில்
மனம்????

ஒப்பீடு

வழிந்து கொண்டிருக்கும் 
நீர் திவளைகளில்
பிம்பம் பிரதிபலித்து
சிந்திக்கொண்டிருக்கிறது
நினைவுகளை,

விரலிடுக்கு வழி மறைக்க
வருடிவிட்டு செல்லும்
நீராய் எப்போதும்
நீ ,,?

தரை தொடும் துளி
ஆவியாய் பறக்குமுன்
பற்ற நினைக்கும்
தரையாய்
காய்ந்தே நான்?

ஓட்டை பாத்திரம்
சேமிக்க முடியாது
இருந்ததை எண்ணி
வழிந்த வாசல்
மூட இயலாது
திறந்தபடி?

கொண்ட கொள்கை

துரத்தும் துன்பம்
தூரத்திலும் துயரம்
இருப்பதிலும் வலிகள்
இயக்க மறுத்தாலும்
கடக்கும் நாட்கள்

தூக்கம் ஒரு விரயம்
தூங்காதே இனி
தட்டிக்கொடுக்கும்
நம்பிக்கையில்
நகரும் பாதை

நடுக்கமான நிகழ்வு
நாக்குளரும்
நதி வற்றிய வண்டலாய்
ஏங்கும் ஏக்கம்

தொடும் உச்சி தூரம் இல்லை
அருகில் இழுக்க
கயிரொன்று தரித்தேன்
சிலந்தி வலை
நூலில்

சிக்குண்ட ஈசலாய்
விழும் மனமே
வீசிவிடு விழனும்
மாங்காய் இல்லை
கல் விழும்
தீரும்......?
நாளும்  அருகே

இன்பம் மட்டும் போதுமாய்

அடர் வாழ்க்கை
அங்கொன்றும்,
இங்கொன்றுமாய்
இலகுவாய் நகர்த்தி
இடர் விழாது ,

இன்பத்தேன் வேண்டி
கலைக்கும் கூடு,
கொட்டும் தேன்
குடம் நிரம்ப குடிக்கவா
முடியும்,குமட்டும்

ஏன் கலைத்தல்?
சொட்டும் தேன்
சொற்ப காலம்,
காத்திருப்பில்
அவசரம்,

காண மறையும்
கற்பனையில்
நுழைத்து,
அங்கலாய்க்கும்
அவசியம் ஏன்?

எல்லாம் விதி வழி
எனில் வழியில்
மிதியடியாய்
கிடக்க மிதித்து
செல்லும் மிருக
எண்ணம்,

இப்போதே

மழை தூறி முடிந்த காலை ,
குளித்து துவட்டா 
மங்கை கூந்தலாய்
விரிந்திருக்கும் தார் சாலை
சொட்ட சொட்ட

நெடுஞ்சாலை,
இருசக்கர
வாகனம்,
முகத்தில்
மோதும் சில்லிப்பான
காற்றில் குத்திட்டு
நிற்க்கும் மயிற்கால்கள்,

வயலோரம்,
கோரையின்
தலையில் கண்ணாடி
முண்டாசு துளிகள்,
கதிரவக் கைகள்
தடவும் வழுவிலந்து,

இது போதும் இப்போதே
இறந்து போகவேண்டும்
இயற்கை அணைப்பில்
என்னை மறக்க
இறக்கை இருந்தால்
பறக்க ஆசை,

நல்லது இல்லை இவை

அவர்கள் சொன்ன போதெல்லாம் 
வீசி எரிந்தவைகளை
இன்று தேடுகிறேன்,
மண்ணோடு மண்ணாய்
மக்கிபோய்
மண் வளமானது,

மனம்???

முகநூலில் இப்பல்லாம் எழுதுவதைவிட மற்றவர்கள் எழுதியதை படிக்கவே யப்பா....

