வலிதாங்கியே
எனக்கு
அடியின்
பயம் அற்று
போச்சு
என்ன புண்ணில் தானே
தீ சுடுவாய்,
இல்லை
புதிய புண் தருவாய்?
மீதம் இருக்கும்
பாகம் தீரும்வரை
புண்களால்
நிரப்பு ,
காயும்வரை
காத்திருக்காதே
தீயால் சுடு
வலிப்பதாய் நீ
உணர்ந்தால்
கண்களை மூடிக்கொண்டு
எரித்து விடு
தீர்ந்ததா
உன் கோபம்
பாக்கி ஏதும் இடம்
தேடுகிறாயா?
இதோ கண்கள்
குத்திகிழி
வலியில்லை
வலியில்லை
இதயம்
காயப்படாமல்
அப்படியே
இருக்கு?
நீ
என்ன எவனாலும்
அதில் தங்கியிருந்த
ஞாபத்தை
காயப்படுத்த
முடியுமா
என்ன?
மாண்ட பின்
மண்ணோடு
மக்கிபோகுமேயொழிய
நீ தீ ண்ட முடியாது?
No comments:
Post a Comment