காகித கப்பலின் நங்கூரம் இவர்கள்

மேதமை பூச்சு அவர்களுக்கு
ஊன்றியிருக்கும் செங்கோலில்
கரையானின் வீடு
வீழ்ந்திடும் நாள் இல்லை
நாள் பட நகர்த்த நினைக்கும்
ஆளுமை எனும் அகங்காரம்,

ஆற்றலில் தோற்றாலும்
மலுப்பலில் வெள்ளாமை
பாலையில் ஏர்கட்டி
முப்போகத்திற்க்கு உத்திரவாதம்
வாதப்பேச்சு,

சவடால் அடிவருடிகளின்
அறியாமையில் பயிற்சி,
மேலிருப்பை எப்போதும் அறியாமை,
கீழ் தள்ளப்படுவதில்லாமை
எனும் கீழ் எண்ணம்,

காகித கப்பலில் நங்கூரம்,
நம நமோவென பாடல்
வேணும் இவர்களுக்கு
நமச்சல்,

முன்னம் இருந்தவன் சொல்,
இல்லையானால் பின்னம் வரும்
சொல், இவர்களுக்கேது சொல்,
பசிக்கு வானம் குடிப்பதாயும்
தாகத்திற்க்கு மேகம் தருவதாயும்
கூக்குரல்,

ஆடை விளக்கி மலம் கழிக்கும்
நீ..நான் வேறு எவ்வாறு?
இவர்களுக்குள்ளும் இயலாமை
இருந்தும் சொல்ல இயலாமை,
அதிகாரத்தில் ஆட்படுவதால்?

இவர்கள் இடம் நிரப்ப படுவதில்லையாம்
ஆம் ,இவர்கள் இடம் நிறம்ப பெருவதில்லைதான்,
முழுதாய் இருந்தாலொழிய,
வான் பறக்கும் அதிசயம்
கீழிருந்து புறப்பாடு மறந்த!!!

Comments

Popular Posts