தெரிந்தால் என் செய்வது

எவ்வளவு காலம்தான்
ஏமாற்றுவது,

அடுப்பில் சாதம் 
இருப்பதாய்
வேகட்டும் பொறு, பொறு
என்று?

கேட்டு, கேட்டு அசதியில்
தூங்கிப்போகும் என்
செல்லக்குழந்தைகள்
அறியாது,

வெறும் பானையைத்தான்
அடுப்பில்
வைத்திருக்கிறேன்
என்ற உண்மையை,

ஒவ்வோர் இரவும்
எங்கள்
உணவு காத்தலும்
பொறுத்தலுமாய்,?

Comments

Popular Posts