அறியாப்பிள்ளை

உனக்கு,
கோபத்தை தூண்டுவது இதான்
என்பதை தெரிந்திருந்தால்
செய்திருப்பேனா,

உன் யாசகன்

விரட்டப்பட்டால்
பிச்சைக்காரனுக்கு
அடுத்த வீடு இருக்கு?
எனக்கு?????
‪#‎யாசகன்‬ அன்போடு

விஷ மருந்து நீ

விஷம் இறங்க
மந்திரிப்பார்கள்
எதையோ முனுமுனுத்து,?
உன் கோபம் இறங்க
மந்திரிக்கிறேன் உன்
பெயரை முன்வைத்து,

அவள் மன்னிதாள்,

எனக்கு தெரிந்த நீ
வெறுக்கவும் தெரிந்தவள்,
எனக்கு தெரிந்த நீ
விலக்கவும் தெரிந்தவள்,
எனக்கு தெரிந்த நீ
மன்னிக்க தெரிந்தவளா?
மன்னிக்க தெரிந்தால்
உன் போல் மகத்தானவள்
எனக்கு தெரிந்தவளாகிறாள்??

பாவ மன்னிப்பு

ஒரு திருமணத்தில் நண்பர்கள் சூழ மொய் எழுதும் வாய்ப்பு கிட்டியது
திருச்சியில் ,
அது ஒரு நண்பனின் சகோதரியின் திருமணம்,கவரிலும்,கையிலும் தரும் பணங்களை நோட்புக்கில் எழுதிக்கொண்டிருந்தேன்,
ஒவ்வொரு பெயரையும் எழுதி அதன் அருகே அவர்கள் தரும் பணத்தையும் எழுதிக்கொண்டிருந்தேன்,
கூட இருந்த நண்பர்களும் தனது பங்கிற்க்கு மொய் வைத்தார்கள்
அவர்கள் பெயரை எழுதும்போது நண்பரின் நண்பன் என்று எழுதி பணம் ஊரின் பெயரையும் எழுதிக்கொண்டிருக்க,
ஒரு நண்பன் ரூ50 சிவக்குமார் கோடுகிழின்னு சொன்னான்,
ஊரைச்சொல்லுடா,
கோடுகிழிடா,
சரி என்று ஒரு கோடை கிழித்துவிட்டு பெயருக்கு நேர் ........ரூ50 என்று கோடு கிழித்தேன்,
டேய் ,
சிவக்குமார் கோடுகிழிடான்னு கத்தினான் ,
கல்யாணக்கூட்டம் எங்களை பார்க்க ஆரம்பித்தது
சரியான கோபம் எனக்கு இதப்பார்ரா கோடு கிழித்துட்டேன் ஊரைச்சொல்லுடான்னேன்,
என் ஊர் பேரே கோடுகிழிடான்னு சொல்ல சிரிப்பை யாருமே அடக்க முடியாமல் சிரித்து தொலைத்தோம்,
தஞ்சாவூர்,திருக்கருக்காவூர் போகும் வழியில் உள்ள ஊரின் பெயர் கோடுகிழி,
அந்த ஊரை ஒரு பயணத்தில் தாண்டிவரும்போது அந்த நண்பனின் முகம் ஊர் முழுது நிறம்பி இருந்தது எங்கிருக்கிறானோ என்ன செய்கிறானோ தெரியாது,
தஞ்சை மண்ணில் கால் பதியாத இடமில்லை எங்கள் சைக்கிள் செல்லாத தெருவில்லை ஒருகாலம்,
ஆசிரியரிடம் கடன் வாங்கி கழித்த காலம்,
திருவள்ளுவர் ,பர்வீன் தியோட்டரின் டிக்கட் கிழிப்பவர்கள் உற்ற நண்பர்கள் என்றால் எங்கள் படிப்பின் லட்சனம் என்னவென்று சொல்லித்தெரிய தேவையில்லை,
எங்கள் குரூப் சைக்கிளுக்கு டோக்கன் கிடையாது,
கமலா சாந்தி தியேட்டர் எதிர்புறமுள்ள ஸநாக்ஸ் கடன் நோட் கனத்திருந்த காலம் ஒன்று உண்டு,
அஸ்வெல்,அசோக் லாரண்ஸ்,பரனி,ராஜ்குமார் நீங்கள்லாம் முகநூலை தெரிந்து வைத்திருப்பீர்களா?
சிவசங்கரியின் சிரிப்பையும் ,நடையையும் தொடர்ந்து போன ரயில் பாதையில்தான் எவ்வளவு மாற்றம்,,சுகன்யாவீட்டுக்கு எதிர்புறம் ரூமில் தங்காதவன் எல்லாம் குழுமீருப்பான்,வீட்டுக்காரன் கத்தாத நாட்கள் இல்லை,வண்டிக்காரத்தெருவில் பிணங்கள் போகும்போது போட்டுச்செல்லும் ரோஜாபூவை ஜோப்பில் வைத்துக்கொண்டு
ஜேசுராஜ் சுதாவிடம் தந்து சிரித்த அந்த நாள் ஒவ்வொரு பிணங்களின் பின்னால் உதிர்ந்து போட்ட பூக்களைக்காணும்போது ,பயமற்று பூவைப்பார்க்க ஜேசுவும் சுதாவும் தெரிகிறார்கள்.
திருச்சி பூதலூர் ரயிலை நாங்கள்தான் வழியனுப்பி வைப்போம் விழிநீர்வடிய,
நாகைப்போகும் ரயிலில் ஒப்புக்கு கூட ஒரு பிகர் ஏறாது?
ஏண்டா நாகப்பட்டினம் திருச்சி பக்கத்தில் இல்லை என்ற ஏக்கம் இருந்திருக்கிறது சில நேரம்,
காலியாக இருக்கும் ஐந்து பெட்டியிலும் காங்கிமேன்கள் சீட்டுக்கட்டை பரப்பி இருப்பார்கள் எப்போதாவது ஒன்றிரண்டு வழிதவறிய ஆடென இளம் பெண்கள் ஏறினால்,
நான்கு வாசலையும் நானுறு முறை கடந்து வருவோம் ,பூண்டிகாலேஜ் மாணவர்கள் கண்களில் மண்ணைத்தூவ வழிமரித்து படியில் பத்துபேரெல்லாம் அமர்ந்து உள்ளே நெருக்கடியாக காண்பிப்பதற்க்கு அமர்க்களம் செய்து வந்த ஒரு காலம் அது,
அதில் ஒரு மாணவன் ஏண்டா பக்கத்து கம்பார்ட்மெண்ட் காலியாத்தானே வருது இங்கே ஏண்டா பிதுங்கி வழியுறிங்க எனச்சொல்ல,
வழிவதை தவிர வேறு வழி??
இன்று எவ்வளவு மாற்றம் ,
ரயிலை ஓட்டுபவருக்கு நாங்கள் சிரமம் தந்ததில்லை ,நாங்கள்தானே செயின்புல்,டிஸ்க்கும் போடுவோம்,
அவருக்கு வேலைச்சுமையை ஸ்டேசனுக்கு முன்னமே ஆரம்பித்துவிடுவோம்,
திட்டாத டி,டி,ஆர் யாருமில்லை ,
ஒரு காலம் கடந்து போனது அதன் தவறுகளும்,சங்கடங்களும் தித்திப்பான பொருள் சாப்பிடும்போது மிளகு கடித்த காரம் இருக்கிறது மனதில்,
தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க யாருமில்லை மனம் கவிழ்ந்து போகிறது,