இந்நாளை சந்திக்க



கீழ் வரும் ஒரு நாள்,
ஆட்டம் முடியும்
துணைக்கு
தூணைபிடித்தெழும்பும்

வயதுன்னை வாட்டும்
பாய்ந்த
வாய்க்கால்,
வரப்புகள்,
பயமுறுத்தும்,

தட்டில் சோறு
கை கொட்டி விழும்,
மெல்லும் முன்
உனதிலை எனவாகும்,

ஊன்றுகோல்
ஒரு கால்
வேண்டா பேச்சு
வேண்டா பார்வை
தீண்டா தேகம்
வேண்டும் ,

தரையிருக்கிறோம்
என அறியா ஆணவம்

தரை கூனி நடக்க
புரியுமே அத்தினம்,

ஆடி ,ஓடி,தேடி
சேர்த்த காசு,பணம்
செங்கல்,சிமெண்டும்
இருப்புமாய்,
விரும்பினாலும்
திண்ண இயலுமா?

Comments

Popular Posts