நட்பு பாராட்டி

நல்ல நட்பு நாச்சுவை
கவிதை ரசித்தல்
உண்மை உடைத்தல்
‘கேட்டமை கொட்டுதல்
மாதின் மருத்துவ குணம்
குன்றாது ஆயுதமெப்போதும்

இடும் கையெழுத்து
ஊசியாய் ,துணைவரும்
தூணாய் எப்போதும்
தூயவருமானம் தரும்
ஒரே தொழில் ,

உயிர்காக்க தொட்டரிதல் கருவியோ
கழுத்தை சுற்றி
வலம் வரும் வெள்ளுடை
தாதிகளின் புடைசூழ்,

சிறு பிள்ளைகள் இரு
செவ்வான கற்பகதரு
இரவில் வேளை
இற விலாதிருக்க,

இனிய நட்பாய்
இன்றல்ல நேற்றல்ல
இனி எப்போதும்
தொடரும்.....

யாது செய்வாயடி

நீ .....
மறக்க ,மறைக்க செய்யும்
யுத்திகள் சிரிக்கத்தான் 
முடிகிறது,

முகம் திருப்புகிறாய்,
முன்னே கண்ணாடியிருப்பதரியாது,

வசை பாடுகிறாய், வாயொழுகும்
தேன் இசை என்பதரியாது,

சப்தம் இடுகிறாய், யாரையோ அழைத்து,
உன் காதிலாவது எட்டியிருக்குமா? சப்தம...

வாசல் கதவை சாத்துகிறாய் அறைந்து
வெளி செல்லாது உள்ளேரி.,

பரிசுகளை தூர வீசுகிறாய் முதுகின்
பின் விழுந்தவைகள் வீசத்தெரியாது

கோபப்பார்வை உனக்கு கொஞ்சமும்
பொருத்தமில்லை வீணாய் ஏனோ,

மிரட்டிப்பார்க்கிறாய் உன்னை மீரி
வரும் சிரிப்பை அடக்கி,

கடைசி அஸ்திரமாய் கண் சிவக்க
காட்சி தரப்போய் கொஞ்சும் கண்களில்

குளமென கண்ணீர் ததும்ப கைகூப்பி
காரணம் யாதென் கேட்க,

காதலடி இது,!

பராபரமே,

உன்னைத்தவிர வேரொன்றும்
அறியாது,
பாரா முகமேன்

நீ வாசிக்கும்

என் எழுத்தை நீ
வாசிக்கும்
ரகசியம் கசிந்து

எழுதும் கோல் மசிய
மறுக்கிறது,

விரல் இடையில் தங்காது
தவிக்கிறது,

போதை மை தலைக்கேரி
எழுத்தில் தள்ளாடி,

நடை பிறழ்ந்து விழும்
வார்த்தை குழரலாய்,

நேர் செல்லும் வரி இடரி
அடுத்தவரி பிடித்து எழும்,

எழும் வரியில் ஆடை
விலகி நிர்வாணம் நிற்க்கும்,

மூகம் மூட வெட்கம்
வெளிச்சம் போட்டு,

எழுதி ஓடு எண்ணத்தில்
ஒரே புள்ளியில் அகலாது,

புள்ளி குழியாய் ஊறியபின்
போதை இறங்கும்,

தெளிவாய் எழ ,
மறுபடியும் ரகசியம் கசிந்த செய்தி .

என் எழுத்தை நீ வாசிக்கும்,,

யாரும் இல்லா தேசத்தில் போர்

உன் ஊடுறுவல் கண்டும்
காணாது விட்ட கண்களுக்கு
சஸ்பெண்ட் உத்திரவு
தண்டனையுடன்
இமை திறக்காதிருப்பதே,

உள்ளே கலோபரம்
கனவெல்லாம் தீவிரமாய்
குண்டாய் வெடிக்கும்
எண்ணச்சிதறல்
ஆங்காங்கே,

விட்டால் ரத்த நாணங்களிலும்
உன் ஆட்சிபிடிப்பு
அரங்கேர கூடும் என்று
எல்லை முழுதும்
உஷார் நிலையில்,

கோட்டையில் உன்
நினைவுக்கொடி நாட்டி
எல்லை மீறிவிட்டாய்,
உன் ஆட்சிக்குட்பட்டே
செயல்கள் அனைத்தும்,

இமை திறந்பின்
அகதியாய் உன்
மடியில் நான்,
அன்னிய பூமியல்ல
கன்னியின் பூமி,

மெளனம் அவிழ்

ஏன் அமைதியாக இருக்கிறாய்
மீண்டும் பற்றிக்கொள்ளும்
என்றா?

