வருதமில்லை எனக்கு
வா என அழைக்காமல்
இருப்பதால்

வருத்தமில்லை எனக்கு
வந்திருந்த என்னை
கண்டும் காணா
இருப்பதால்

வருத்தமில்லை எனக்கு
உனக்குப் பதிலாய்
உன் சோதரி தேநீர்
கொடுத்ததால்

வருத்தமில்லை எனக்கு
விடை பெருமுன் கண்கள்
தேடியதுன்னை]

வாசல் வரை வந்து
வழியனுப்பி
கண்ணத்தில் செல்லமாய்
கிள்ளிய நாட்கள்
போதும் எனக்கு

நான் அந்த நாட்களிலேயே
இருக்கிறேன்
நீ இந்த நாளை
கொடுக்கிறாய்

வருத்தமில்லை எனக்கு?

No comments:

Post a Comment