ஏர் உழ ஏங்கி எனை பார்க்கும்
ஆசைமச்சான்
கூருகெட்டு போகுதடா குத்தும்
உன் பார்வை
அதட்டி ஓட்டுறப்போ அந்த
மாடும் மிரளுதடா
என்னை நீ அனைச்சி ஒட்டுரதெப்போ
நெஞ்சி நெனக்குதடா
பாவாடை வயசிலேந்தே பார்த்து
பார்த்து வச்சேன்
ஆசை மச்சான்
கெட்டு போகாது கட்டி காத்த
உன் நெனப்ப
கஞ்சியில தான் கலந்து
ஊத்தி கொஞ்சம்
நா தாரேன்
பிஞ்சு ஒன்னு பிறக்கும் வரை
பிரியாது நீ
இருடா/
நிலத்த நீ பிளக்க ஏரிட்டாய்
வஞ்சி நான் பிழைக்க
ஏறிட்டு பாரேண்டா?
தூக்கம் கெட்டு போச்சுதடா
துணைக்கு உன்ன
தேடுறண்டா?
வெட்கம் விட்டு போச்சுதடா
வெட்டி பேச்சி ஏதுக்கடா?
வெரசா என்ன கட்டிக்கடா
வெவரம் எல்லா
சொல்லித்தாரேன்?
No comments:
Post a Comment