என்றும்....



இலை மேல்
துளியாய்
காற்றசைவில்
அங்குமிங்கும் ஒடும்
உன் ஞாபகம்,

திருமண மேடையில்


பழைய
ஞாபகங்களை
எரிக்கத்தான்
தீ வளர்க்கப்படுகிறது,

முழுமை பெற............



செதுக்கிய பின்

சிதறியவை

கதறியது

கண்ணுக்கு

தெரிவதில்லை,

பழகியதே காரணமானது


நீ ஜெயிக்கவே
பல விளையாட்டுகளில்
தோற்க்கிறேன்,

நான் ஜெயிக்க
நீ தோற்க்கிறாய்,

இன்று இருவரின்
தோல்விகளுக்கும்,
விட்டுகொடுத்து

பழகிய ஆட்டமே
காரணம்,

பழகியதே காரணமானது



நீ ஜெயிக்கவே
பல விளையாட்டுகளில்
தோற்க்கிறேன்,

நான் ஜெயிக்க
நீ தோற்க்கிறாய்,

இன்று இருவரின்
தோல்விகளுக்கும்,
விட்டுகொடுத்து

பழகிய ஆட்டமே
காரணம்,

காதலிக்கும்போதே


குண்டாகாமல்
அழகாகிறேன்
உனக்காக

நான்.
உண்டாகாமல்
அழகாக்கு
நம் காதலை,

யாது செய்வாய் நீ



எல்லாக் கதவுகளையும்
அடைத்தாய்
பார்ப்பதை தவிர்க்க,

விழி திறந்திருக்கே,

ஆசைதான்



காணும்போது 
பூக்கும் உன் உதடுகளைவிட

காணாதபோது தேடும்
உன் விழிகள்

பார்க்க ஆசை??

முடியுமா?


வெறுப்பவர்களையே 
நினைக்கும்போது
விரும்பிய
உன்னை எப்படி
மறப்பேன்

நிதமும் இதே கனவுகள்



கனவுக்குள் 
நுழையப்போகிறேன்
அவள் வரலாம்
அல்லது ஒரு
வாறு வாரலாம்
தாமதம் ஏன்
என்று,

கனவுக்குள் ,
நுழையப்போகிறேன்
அவள் வரலாம்
அல்லது ஒரு
ஆளுடன் வரலாம்
முந்திகொண்டவன்
இவந்தான்
என்று,

கனவுக்குள்
நுழையப்போகிறேன்
அவள் வரலாம்
அல்லது ஒரு
காரணம் சொல்லி
விடுப்பில் இருக்கலாம்,
அதே முகம்
தினமுமா!!
என்று,

கனவுக்குள்
நுழையப்போகிறேன்
அவள் வரலாம்
அல்லது
கதவை மூடி
போயிருக்கலாம்
எப்போதும் வரும்
கள்வன் தானே நீ
பிரித்திரங்கு கூட்டை
என்று,

தவம்



ஓரிரு 
காசுகள் முடிந்த
முந்தானைகள்,
உன் போதைக்காய்
கிழிக்கப்பட்டது
ஏராளம்,

கல்,மண்
கரிக்கவில்லையா?
உன் போதையில்,
சுமந்த வலி என்
தலை விட்டு உன்
தலைக்கு
காலையில் மட்டும்,

உணவும்,உணர்வும்
கண்டு காலமாச்சி
உறவும்,உடலும்
கெட்ட கானலாச்சி,
ஏனோ இருக்கிறேன்

நீ தூக்கி சென்று
அள்ளிப்போடும்
ஒரு கை பிடி மண்ணில்
ஈரம் இருக்கும்
என்ற நம்பிக்கையில்,

எதன் உராய்விலோ பற்றி,,,,,,,,,,,,,?



எதனாலேயோ வெறுக்கப்படுகிறேன்
அதனாலேயே வேறுபடுகிறேன்.

தூண்டும் வரை காத்திருக்கும்
தீபத்தின் திரி அல்ல,

அணைக்கும்,
காற்றை பற்றி ஏறி,காடு எரிக்கும்
தீ பொரி,

கண்டுகொள்,காணாதிருந்துகொள்,
என் பணி சாம்பலாகும் வரை,

நீர் ஊற்று
ஊற்றின் உள்ளே கனல் ,

நீர் எரிய எதைக்கொண்டணைப்பாய்,
நீர்த்து போகும் வரை,

காற்று கைவிட எரிதல் தனிந்து இருக்கும்
கங்கு காற்றிடம் கையேந்தி காத்திருக்கும்,

வேகும் என் உடல் நிறம் சிவப்பாய்
காண் கண் சிவந்திருப்பதை,

எனக்கெப்படி தீபுண்ணாகும்
புண்ணை பொசுக்கியாதால்தானே,
புறப்பாடு இப்படி,

முடிவில்.......

