காணாமல்

விழி அயராது 
விடிந்ததும் ஆரம்பமாகும்,
அத்துனை 
காரியங்களுக்கிடையிலும்
தேடுதல்,

காற்றில் ஆடிடும்
கதவிலும் மரப்பிலும்
ஒட்டிகொள்ளும்
பார்வை எப்போதும்

காக்கை கரைந்திடும்
வேளையிலும்
கண்ணாலன் வரவிற்கென்றே
ஏக்கம் கொள்ளும்
எண்ணம்,

தோய்த்திடும் பாத்திரபண்டத்தின்
பளிச்சொளியில்
தன் முகம் மறந்து
அவன் உரு தேடும்
தேய்ந்து போய்,

வீட்டை பெருக்கும்போது
மனக்கூட்டில் சேர்ந்திருக்கும்
குப்பை வீசப்படாமல்
குன்றாய் குவிந்திருக்கும்
கொட்ட வேண்டி,

தோசம் ஏதும் இல்லை,
இருந்தும்
தூரத்தேசமும்
ஒரு தோசம்தான்
பிரித்து வைத்த காரணத்தால்,

வரவின்றி செலவாகும்
வயது,
வர வைத்து
சமனாக்க கூட்டவில்லை
மனதில்
ஈவும் இன்றே.,

என்னை விட்டு
எதை தேடி சென்றாய்,
எனை விட்டு போக
மனம் கெட்டு
இங்கே.

Comments

Popular Posts