கால புத்தகத்தில்
உன்
பக்கம்
மறக்காதிருக்க
அடையாளமாய்
விளிம்பில்
மடித்தேன்
சில வேளை அப்பக்கமே
முதலில் அழகாய்
திறக்கும்
தவிர்த்து தாவிச்செல்வேன்
அடுத்தப்பக்கம்
ஏனோ மடித்த
விளிம்பின் முனையை
ஞாபக விரல்கள்
நிமிண்டிய படியே?
மடித்த பக்கம்
தடித்த தழும்பென
வருடும் வாஞ்சையுடன்
எப்போதும்
ஒருவேளை மடிக்காது
மயில் இறகால்
அடையாளமிட்டிருக்கலாமோ?
எனத்தோன்றும்
மடித்த பகுதி
தற்போது உடையும்
நிலையில்?.......
No comments:
Post a Comment