முகநூல் முகமன்

முகநூலின் நட்புகள் சில
அசரீரியாய்
உசுப்பும் வாக்கியங்களில்,

முகநூலின் நட்புகள் சில
தோளில் கைப்போட்டு
சுட்டிகாண்பிக்கும் தவற்றை,

முகநூலின் நட்புகள் சில
கை பிடித்து கடற்கரை
உலாத்தலாய் தடம் பதிக்கும்
மனதில்,

முகநூலின் நட்புகள் சில
முன்னும் நகராமல்
பின்னும் போகமல் காலில்
பின்னும் வளர்ப்பு
பூனைபோல்,

முகநூலின் நட்புகள் சில
மேலே ஏறும்போதெல்லாம்
கால் பிடித்திழுக்கும்
கூடை நண்டாய்,

முகநூலின் நட்புகள் சில
முகத்தில் புன்னகை
முதிகில் ஈட்டி பாய்ச்சும்
அரக்கனாய்,

முகநூலின் நட்புகள் சில
மனதை இலேசாக்கி
அம்மா மசித்து தரும்
உணாவாய் மயங்க செய்யும்
இலவம் பஞ்சாய்

முகநூலின் நட்புகள் சில
சிலரை சிகரமாய்
சிலாகிக்கும் சிலரை
சில்லரைக்காய் சிலாகிக்கும்
சிலரை சீக்கிரமே
ச்ச்சி எனும்

முகநூலின் நட்புகள் சில
அண்டை வீட்டு உறவாய்
அண்ணன் தம்பி பாசமாய்
அக்காள் தங்கை நேசமாய்

உறவாய் உறவாடும்
உள்ளம் தினம் ஆடும்
உறசாகம் கரைபுரண்டோடும்
உன்னதம் உரைக்கும்
உரைக்கல்லாய்

Comments

Popular Posts