முடிவில்.......


போகப்போறேன் ,

வருந்தாதே,

வந்துவிட மாட்டேன்

என்று

யாப்பென கொண்டோர்க்கு ஆப்பான நவீனம் =================================



யாப்பும்,
எதுகை மோனையும்
சீரும், இடை,கடை, தொடை

வெண்பாவும் சேர்த்து
முடிக்கும் வரை
காத்திருக்காது
கணிணியுக
காதல்,

ஆப்பும்,
கொலைவெறியும்
அதிகமான நேரம்
மாட்டினால் டிக்கெட்
மாட்டாது போனாலோ
அபீட்டு,
கடைசிவரை--2
-----------------------

கடைசிவரை 
கண்ணில்
தூசு விழுந்ததாய்
கண்ணீர் துடைத்து
தப்பித்தாய்!!!

நெஞ்சில் பதிந்த
நினைவை துடைக்க
எதை சொல்லி
தப்பிப்பாய்??








கடைசிவரை--3
===============

கடைசிவரை உன்
பார்வை வாசல்புறமே
குதிரையில் வந்து
கொண்டு செல்வான்
என்று,,,,

மனம் குதிரையின்
வேகத்தில் இருந்திருக்கும்,
மனம் உடைத்து போட்ட
உறவுகள் செத்திடுவோம்
எல்லோரும் என்ற
விலங்கை பூட்டீயதரியுமோ?





கடைசிவரை--4
---------------------
கடைசிவரை
இனி பார்க்க கூடாதென்ற
முடிவில்
நீயோ, நானோ,
யோக்கியவான்களாய்
இல்லை,???








கடைசிவரை--5
============
கடைசிவரை
நமக்கு யாரும்
எதிராய் இல்லை
ஏனோ?
நாம்
சேரவில்லை,








கடைசிவரை--6
-------------------
கடைசிவரை
நம்மை சேராதிருக்க
கங்கணம் கட்டியவர்கள்
இங்(க்)கனம் இல்லை











கடைசிவரை--7
-------------------
கடைசிவரை
பிரியக்கூடாதென்றிருந்தோம்
கடைசியில்
பிரியக்கூட
நின்றிருந்தோம்,

யார் முதல்
யார் கடைசி
கடைசிவரை
இருந்தால்
பார்ப்போம்!!!!!!






திடீரென்று......


இறப்புகளை கண்டால்

வயதை எண்ணுகிறது,

நல்லது மட்டும் செய்ய

எண்ணுகிறது மனது

புதைத்து முடிந்தால்

எண்ணமும்

புதைந்து போகிறது,

அவளுக்கும் அவனுக்கும்



ஊமை கிழச்சி அவள்
பொடிமட்டையில்
வாழ்க்கை,

யாரிடமும் கேட்டதில்லை
பணம் ,
கேட்பது பொடி,
போராடி கேட்க
புதிர்போல்
விரித்தால் பொடிமட்டையை

அவன் ஒரு நாள்
பழகினான்,
அவன் போனதும் பழக்கம்
போகவில்லை,

சுவாசிப்பில் அவனை
திணிக்கிறேன்,
யாசிப்பில் அவனை
நினைக்கிறேன்,

போட்டாள் ஒரு போடு
பொடி மணத்தோடு,
சைகையில் அவன்
மடியென
திண்னையில்
சாய்கிறாள்,

கூட்டின்......

...


கதவு திறக்க 
பறக்க
படபடக்க
சிலுப்பியது
இறகை,

மெல்ல நடந்து
மேலும் கீழும்
பார்த்து

கிந்தியது மனம்
பறக்கட்டும்
சுதந்திரமாய்,

திரும்ப
உள்ளுக்குள்
நடந்தது
வேகமாய்
மனம்
பறக்க

வாசல் வந்தது
குதித்தது இயல்பை
மறந்து,மனம்
கொதித்தது
பழக்கியது
பாவம்,

இரவானதும் ---------------------



இரவானதும் ,
இளகிய
முரண்கள்,
காலை முறுக்கிய
மீசை திமிர்
மழுங்கியது
மயிராய்
,
இரவானதும்,
முடியாதென வெளியேறிய
வார்த்தைகள் உள்ளுக்குள்
அர்த்த பிழையில்
மண்டியிட்டு

