இரண்டாம் முறையும்
போதும்? போதும்?.. விட்டு விடு
எதையும் அடையும் வரை
மட்டும் நேர்மையாளனாய்
காட்டிக்கொள்ளும்,
உன்னானின இயல்பு,
காம சங்கமித்திலின்
ஊடலின் சங்கதி அல்ல இது
விழித்து கொண்டேன் இனி
என்னின ஏமாற்றத்தின்
பிறப்போ என என்னிவிடாதே?
கண்ணே, மணியே, கற்கண்டே,
முத்தே, பவளமே, என்பதல்லாம்
உன் காதலுக்கு நீ செய்யும்
மூலதனம்,
சொற்களில் தேன் தோய்த்து
பின் தேகம் தேய்க்கும்
உன் நோய் வார்த்தைக்கு
இனி வசப்பட மாட்டேன்
நீ ஆட்டும் மகுடியில்
ஆடியதாய் நினையாதே
நான் கண்மூடிக்கொண்டேன்
காதிற்க்கு உன் ஆட்டம்
தெரியாது?
எனக்கு தெரியும் விழித்து
கொண்டால் நீ காலில் விழ
தயங்கமாட்டாய்
என்று
உன் மூலதனம் வீணாகாது
கொள்ளை லாபம் கொள்ள
துடிப்பாய்
உன்னின இயல்பை
அரிவேன்
விட்டு விடு என்னை
விசம் கொட்டிவிட
வாங்கவில்லை
குடித்து சாகிறேன்
என் செய்வது
கற்புடன் அல்லோ படைத்துவிட்டான்?
No comments:
Post a Comment