எல்லாம் சாம்பலானபின்
எதை எரிக்க மெளனம்
பூக்கிறாய்,

தீ கங்கொன்று உள்ளே,
வீசிவிடாதே
பெருமூச்சிட்டு,

எதைப்பிடித்தேனும்
எரிந்து தொலைத்துவிடும்,

மெளனம் அவிழ்,

சமாதானமை

யாரோடும் ஒப்பிட
மறக்கும் 
முகம்,

முகமூடியில்
துருத்தி கொண்டிருக்கும்
நிஜம்,

எதை சுமந்தாலும்
பின் அதே
நமை சுமக்கும்,

வெளிச்சம்
கண் திறக்கும்,
இருட்டை உடைக்க
திறந்திருக்கணும்,

அது போல், இதுபோல்
அல்லாது
உன் போல்
ஆகட்டும் ,

எழுந்துறங்க

நேற்றைய 
கனவுகளை 
தலையணையடியிலும்
பாயின் சுருட்டலிலும்
விட்டு விட்டே,

இனி கணமான நிஜத்தில்
நீந்த சில கனவுத்துடுப்புகள்
அசைத்தபடி பயணம்

முன்,பின் அசைத்தசைத்தே
இன்றை கடக்க,
இடையில் மலை.,பள்ளம்,
மேடு சந்தித்தே,

நாளை கனவுக்குள் நுழைய
விரித்தும் புதைந்தும்
பழகிய வழியில்

தப்பித்தேன்

என் வீட்டருகே 
உன் வீடு
இருந்திருந்தால்!!

என் அம்மாவின் 
தம்பியாய்
உன் அப்பா 
இருந்திருந்தால்!!

என் அக்காவின்
தோழியாய்
நீ இருந்திருந்தால்!!

சுவற்று சண்டையில்
வெறுக்கும் பக்கத்து
வீடாகவோ,?
ஓடி போன அம்மாவின்
தம்பியாகவோ,?
திருடித்திண்கும்
அக்காவின்
தோழியாகவோ,?
இருந்திருக்க
கூடும்,

ஜாம்பவான்களும் நானும்

யானையின் 
கால்களுக்கிடையில்
எதையோ 
தேடித்திரியும்
எறும்பாய்,?

நம் கவிதை என்பது

சிலேட்டில்,
எதையோ 
கிறுக்கிக்கொண்டிருக்கும்
புதிய மாணவனாய்
எப்போதும்,

மேடை நாணும்

ஒத்திகையில்லாத காட்சிகள்
அரங்கேர விழிபிதுங்கி 
வசனம் மறந்த நடிகனாய்\
விக்கித்தி போகிறேன்,

அட்டை கத்தி காட்டி
மிரட்டுவாய் என கதை இருக்க
குறுவாளில் குத்திட்டாய்
துளியாய்
இரத்தக்கசிவு,
நிஜ நடிப்பென
கைத்தட்டும் சுற்றம்

நிஜமாய் நடிக்க மேடையில்
திரை ஏன் தொங்க விட்டாய்
எதை மறைக்க ,
நாடக காட்சி மாற்றம் வரும்
நீ நாடகத்தை மாற்றுகிறாய்,

யார் நடிப்பாய் நீ நடிக்கிறாய்
என் காட்சியில் நீ இருந்தால்
நான் எதற்க்கு,
மூக்கில் பந்தொன்று வை
பபூனாய் நானாவது
சிரித்து கொள்கிறேன்.

பல வண்ண விளக்கொளியில்
உன் முகம் மாறாது விளக்கு
வேணுமானால் மாறலாம்
விதியில் உச்சகட்டம் மரணம்
மரணத்தின் உச்சம்,
நீ மாறி கொண்டே இருப்பது,

பார்வையாளானாய் வந்த நீ
என்னை இயக்குகிறாய்
பாவம் எதிர் வரிசையில்
எப்போதும் நான்
காலியான இருக்கை போல்,

இதை நீ படிக்கிறாய், இருந்தும்

நான் வடிக்கும் 
கண்ணீர் கண்டு

என் 
தலையனை ஈரம் 
காண்பிக்கிறது!!

