அவளிசை

உள்ளத்தில்
முழ்கிய
உனைத்தவிர,
யாரையும்
அனுமதிப்பதில்லை
பயந்துக்கொண்டு,
மீட்கயியலா
இயலாமையில்.

சங்கேத கடிதம்,

இந்த கடிதம் கிடைத்ததும் அவளின் மன நிலை அறிய வேண்டும் என்ற ஆவல் இவனுக்கு,அந்த கடிதம் அவளின், அம்மாவும், சகோதரிகளும் படிப்பார்கள் இருந்தும், அவளுக்கு மட்டுமே புரியும் சில வார்த்தைகளை வார்த்தைகளின் இடையிடையே கிறுக்கியதுபோல் எழுதி அடித்து திருத்தியது போலும் எழுதி முடித்துவிட்டான், அவள் அடித்து திருத்தி இருப்பதைதான் உன்னிப்பாக கவனித்துப்படிப்பாள் என்று இவனுக்கும் தெரியும்,

     கடிதம் கொடுத்துவிடும் நபர் மரியாதைக்குறியவர் இந்த கடிதம் அவளுக்குதான் என்றுக்குறிப்பிடாமல், அவள் அம்மாவிற்க்கு என்று சொல்லி கொடுத்துவிட்டான்,இவன் வெளிநாட்டில் பணிபுரிகின்றான்,அவள் தன் மாமா மகள்தான் பிளஸ்டூ படிக்கிறாள் அவளை இவனுக்கு நிரம்ப புடிக்கும் அடிக்கடி அவள் வீட்டுக்கு போய் வரக்கூடியவன் அவன் அவளை பிடித்ததாக ஒரு முறைக்கூட சொன்னதில்லை அவளின் மனநிலை யாதென்று அறியாதநிலையிலேயே  இவன் வெளிநாட்டிற்க்கு பயணமாகிவிட்டான்,

     இவன் வெளிநாட்டில் இருந்தாலும் எல்லோருக்கும் கடிதம் போடும் பழக்கம் உள்ளவன் அவளின் அம்மாவிற்க்கும் சகோதரிக்கும் நலம் விசாரித்தே கடிதம் போட்டுவந்தான் அதுசமயம், அவளுக்கும் படிப்பின் விசாரிப்புகளை விசாரித்தே முதலில் கடிதம் தொடர்ந்தான் அவளும் அதற்க்கான பதிலை இவனுக்கு தனியே அம்மா எழுதிய கடிதத்தின் கடைசியில் எழுதுவாள், பிறகு,

    இவன், அவளுக்கென்று ஒரு கடிதமும் அம்மாவிற்க்கு சகோதரிக்கு என்று ஒரு கடிதமும் எழுதித்தொடர ஆரம்பித்தான்,இப்படியாக தொடர்ந்த கடிதத்தில் சில சங்கேத வார்த்தைகளைப்போட்டு தன் காதலைத்தெரியப்படுத்த முயன்றான், ஆனால் அதில் காதல் என்று அவன் குறிப்பிட்டதில்லை அவளுக்கு, அறிவுரைச்சொல்லும் சாக்கில் தனக்குப்பிடித்தமானவள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற வாக்கிய அமைப்புகளை தொடர்ந்து எழுத ஆரம்பித்தான், அவளும் தன் விருப்பத்தை இவனுக்கு சங்கேத வார்த்தைகளிலேயே தெரியப்படுத்தினால், இவனுக்கு சொல்லவும் வேண்டுமோ,

  அந்த கடிதம் வேறு யார் படித்தாலும் புரியாத வகையில் இருவருமே சங்கேதப்பறிமாற்றங்களில் மனதின் ஆசைகளையும் பேரன்பினையும் பின்னிபினைந்து எழுதியெழுதியே வளர்த்துக்கொண்டார்கள், அவள் படித்த பள்ளிக்கே ஒரு முறை கடிதம் எழுதிவிட்டான்,அவளுகென்று தனியே பள்ளிக்கே கடிதம் எழுதி அனுப்பினாலும் தன்விருப்பத்தையோ ஆசையையோ அதில் குறிப்பிட வில்லை ஏனெனில் யார் கையிலோ அல்லது தலமை ஆசிரியர் படித்து பின் மாணவர்களுக்கு கொடுக்கும் பழக்க இருந்தால் என்னாவது என்ற சந்தேகத்தில் மிகவும் ஜாக்கிரதையாக  அவளுக்கு அறிவுரைகளையும்,படிப்பினைப்பற்றியுமே எழுதிஇருந்தான், அவள் இனிமேல் எனக்கு பள்ளீக்கூடத்திற்க்கு கடிதம் போடாதே எனக்கே எழுது நம் கடிதத்தைதான் யார் படித்தாலும் புரியாதே பின் ஏன்? என்று வினவி இருந்தால்,

