கூட்டாஞ்சோறு
================
கொஞ்சம் இலையை கிள்ளிபோட்டாள்
மண்ணை கொஞ்சம் தூவினாள்
சுவற்றின் சாயத்தை சுரண்டி
சுள்ளிகலையும் சேர்த்து
நெருப்பில்லாத அடுப்பில்
ஏற்றி நெடுநேரம் கிண்டி
நெய்க்கு பதிலாய் நீரை வார்த்து
வந்திருக்கும் விருந்தாளி நண்பர்களுக்கு
தரையை இலையாக்கி
சாப்பிடலாம் வாங்க என அழைத்து
சூடில்லாத பானையை
துணிபிடித்து இறக்கி
கொஞ்சம் உப்பு பாரேன் என்று
தோழியின் வாயருகே சமிஞை
காண்பித்து பரிமார
சுவைக்கூட்டி விருந்தாளிகள்
உண்ண இனிதே நடந்தேரியது
என் நாற்காலியின் நாற்கால்களின்
இடையே கவனித்த எனக்கும்
ஒரு கவளம் உணவு தரப்பட்டது
சைகையாய் உண்டேன் உண்மை
குழந்தையாக ஏங்கியது ?

No comments:

Post a Comment