ஏனோ கேட்டேன்

வாடகை வீட்டில் அடிக்கும்
சுவற்று ஆணியாய்
மெதுவாய் உன்னிடம்
கேட்கிறேன்,

நீயோ வாடகை வசூலிக்கும்
வீட்டுக்காரியாய் 
வீரிடுகிறாய்.

பாராட்டு முதல்

என் தோளை 
சுற்றிக்கொள்ளும்
உன்கைகள்,

கொள்கை

பாதசாரிகளின் கவனம்
முழுதும் வரிசையில்
முதலிடம் தேடி,

கதவுதிறக்குமுன்
காத்திருக்கும்
மக்கள் வெள்ளத்தில்

திறந்த பின் கடவுள்
வெளியேறி
ஓடியே போனார்,

எழையின் சிரிப்பில்
ஒளிந்து கொள்ள,

இடைத்தரகன்

தலை,கால்
புரியாத நிலையில்
வளைக்கும்
கை.

நிலாவே

உன்னை சுட்டிக்காட்டி
உணவூட்டினாள்

பிறகு உன்னைப்போல்
தனியே தவிக்க 
விட்டுபோனாள்,

உன்னை சுட்டிய விரல்
உனக்கு பிடிக்காதா?

இதோ உன்னை சுட்டுகிறேன்
என்னை எடுத்துக்கொள்.

தனியே இருக்க ஒளி
யார் தருவர் உன்னைபோல்
உலா வர?

கனவி;ல்

ஒரு கனவு
அதே ஆடையில்
அதே புங்கை மரத்தடியில்
பெயர் செதுக்க
பெயர்க்கிறாய்
பட்டையாய் ,

இக்கனவில் இரண்டு
கோடாரிகள்
ஒன்று பிடி இல்லாது
பரிசென தர

மறுப்பாய் விலகுகிறேன்
காட்சி மாறுகிறது
கடலில் .
ஓடம் மேல் நீ
அழைக்கிறாய்
ஓடம் ஓட்டை என

அலை இரைச்சலாய்
சில்லிப்பு
குடிசை ஒட்டையில்
வழியும் நீர்
போர்வை மீறீ
முகம் தொட்டு

துடைக்கிறேன்
கனவை ,

பரிசாய் புன்னகை

வார்த்தைகள் 
ஒத்திகை
பார்த்து 
அரங்கேறும்

நீ தரும் 
பரிசு
புன்னகை,

உயிரில்லையா ?வளர்கிறதே

கதிரை
தலை கோதி
கழுத்தில் அறுக்க
தரையில் தட்ட
தலை வீழ்ந்து

உதிரம் போராய்
சேர திரித்து
கயிறாய்
திமிர திமிர
கட்டி களம்
முழுதும்,

வீழ்ந்த தலைகள்
விசிரி வேண்டா
தலைகள் தள்ளி

மூட்டையில்
தலைகள்
ஒரு தலை
சுமந்து?

விசிறி


சூசக வார்த்தைகளின் 
மொழிபெயர்ப்பை
கண் வீசிறியில்
அத்தியாயம்
அத்தியாயமாய்
புரட்ட
பக்கம் பக்கமாகிறாய்
முற்றும் தொடராய்...

வாழும் வரை போராடி

கடலை குமிழிக்குள் 
அடைத்துவரும் 
நுரை கொஞ்சம் வாழ
தஞ்சம் கேட்கும்
கரையிடம் ,
உடையாதிருக்க
உறைவிடம் கேட்டு,

ஒவ்வொரு குமிழிக்குள்ளும்
ஒவ்வொரு சமுத்திரம்,
கடல்
பிம்பம் தாங்கி
கரையிடம் சேர்க்க
நுரைகூட்டமாய்

விரல்சேர்த்து அள்ளுகிறாய்
கடல் மண் சேர்த்தும்
அள்ளும் கையில்
தான்
மட்டுமிருக்க
நுரை குமிழை
கிள்ளிவிடும் மணல்
கடல் விரலிடுக்கில்
வழிகிறது வாழாது?

