இவன் உணவுத்தேட வெளிச்சம் போடும்
வானம்
இவன் விதைக்க படுத்திருக்கும்
பூமி
இவன் தாகத்திற்க்கு கொட்டும்
மழை
இவன் சல்லாபத்திற்க்கு மூடியாய்
இரவு
இவன் நாச்சுவைக்கு உப்பாகும்
கடல்
இவன் வாழ்ந்திருக்க மூச்சாய்
காற்று
இவன் வெந்ததை விழுங்க தீண்டா
தீ
Comments
Post a Comment