காதல் பிசாசு

மரணமானதை மடியிட்டு
தாலாட்டி சீராட்டி
ஏது செய்ய?

கடந்த வழியை தோளில்
சுருட்டி போக
ஏன் கடக்க வேணும்?

வெள்ள ஓட்டத்தில்
காய்ந்த மணல்
காண்பதெப்படி?

மோதி சென்ற அலை
திரும்ப மோத
யுகம் ஆனாலும்
பயனேது?

ஓடிபோன பிள்ளை
ஒன்பது வருட காலத்தில்
அதே உடை தரித்திருக்கும்
என்ற ஆசை ஏன்?

காதல் சொட்ட சொட்ட
வழுக்கி விளையாடிய
வாழ்க்கை போயும்

சொட்டிப்போன காதல்
கேட்டு காத்திருப்பில்
கால விரயம்

தெரிந்தும்,
அதே நினைவில்
மனம்????

Comments

Popular Posts