காற்றாய் பறக்கும் மனமே

இறகிருக்கும் 
தேவதை
புடவை படபடக்க
எதிர்காற்றில்
நீ........
பறக்கும் மனது..!!!

நீச்சோறு

நீச்சோறு நிதம் கிடைக்க அருள்புரிவாய்,
சுண்டவைத்த மீன் குழம்பில் சுட்டுவிரல்
தொட்டு சுவைக்க வேரெதும் வேண்டாம்
உலகில் எனதோன்றும்,

சின்னவெங்காயம் சிரிது தேங்காய்,
சுட்ட மிளகாய் உப்புடன் உடைத்து
அம்மியறியாமல் அரைத்தரைக்காமல்
திப்பித்திப்பியாய் எண்ணெய் படலமாய்
மிதவை சுவை சுடும் நாக்கில்,

சம்பவம்

சாத்தியமில்லைன்னு 
தவிர்த்தவை
சாய்ந்த முகம் எடுத்து
கண் பார்க்க கவிழ்கிறது
சாத்தியமானதும்
சாத்திய கதவில்
ஒரு கண்?

ஒளி தோழி

ஒளி தோழி,
=========

இதோ என் கூட்டுக்குள்
ஒளிவீசிய மின்னல் தோழி
சற்றே விடுப்பில்
கிராமத்தின் காற்றில்
கலந்து கரைந்து

இருக்கட்டுமே என
இருந்த போது ,
வீசும் ஒளியில் வலுவற்று
விசும்பலாய் சிந்திய
வார்த்தையில்
நலம் குன்றி,

என் கீற்று கொட்டகை
சல்லடை ஓட்டையில்
தானே நட்பானது
நில்லாது ஒளியேற்றியே
தேடும் பொருள் அதன்
ஒளியில் தேடினேன்,

இன்று தனித்தேடல் கூட
அதன் ஒளி பிம்பம்
இருப்பதாய் எண்ணியே,
இனி ஒளியின் நலன்
கேட்டு
மண்டியிட்டேன்
உண்மையே?

இருட்டில் அழைத்து சென்ற
மின்னலே நீ இருட்டில்
தொலைவயா என்ன?
எழுவாய்,விரைவாய்
உன் கை தருவாய் உளியாய்
செதுக்கும் உருவாய்,
ஆவாய்,

நீ வேறு நான் வேறு யார் சொன்னது

சறுக்கும் போதெல்லாம்
உன் வார்த்தை
வேர்களை பிடித்து,

ஏறும்போதெல்லாம்
உதிரும் மண் துகள்
மலரென ஆசிர்வதிக்க

தடித்த வார்த்தை கிளை
சொந்தங்கள்
தடுத்தபோதும்

உன் வேர்
பிடித்த கை விடாது
ஆணி வேராய்
அசையாது எப்போதும்

உச்சாணியில் நீ
அச்சாணியில் எனை
சொறுகி உருட்டும்
ஒவ்வொரு நகர்தலும்,
தொடர்ந்து

தன்கொன்னு வந்தா

சுளிர் சாட்டை
முதுகில் சுமந்து
ஓடும் குதிரை

தன் அடிமைத்தனம்
யாரிடம் கூறும்??

இலை இல்லாது போன

இலையுதிர் காலம்
கூடு கட்டிய
மரத்தின் வேரில்
இறகு சிதறல்,

கூட்டில் நடந்த
கூடலா,
கூடலில்
சேர நடந்த
ஊடலா,?

மேலே நடந்த
மேகம்
பார்க்க
வெட்கமாய்
நிலாவை இழுத்து
போர்த்தியது,

கோலம் தாண்டி

தெருவில் உன் கோலம்
தாண்டி செல்ல
முடியாமல்
புள்ளியில் புறப்பட்டு
விரல் நுணியில்
வழிகிறேன்
கோலமாய்,

கிள்ளியெடுக்கும்
கிண்ணத்தில் என்
கண்ணம் இருப்பதாய்
மறுமுறையும்
கிள்ளக்கேட்கிறேன்,

விரலிடுக்கில்
உயிர்ப்பிக்கிறாய்
பூக்களை,
மலரும்
உன் முகம்
பார்த்து,

ஈரமான தெரு மண்
ஈரமாக்கியதொரு பெண்
இந்த கோலம் காண
மதியத்திற்க்கு
மத்தியிலும்
ஒரு விடியல்
வேண்டும்
காலமெல்லாம்

