ப(ய)ணம்


இரயில் தாமதம் நள்ளிரவில் தனியாக
இறங்குகிறேன் இனி இரண்டு மைல் நடக்கவேண்டும்
யாரவது கண்ணுக்கு தென்
அதோ கொடிக்காட்டியவர் நடையில் தூரிதம்
ஏன் தம்பி எனக்கேட்க அப்பாட துணைக்கி
அவர் குவாட்ரஸ் நுழைந்துவிட்டார்
எவண்டா இவ்வளவு கிட்டே இரயில்வே
குடியிருப்பு கட்டியது இந்த ஒற்றையடிபாதைத்தான்
வீட்டிர்க்கு அருகில் இட்டுச்செல்லும்
நடக்கிறேன் பாதை பின் செல்ல
மறுக்கிறது முங்கில் தோப்பு உராய்ப்பு
பயம் தொற்றிக்கொள்கிறது
காற்றுக்கூட ஏதோ பேசுகிறது
ஊளை சத்தம் ஏது பகலில் எங்கே போனது
இந்த நரிகள் ? டேய் பேய் இருந்தால் பூவாசம் வரும்
ச்சே இந்த சமயத்தில்தான் நண்பன் சொன்னது
நினைவுக்கு வருமா? ஆமா பூ வாசம்
ஐயோ இந்த பேய்களுக்கு யார் பூ கட்டிதருவார்கள்
இந்நேரத்தில் இது அதுகளின் காதில்
விழுந்திடுமோ ?ப்பபயம்
இடையில் இந்த இடுகாடு கடக்கவேண்டும்
நாம யாருக்கு என்ன செய்தோம்
கோடிவீட்டு கிழவி எப்படா சாவும்
எனக்கேட்டதும் இப்ப ஞாபகம் வருது
செத்த கிழவி என் நண்பனின் பாட்டி
நாமதான் நண்பனை திட்டியதே இல்லையே
கிழவி என் சொந்த பாட்டி மாதிரி
அது ஒரு உருவம் அடி எடுக்க மறுக்கிறது
கடந்தாக வேண்டும் ஆகாயம் நோக்கியே பார்வை
கிட்டே வந்தாகிவிட்டது அடச்சே
எல்லைக்கல் பகலில் இதை நாம பார்த்தில்லையே?
முடிவெடுக்கிறது மனம் இனி
பகல் நேரத்தில் எல்லாவற்றையும் பார்த்திடனும்
உனக்குத்தெரியுமா மிருகங்களுக்கு
பேய் பிசாசெல்லாம் கண்ணுக்கு தெரியுமாம்
என்ன எழவுடா இது எழவு இதும் பயம்தானா
ஒரு நாய் ஒர் இடத்தையே உற்றுப்பார்த்து
அமர்ந்திருக்கிறது ஆஹா ஏன் அதைப்பார்த்தோம்
ஓடலாமா துரத்துமே மாரியம்மன் கோவில்
மங்கிய வெளிச்சம் மாரியம்மனை பகலிலேயே பார்க்க பயம்
இவனுவ ஏன் மரக்கதவு போட்டு பூட்டலை
கிரில் கதவு ஒரு எண்ணைவிளக்கு மாரியம்மன் எதிரே
இன்னும் விகாரமா தெரியும் ?கடகடக்கவேண்டும்
நாமா மாரியம்மனை கும்பிடலயே தவிர
ஒருநாளும் திட்டியதில்லை இது மாரியம்மன்குத்தெரியும்
திடுதிப்பென்று ஒரு வீடு கொல்லையில் சத்தம்
மாடு மிரளுகிறது மிருகங்களுக்குத்தான்........
இதுவேற ,நாம கவுன்சிலரா வந்து இந்த
இடங்களுக்கெல்லாம் முத்லில் விளக்குப்போடணும்
தெரு முக்கு வந்தாகிவிட்டது
பால்கார முருகையன் இதோ ஏன் தம்பி
இன்னேரத்தில் ?ஒண்ணுமில்லண்ண
இரவுல நம்ம ஊரு எப்படி இருக்குன்னு
பார்க்கத்தான் லேட்டா வரேன்?
வீடு வந்தாச்சு கதவுதட்ட அம்மா திறக்க
ஏண்டா இந்நேரத்தில்
எனக்கென்னம்மா பயம் நான் ஆம்பிளைல?
செருப்புடன் எல்லாவற்றையும் கலட்டிவிட்டு
உள் சென்றேன்?

Comments

Popular Posts