அ கதி,முகாமில்? முகமில்லை

பக்கம் பக்கமாய்
புரட்ட வேதனைகளில்
நெளிந்த நினைவுகள்
வாழ்க்கை புத்தகத்தில்

எச்சில் தொட்டு
திறுப்பும் ஒவ்வொரு
பக்கத்திலும் ஏது ஈரம்?
திருப்ப தடவிய எச்சில்
தவிர!

வரிசை இல்லாத
அத்தியாயங்கள்,
அநியாயத்தின் பிடியில்
இருந்த எம் மக்களுக்கேது
அந்த நியாயம்,

நீலக்கடல் தாண்டினோம்
கண்ணீரை கடலாய்
சீந்தினோம்,
தாண்டியது எம்மை
விட்டு வாழ்க்கை,

எல்லா அவயங்களும்
ஒன்று போலிருக்க
எமக்கன ஒரு பேர்
அகதி,
யாம் மரணமான
பின் எழுவோமா?

அவயங்கள் காப்பாற்ற
அன்றேறினோம் ஓடம்
அவை இங்கே காப்பாற்ற
படுமா,?
சீண்டலில் இழக்கிறோம்
எமக்கிது ஒரு பாடம்,

நாடு பெயர்ந்தால்
அகதி,
அகதி பெயர்ந்தால்
நாடு கிடைக்குமா?

Comments

Popular Posts