நல்ல ஏழை நண்பன்

நலம் விசாரிப்பு

நடு நடுவே பழைய

ஞாபக நிமிண்டல்

இடை இடையே

இன்னல்கள் சில

பறிமாற்றம்,

இருக்கும் பிள்ளைகள்

எத்துணை எண்ணிக்கையில்

ஏக்கமும், துக்கமும்

இருப்பதெங்கே

இடபெயர் வெற்றிடத்தில்

சேமிப்பென்ன

கேட்காத வன்னம்,

எதிர்ப்பார்ப்பு,

வரவேற்ப்பு வர

வேண்டுமாய் வரவு,

நிறைய செய்யனும்

கேட்க எத்தனிக்க

வேலையிருப்பதாய்

அவசர அழைப்பு

கொடுத்தால் குறையும்

பயமாய் விலகல்

பாவமாய் ஏழை

நட்பு

பிரிக்காதே

நானும், நீயும் நகர்த்தும்
நாட்களில் வயதோடு
வாழ்வும்
மனதோடு சோர்வும்
நிழலாய்,

முடிந்த மட்டும்
முதிர்ச்சிக்கு முன்
முடித்துகொள்ள
வேண்டும்
நிஜத்தை,

காகித கசங்களாய்
பார்த்து பார்த்து
பிரித்த நம் கனவுகள்,
எரிந்த காகித சாம்பலாய்
காற்றில் படபடக்க
கனிந்துருகும்,

எப்போதும் ஏக்கம்
மீதமாய் அதன்
தாக்கம் கொல்லும்
தாகமாய் தவித்து
தவித்தே ,

நாதியற்றவன்

நதியை கூட 
அணைத்து செல்லும்
இரு கரை

நாதியற்ற எனக்கு
ஏது?
அக்கரை.

கடைசியில்
கடலில்
சங்கமிக்கும்,

கடைசியில்
கடலின்
சங்கே
முழங்கும்,

சிக்கவைக்க

தொடுதலில் இல்லாத உணர்வை
பார்வையில் கொட்டினாய்,

ஓவியன் தீட்டாத வண்ணம்
கண்ணத்தில் கூட்டினாய்,

பயணம் போகாத மனதை
சுற்றி சுழலவைத்தாய்,

கண்ணாடிக்காட்டாத உருவம்
கண்ணடியில் சிக்கவைத்தாய்,

தூண்டிலில் சிக்கும் மீன்
மீனிடம் சிக்க தூண்டினாய்

பாதையே இல்லை ஊருக்கு
உன் பேரில் வீதியாக்கினாய்,

எட்டிப்பிடிக்கும் தூரம் நிலா
எட்டிலும் தூரம் போய் நில்லாய்,

கல்லறையில் மேலே கள்ள அறை
எப்போதும் காண்பாய்

கண்ணீர் துடைக்கும் விழி
வழிதலில் வலித்தாய்

மனம் கசக்கும் மலர்
துவளும் கை தண்டாயானாய்.

ரம்மி

சீட்டுக்கட்டில்
ஜெயிப்பதற்க்கு
ஜோக்கர் 
தந்தாய்

ஆட்டம் 
முடிந்தும்
ஜோக்கராய்???

பள்ளி விடும் நேரம்

ஒரே வண்ணம்
பூக்கள் சிந்தும்
வளாகம்,

ஆயிரம் கைகள்
மேதைகளை 
அனைத்தபடி
திமிறாய்,

பிள்ளைக்கு தாவும் மனது


முறிந்தால்

வண்டியின் ஓட்டம்
அச்சில் ஒட்டியிருக்கும்
மசியில் சத்தமின்றியே,

முறிந்து போனதும்
மசி இருந்தும்
சத்தம் பெருகும்,

உடம்பில் மசியென
எது
ஒட்டியிருப்பினும்,
(காசு,பெருமை,புகழ்)
உயிர் அச்சியில்லாது
ஓடுவதெப்படி????