இரவானதும்,
எதிராய் செயல் படுகிறாய்
கேட்பதில்லை
நான்
சொல்வதை
எதைத்தான் கேட்கிறாய் ,
இதைமட்டும் கேட்க,

இரவானதும்,
பூர்த்தியாக்க படும்
தேவைகள்
சத்திய பிரமாணம்
சாட்சியில்லாது
இருப்பதால்,

இரவானதும்,
அதை விடு நாளை
பார்க்கலாம்
அவசர பிரளயம்
அடங்க இருக்கும்
புயல் அமைதிக்கு,

இரவானதும்.
முகம் திருப்பி படுத்தல்,
குழைவு கோபத்திற்க்காண
தூபத்தின் வாலிலிருந்து
ஆரம்பித்து
முகம்
திருப்ப செய்வதற்க்குள்,
கதிரவன்
கைபிடித்தெழுப்பும்
சமயம் வந்து தொலைகிறது,

முகமன்




தோல்விகளை 
தவிர்க்கிறேன்
வரவேற்க்கும்
மாலையுடன்
எதிரே!!!!

வெற்றிகளை
கேட்கிறேன்
முகம் காட்டா
தூரத்தில்
எப்போதும்,???

படைத்தவன்

அவன் மேல் கோபம்
கொள்கிறோம்
அவன் கோபம்
எதுவென்றரியாமல்

கோபத்தில் வீசி
எரிந்தாலும்
அவன் படைப்பின்
உள்ளே தான்,
வீழ்ந்து கிடக்கபோகிறோம்

தேகம்



ஓட்டை பாத்திரம்
ஒழுகாத
உயிர்!!!

கனவான கனவுகள்


கனவிற்க்கான
பதிலை காலத்தில்
தேட......

கனவான காலம்?

பொழுதுபோக்கி




பொழுது கழிக்க

பொழுது கழிந்து

பொழுதில்லாது

போன பொழுது??

இறவா பகல்



இரவு தூங்க
நான் காவல்,
பகலில்,
,
நான் தூங்க
இரவு காவல்
இரவான பகல்,

நான் காக்க
இரவில் இல்லை
இரவு,?

நான் தூங்க
பகலில் இல்லை
இரவு,

புழுதிபட ------------



உன் மெளனம் உடைபட்டு
வெள்ளபெருக்காய் 
வார்த்தைகள்
பாய்ந்துவரும் என
காத்திருந்தேன்?

உன் குரல்வலை
ஒரு கைபிடிக்குள்
கசங்கியதை
காண மறந்தேன்,

உன் மெளனம்
குடையென
விரியவும் துளிக்கூட
படாது தப்பிக்க தான்
வந்தேன்,

காற்று பிரட்டியதா?
காலம் பிரட்டியதா?
குடையை ,
தொப்பாய்
நனைந்தேன் நாணம்
கெட்டு,

உன் மெளனம்
கதவாய் திறக்க
தாழ் ஒலியில் மசி
சப்தமின்றியே,

செவி சேர்க்கும் காற்று
மெளனமாய் இன்று
வாயசைவை
காணத்தான் கண்
ஏது ஒளி பிடுங்கிய
பின்,

இந்நாளை சந்திக்க...



கீழ் வரும் ஒரு நாள்,
ஆட்டம் முடியும்
துணைக்கு
தூணைபிடித்தெழும்பும்

வயதுன்னை வாட்டும்
பாய்ந்த
வாய்க்கால்,
வரப்புகள்,
பயமுறுத்தும்,

தட்டில் சோறு
கை கொட்டி விழும்,
மெல்லும் முன்
உனதிலை எனவாகும்,

ஊன்றுகோல்
ஒரு கால்
வேண்டா பேச்சு
வேண்டா பார்வை
தீண்டா தேகம்
வேண்டும் ,

தரையிருக்கிறோம்
என அறியா ஆணவம்

தரை கூனி நடக்க
புரியுமே அத்தினம்,

ஆடி ,ஓடி,தேடி
சேர்த்த காசு,பணம்
செங்கல்,சிமெண்டும்
இருப்புமாய்,
விரும்பினாலும்
திண்ண இயலுமா?

வந்தால்!! நொந்தான்???




சந்தேக கிளி
சிறகு விரித்தால்
வல்லூறு,

சந்தேக கணவன்
கண்ணில் படுவதெல்லாம்
சாக்கடை,

சந்தேக
வைக்கோல்
தீ பந்த உறவு,

சந்தேக
நடை பிண
வாழ்க்கை,

சந்தேக விளக்கு
தீ இல்லாது
எரியும்.