   இவனுக்கும் அது சரி என்றே பட்டது, அவளிடம் இருந்து வரும் கடிதத்திற்க்காக விடுமுறை நாட்க்களை வெறுத்தான் எல்லா நாட்களும் வேலை நாட்களாகவே இருக்க வேண்டினான், அவளின் கடிதம் மட்டும் இவன் கையில் கிடைத்துவிட்டால் உலகில் இவனைப்போல் அதிர்ஷ்ட்டசாலி இல்லை என்ற மனநிலையில் இருப்பான், எதுவுமே இவன் கண்ணுக்குத்தெரியாது அவள் எழுதிய வார்த்தைகளும், வாக்கியங்களும், அர்த்தங்களும் போதும் பசிக்கூட எடுக்காது இவனுக்கு, அந்தக்கடிதம் பிரித்துப்பிரித்து படித்துப்படித்து நைந்துப்போனாலும் செலோபோன் டேப் ஒட்டி மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டு சிலாகித்து வான்வெளியே பறப்பான், இவனுக்கு ஊட்டமே அவளின் கடிதம் தான் அந்நாளில், வேலையின் கஷ்ட்டம் மறக்க அவளின் கடிதம்தான் இவனுக்கு சொர்க்கமே,

    இந்த சமயத்தில்தான் இவனின் நெருங்கிய தோழரும் சொந்தக்காரர் ஒருவர் ஊருக்குப்போவதாய் தெரிய அவளுக்கு கடிதம் எழுதி அவர் கையிலேயே கொடுத்துவிட எண்ணித்தான் எழுதிக்கொடுத்தான்,
அந்தக்கடிதம் போய் சேர்ந்ததாக எண்ணியே மகிழ்ந்திருந்தாலும், அதற்க்கான பதில் வராத கவலை இவனை மனவுளச்சலுக்கு தள்ளியது,ஏனென்றால் அந்த கடிதம்தான் அவளையே மிகவும் நேசித்திருப்பதாகவும், உன்னைத்தவிர யாரையும் மணக்க மாட்டேன் எனவும் தைரியமாக எழுதியக்கடிதம்,

    அதற்க்குப்பிறகு அவளுக்கு கடிதம் எத்தனையோ எழுதி எதற்க்கும் பதில் வரவில்லை இவனுக்குப்பயம்வந்துவிட்டது, ஊர் பயணமும் நெருங்கிவிட்டது, இதோ கிளம்பிவிட்டான், 
(தெரிந்த அந்த தோழரும் சொந்தக்காரருமான அவர் அந்தக்கடிதத்தை அவன் அம்மாவிடம் கொடுத்தது மட்டுமல்லாமல் உங்கள் மகன் அவளையே நினைத்துக்கொண்டே வேலையில் கவனமில்லாமல் ஒரு நாள் காலை உடைத்துக்கொண்டான் என்று இல்லாத பொல்லாத செய்திகளை சொல்லிவிட்டு போய்விட்டார்.)

   இதை அறியாமல் இவன் போய் ஊரில் இறங்கிய இரண்டொரு நாளிலேயே இவனுக்கு பெண் தேட ஆயத்தமாகிவிட்டார்கள்..............
(ஆம், அவன் அன்றே இறந்து விட்டான் 
உடலில் உயிரையும் அவளையும் சுமந்து திரிகிறான்,


அம்மாவின் பேச்சை தட்டாதவன் மீறாதவன், 


இரவின் இசை

தாலாட்டும் உன் கனவோடு
என்னிரவு தொடரும்,
உறங்குகிறேன் என்பதே
கனவைப்பொருத்தே
கண்டுக்கொள்கிறேன்..

வாராய்

பறவையின் இறகை
வாடகைக்கு கேட்டேன்,
என்னுடன் பறந்து வா என்றது,
பறக்கத்தானே கேட்டேன் என்கிறேன்
நீ பறப்பதை பார்த்தபின் தருகிறேன் என்றது,
இறகிலாத போது நீ பறப்பாயா என்றேன்,
இல்லாத இறகை நீ ஏன் கேட்கிறாய் என்றது,
பறந்து போனது புரிந்துக்கொண்டேன் .

என். மரணம்

என் என்பது
மரணத்தின் இனிஷியல்
நான் அதற்க்கே பிறந்தேன்.

கோவம் தனிய

ஒர் பார்வையோ
ஓர் பேச்சோ
ஒர் சைகையோ
ஏதேனும் ஒன்றை
உன்னிலிருந்து கண்டால்
தானே விலகிடும்..?

அகம்

புறம்சொல்லாத அகம்
என்னில் நீ
என்பதே  உண்மை.


தையல் நடனம்





அரங்கேற்றம்
மேடை இல்லை
மேள தாளமில்லை

தையல் இயந்திர
கட கட ஜதியில்
உன் அபிநயம்,

தை தைக்கும்
விரல்
முன் பின்
பதம் முந்தும்
பாதம்,

நவரசம் தாங்கும்
நாற்காலி
ரசித்து,

நடு நடுவே
நளின
சிருங்காரம்,
நாக்கில் தடவும்
நூல்,

ஊசியில் நூல்
கோர்க்க
நெற்றி திலகமிடல்
நேர் பார்த்தலாய்,

தாண்டவமாய்
ஒரே மடிப்பு ஒரே மூச்சு
ஒய்யார ஓட்டமாய்
வழிந்தோடும்
துணியுருகி,

தீம் ததிகிட தீம்
ததிகிட
தீமென,,

இடையிடையே
அனிச்சையாய்
அங்கபிரதட்சம்
தலை சொரிதல்
ஆடை
சரி செய்தல்,

உன் நடனம்
சரி பார்க்க
நானிருக்கேன்

நாள் தோறும்
தை தை
மனதை
தை தை தை...

உனக்காகவே,


உண்மை சொன்னால்
உனக்காகவே இருக்கிறேன்
பொய்யாயினும்.

மனம்

நீ
விரும்பும் போது
விலகும்