வெட்டி விட்டதால் இனி
படர்வதை நிறுத்துவேன்
என என்னாதே

நீ வெட்டியது மேலும்
வளர்வர்தற்க்கே

வெளிக்காட்டி
வேஷம் போடும் மனித
இனமாய் என்னாதே

வேரில் இருக்கே எனதுயிர்
அதை தொடாதே

அதில் என்னோடு என் மண்ணும்
கலந்திருக்கு 

உன் ஆசைக்குதான் அழகுகாட்டி
படற்ந்துள்ளேன் 
பறித்துக்கொள்

என்னை என் மண்ணோடு விடு
நான் வேர், இனம்
நீ 
வேரிலா இனம்

காலம் கூடக்கூட வலிமையாவேன்
நீ
காலம் கூடினால் தளர்வாய்
முதுகொடிய வளைவாய்

வேர் ஊண்டி வெளியாவேன்
காலுண்டிய
நீ 
என் மண்ணுள்
வருவாய்


நீ
புழு,திண்று உருகுலைவாய்
நான்
புழுவையும் திண்று 
உரம் பெறுவேன் 

நான் காடாவேன்
நீ வெரும் கூடாவாய்?

Comments

Popular Posts