மேடை அவர்களுடையது
--------====--------=======

அவர்களுக்கு எப்படித் தெரியும்?
இரவா? பகலா ?
எனத்தெரியா,
கட்டிடம் அவர்களுடையது,
சல்லடை பொத்தலாய் மழை
கொட்டும் என் குடிசை பற்றி?

அவர்களுக்கு எப்படித் தெரியும்?
ஜன்னலுக்கும், நாற்காலிக்கும்
ஆடை அலங்கரிக்கும்அவர்கள்,
இருக்கும்
ஒத்த ஆடையிலும் பல
பொத்தல் உண்டென்று,

அவர்களுக்கு எப்படித் தெரியும்?
பீட்ஜாவும், பர்கரும்
உணவுக்கு பின் தீனியாய்
நேரம் போக்கும் அவர்கள்,
உணவேதும் இல்லாது
இலை நக்கும் எம்மை
பற்றி,

அவர்களுக்கு எப்படித் தெரியும்?
கான்வெண்டிலும்,காரிலும்
கல்விபயிலும்,அவர்கள்,
கார்பரேஷன் பள்ளியில் சேர
கால்சட்டைக்கூட இல்லை
என்று

அவர்களுக்கு எப்படித் தெரியும்?
கடவுள் அருகில் சென்று
வணங்கும் , அவர்கள்
எம்மையும் கடவுள் படைத்தான்
என்று

அவர்களுக்கு எப்பதான் தெரியும்?
நாங்களும் மனிதம் என்று,

No comments:

Post a Comment