கூட்டத்தில் துறுத்திக்கொண்டு
தெரிய 
அடையாளமாய் ஒர்
கொம்பேனும் வேணும்,

சம நிற, மாற்ற பகரமாய்
வெண்நோயேனும்
வேணும்,

அப்பன்,பாட்டன் அடையாள
அட்டை நகலிலாவது
நன்றறிந்தவர் எனும்
நற்பேராவது
வேணும்,

மணக்கும் மன்றத்தில்
வீச்சமாய் வித்தியாசம்
காண வேணும்,

எதில் எரியப்பட்டலாலும்
மீண்டு எழும் மனம்
மயங்காதிருக்க
வேணும்,

யார் காண வேணும்
யாரை காண வேணும்
ஒரு கண் என்னை
பார்க்க வேணும்,

சகித்துக்கொள்

என் தோளிலும் சில மூட்டைகள்
வழியெங்கும்
சுமைதாங்கிகள்
பாதைகள் கரடு முரடாய்
இருந்த போதெல்லாம்

நம்பிக்கை பாதகைகளில்
குத்திருக்கும் முட்களின்
நெருடல் அவ்வப்போது,
புது பாதையோ!
புது பாதைகைகளோ!!
மாற்றுவதில்லை,

நெருடலின் சுகத்தில்
பழகிபோன பயணம்.
புது உத்வேகம் இன்னும்
நிறைய முட்களை
கேட்கிறது ,
இன்னும் வேகம்
போக,

அ கதி,முகாமில்? முகமில்லை

பக்கம் பக்கமாய்
புரட்ட வேதனைகளில்
நெளிந்த நினைவுகள்
வாழ்க்கை புத்தகத்தில்

எச்சில் தொட்டு
திறுப்பும் ஒவ்வொரு
பக்கத்திலும் ஏது ஈரம்?
திருப்ப தடவிய எச்சில்
தவிர!

வரிசை இல்லாத
அத்தியாயங்கள்,
அநியாயத்தின் பிடியில்
இருந்த எம் மக்களுக்கேது
அந்த நியாயம்,

நீலக்கடல் தாண்டினோம்
கண்ணீரை கடலாய்
சீந்தினோம்,
தாண்டியது எம்மை
விட்டு வாழ்க்கை,

எல்லா அவயங்களும்
ஒன்று போலிருக்க
எமக்கன ஒரு பேர்
அகதி,
யாம் மரணமான
பின் எழுவோமா?

அவயங்கள் காப்பாற்ற
அன்றேறினோம் ஓடம்
அவை இங்கே காப்பாற்ற
படுமா,?
சீண்டலில் இழக்கிறோம்
எமக்கிது ஒரு பாடம்,

நாடு பெயர்ந்தால்
அகதி,
அகதி பெயர்ந்தால்
நாடு கிடைக்குமா?

நலம்பெற

எனக்கென்று ஒன்றும்
கேட்பதில்லை,
என் பிரார்த்தனை
எப்போதும் உன்
நலனுக்கே?

காத்தாயி,மகள்

பேய், பிசாசு அண்டாது
காக்க வேண்டி
கொத்தாய் வேப்பிலை
சொறுகி
வழியனுப்பும் தாய்க்கு
தெரியாது?
தான் வாக்கப்பட்டதே
ஒரு பேய்க்குதான்
என்று.

பெயரச்சம்

உண்ணும் உணவு
பருக்கையிலும்
உன் பெயர் 
பொரித்திருக்கும்,

சிந்திய பருக்கையில்
ஈ,எறும்புகளின்
பெயரும்
இருந்திருக்கும்,

ஒவ்வாமையில்
வெளியானால்
உன் பெயர்
அதில் இல்லை,

என் தோழி ஒரு தீ

கேள்விக்கு? பதிலும்!!

பதிலாய்!! ஒரு கேள்வியும்??>

கேட்டு கொள்ளும் தோழி,

தொடர்பில் இல்லையென்றால்
அலைபேசி,

தொடர்பிருந்தால் ஒரு
தொடர்பேசி,

கோபத்தில் அவள் தீ,
பாசத்தில் நீரில்
மூழ்கிய தீ,

பார்த்ததில்லை முகம்
அதனால்
ஒன்றுமில்லை சோகம்

தனை காட்ட கண்ணாடி,
எழுத்தாய் எதிரே,

எழத்தாய்ந்து எடுப்பாள்
பிழை,

இல்லை
இப்போது பிழை

எடுத்தே விட்டாள் அது
அவள் கலை,

தூரத்தில் பறக்க இறகு
தந்தாள்,

துரத்தி வருவேன் என்றா?
இறகொடித்தாள்!!!

நட்பில் அவள் சிகரம்
நட்பில் இது வரை
தந்ததில்லை அவள்
கரம்,

இருந்தும் அவள்
ஒருத்தி
பற்றவைத்த தீ
நட்பாய் படர்கிறது
அணையாது,