சந்தேக
ஜன்னல்
கம்பியில்
விந்து விழும்,

சந்தேக
இரும்பு திரையிலும்
காற்று நுழையும்,

சந்தேகம்
தேக
உயிர் கொல்லி,

சந்தேக நோயில்
குழந்தைகளும்
போகர்களே??

சந்தேகம்
இரு பக்க கூர்
வாள்,

ஜன்னல் பூக்கள்

ஜன்னல் பூக்கள

தெருமுனை 
திரும்புகையில்
ஜன்னல் திறக்கும்,

வீடூ கடக்கையில்
இரு
கண்கள் துடிக்கும்,
திரும்பும் செய்தி
யார் தருவர்
உன்னிடம்!!

பட்டுகண்ணம்
தோய்க்கும்
ஜன்னல்
கம்பியில் ஈரம்
காய்வதாலா?

சிட்டு குருவிகள்
இரண்டு
நம் கதை பேசும்
மொழிகள்
அறிந்ததாலா?

சமிஞ்ஞை ஏதும்
தந்ததில்லை
வரும் சமயம் ஏதும்
அறிந்ததில்லை,

பிறகெப்படி பூக்கிறாய்
ஜன்னலில்,
சமயோகிதி நீ..?

நிகழட்டும்...



யாருக்காவது என்னை பிடித்திருந்தால்
அவளிடம் சொல்லுங்கள்,

யாருக்காவது என் குரல் பிடித்திருந்தால்
அவளிடம் சொல்லுங்கள்,

யாருக்காவது என் முகம் பிடித்திருந்தால்
அவளிடம் சொல்லுங்கள்
,
யாருக்காவது என் கவிதை பிடித்திருந்தால்
அவளிடம் சொல்லுங்கள்
,
யாருக்காவது என் அன்பு பிடித்திருந்தால்
அவளிடம் சொல்லுங்கள்,

பொறாமை கொண்டு என் பக்கம்
ஒரு முறை திரும்பட்டும்
அவள்,

கெட்ட பின் ஞானம்.......




நீ...,
பிடிக்கவில்லை 
என்று
முன்னமே
சொல்லியிருந்தால்
காசும்,
காலமாவது
மிச்சம் இருந்திருக்கும்,

இரண்டையும் தொலைத்து
வாழ்க்கைக்கு
வெளியே தேடுகிறேன்
எதையோ?

ஆசையில்.......



கடைசிவரை கூட இருப்பேன்
என்றாய்!!!
எவன் கூட
என்று சொல்ல
மறந்துபோனாய்?

எல்லா.........


வார்த்தைக்கு வார்த்தை உம்,,
போடுவதுன்னியல்பு

சம்மதம் இல்லாத வார்த்தைக்கும்
கொட்டிவிட்டாய் ஒரு உம்,,

ஏமாற்றத்திற்க்கு உதா(ரணம்)
ஆனேன்?

கடைசிவரை



நமக்குள் உண்டான
நிகழ்வுகளுக்கு 
பெயரில்லை,

நீயோ?
நானோ?
இருக்கும்வரை
பெயர்வதுமில்லை?

தினம் ஒரு தந்திரம்



தேசபக்தி,
இன்றைக்கு
யார் வெள்ளையன்?

கதர் ஆடை,
கரை வேட்டி
தோளில் துண்டு.

தினமும் தொலையும் கனவு



கனவை தொலைத்து
தலையனையடியில்
தேடுகிறேன்,
காலை
கனவை
கிழித்துபோட்டது,

யார் கண்டாரோ
என் கனவை?
கண்ணாடி கடல்,
கையில் வானவில்,
மதுவிலாடும் வண்டு

கடைசி முத்த கரிப்பு,
எச்சில் தொடும் ஏகாந்தம்
இதழ்பிரியா காந்தம்
கட்டிபிடித்த தடம்,

களம் மீறிய நழுவல்
நழுவல் நகர்த்திய நகம்
நகம் காட்டிய கீறல்
கீறல் காட்டும் அடையாளம்
மூடி திறக்க முன் ஆணை
முடிந்த முந்தாணை,

முடிந்த காதை போர்வை
போர்வை மீறும் தனல்
தனல் தணிக்கும் தகிப்பு,
தோய்ந்துயரும் தூக்கம்
தூக்கத்தில் வந்த
கனவு,

கனைவை தொலைத்து
தலையனையடியில்
தேடுகிறேன்,
காலை
கனவை கிழித்துபோட்டது,