காணாமல்

விழி அயராது 
விடிந்ததும் ஆரம்பமாகும்,
அத்துனை 
காரியங்களுக்கிடையிலும்
தேடுதல்,

காற்றில் ஆடிடும்
கதவிலும் மரப்பிலும்
ஒட்டிகொள்ளும்
பார்வை எப்போதும்

காக்கை கரைந்திடும்
வேளையிலும்
கண்ணாலன் வரவிற்கென்றே
ஏக்கம் கொள்ளும்
எண்ணம்,

தோய்த்திடும் பாத்திரபண்டத்தின்
பளிச்சொளியில்
தன் முகம் மறந்து
அவன் உரு தேடும்
தேய்ந்து போய்,

வீட்டை பெருக்கும்போது
மனக்கூட்டில் சேர்ந்திருக்கும்
குப்பை வீசப்படாமல்
குன்றாய் குவிந்திருக்கும்
கொட்ட வேண்டி,

தோசம் ஏதும் இல்லை,
இருந்தும்
தூரத்தேசமும்
ஒரு தோசம்தான்
பிரித்து வைத்த காரணத்தால்,

வரவின்றி செலவாகும்
வயது,
வர வைத்து
சமனாக்க கூட்டவில்லை
மனதில்
ஈவும் இன்றே.,

என்னை விட்டு
எதை தேடி சென்றாய்,
எனை விட்டு போக
மனம் கெட்டு
இங்கே.

நல்ல தங்காள்

அவள் கிணற்றில் 
வீசியது
குழந்தையல்ல
சமுதாய 
கையாலாகாதனம்

சகித்துக்கொள்

உடைத்து வெளியேற 
பூட்டி இருக்கவில்லை!!

தாவிச்செல்லவும்
பள்ளமாய் இல்லை!!!

அறிந்து கொள்வதற்க்கு
அறியாதவன் இல்லை?

ஏனோ? விளக்கப்பட்டதாய்
உள்ளே ரீங்காரம்

இல்லாத ஒன்றை திடிரென
வெளியாக்கிய பெருவெடிப்பாய்,

மூடிக்கொள்ளும் மலரிடத்தே
மலர செய்ய மகுடி ஆடி,

மறுப்போறை ஏற்போராக்கும்
இழிசெயலாய் திணிக்கப்படும்,

எண்ணக்கழிவை எதன் மேல்
வீசுவது,?

உமிழச்செய்யும் ஒவ்வொரு
துர் வாடையில் துயிலும்,

வேட்கையில் விதி மேல்
பலிபோட்டு தப்பிக்க

தனதாக்கி தலையணை
பொந்தில் நுழைந்து

விடியும் வரை விழிக்குள்
வீண் எனக்கூவுது

குரல் வலை அறுந்த
சேவல்...

சன்மானம்

முத்தம்
நெற்றியில் சறுக்கி
கண்ணத்தில்
கவிழ்ந்துபோனதும்
கண்ணம் விழக
இதழில்................
.................
......பேசுவதெங்கனம்.

அலைவதேன்

இன்று வலி 
தெரியாதிருக்க
மருந்துக்கு 
அலையும்
நீ.....?
அன்றே விழி
தெரியாதிருக்க
திரை இட்டிருக்கவேண்டும்,

அங்கிகாரம்

மேடையின் கைதட்டல்
முகநூலின் விருப்ப தட்டல்
உச்சி முகர்ந்த
பித்தம் தலைக்கேரும்

அலை தீராது ,அலையும் கடல் தீராது


அலைப்பிடிக்காதாம்
அவர்களுக்கு,
,அடிப்பதாலா?
அடித்து செல்வதாலா?
அலையை பிடிக்க
முடியாததாலா?

அலைக்குத்தெரியுமா
பிடிக்காமல் போன செய்தி?
அலை,
கடலுக்கு மட்டுமா
சொந்தம்,

குடத்தில்  குதிக்குமே
அலை குறுகலாய்
இடையிலும் உருகலாய்
வழியும் அலை ,இடை,

அலை தவிர்த்து போனாலும்
அலைதவிர்க்க முடியாதது,

அலை ஏற்றும்,இறக்கம்
இருக்கும் பின் தான்
இறக்கும் ,

அலை, சிரிப்பென  நுரைக்கும்
அலை  வாரி அணைக்கும்
மோதி மோதி  தன்னை
பெருக்கும் 

அலைத்தான் அழகு  
கடலுக்கு
கொலுசில்லா குமரியின் 
ஆட்டம்,
அலை இல்லா 
கடலாட்டம்

அலை தீராது 
அலையும்  கடல் தீராது