ஒர் ஒரமாகவே நின்று
உனக்கு நடந்த
சடங்குகளை
கவனித்தேன்
உன் கண் ஈரமாகவே
இருந்தது
இதயம் கல்லாய்
கணத்ததாலா?
ஏறிட்டும் பார்க்கவில்லை
என்னை,
அறிந்தேன் உன் அங்க
மொழிகளை,
தோழிகளில் ஒருத்தி
கவணித்ததை
உன்
கவண மாக்கினால்
விழியசைவில்லை
விட்டேத்தி பார்வை
உன் அழைப்புக்கு
நான் வந்துவிட்டேன்
வாழ்த்த மனம் இல்லை
அழவும் துணிவில்லை
அறிமுகம்
எவ்வாறு செய்வாய்
என்னை
நான் உன் ஒரமாகவே
நிற்க்கிறேன் எப்போதும்?
Comments
Post a Comment