மேடை நாணும்

ஒத்திகையில்லாத காட்சிகள்
அரங்கேர விழிபிதுங்கி 
வசனம் மறந்த நடிகனாய்\
விக்கித்தி போகிறேன்,

அட்டை கத்தி காட்டி
மிரட்டுவாய் என கதை இருக்க
குறுவாளில் குத்திட்டாய்
துளியாய்
இரத்தக்கசிவு,
நிஜ நடிப்பென
கைத்தட்டும் சுற்றம்

நிஜமாய் நடிக்க மேடையில்
திரை ஏன் தொங்க விட்டாய்
எதை மறைக்க ,
நாடக காட்சி மாற்றம் வரும்
நீ நாடகத்தை மாற்றுகிறாய்,

யார் நடிப்பாய் நீ நடிக்கிறாய்
என் காட்சியில் நீ இருந்தால்
நான் எதற்க்கு,
மூக்கில் பந்தொன்று வை
பபூனாய் நானாவது
சிரித்து கொள்கிறேன்.

பல வண்ண விளக்கொளியில்
உன் முகம் மாறாது விளக்கு
வேணுமானால் மாறலாம்
விதியில் உச்சகட்டம் மரணம்
மரணத்தின் உச்சம்,
நீ மாறி கொண்டே இருப்பது,

பார்வையாளானாய் வந்த நீ
என்னை இயக்குகிறாய்
பாவம் எதிர் வரிசையில்
எப்போதும் நான்
காலியான இருக்கை போல்,

No comments:

Post a Comment