தாதிமா போயிடுச்சுடா..
நம்மையெல்லாம் விட்டுட்டு
இளம்பிராய முதல்
துக்க செய்தி.,

பரபரக்க இழுத்துச்செல்லப்பட
அழுகை தொடர்ந்துதது
வீடு பூட்ட ஒருமுறைக்கு இருமுறை
இழுத்து பார்த்தது
கேவல் நிற்கவில்லை

சாவு வீடு எப்படி இருக்கும் ஒரு கேள்வி?
வீடு நெருங்கும் வரை!

தெரிந்த சொந்தங்கள்
பார்த்தவுடன் ஓ வென அழுகை
கூக்குரல் புலம்பல் ஒன்றும்
விளங்வில்லை 
உண்ணிப்பாக கேட்கும் வரை.,

மார்பில் அடித்து கொண்டு
தாதி போய்ட்டியா நீ இருந்த
நான் இருந்தேன் நீ இல்லை
இனி நான் எதற்க்கு உயிரோடு
துணியால் தன் கழுத்தை 
நெருக்க அனைவரும்
தடுக்க?

எனக்கும் இப்பதான்
தாதிமாவின் செல்வாக்கென்ன
என தெரிய அழுகை பீரிட்டது?

என்னையும் குளியில் போட்டு
புதைங்களேன் என ரத்த
பந்தம் ஒன்று துடித்தது,

எனக்கு தாதிமாவின் மேல்
மரியாதைகூடியது,
தாதிமாவின்,துணிகளையும்
தாதிமாவின் பொடி டப்பாவையும்,
எடுத்து மறைத்துகொண்ட்டேன்,

புதைக்க எடுத்துச்செல்ல ஒரு
போராட்டமே நடந்தது.,
நான் சிறுவனாம்?
விட்டு போய்விட்டார்கள்
புதைத்தும் வந்துவிட்டார்கள்

வீட்டில் ஒரே அமைதி புலம்பல்
சின்ன சின்ன அனுபவ நினைவு
பரிமாற்றங்கள் ?அது நடந்தது
இப்போதுதான்,

தாதிமாவின் மேல் துணியையும்
பொடிடப்பாவையும் எல்லாரும் பார்க்கும்
விதமாக எடுத்து இதோ நம்ம தாதிமாவின்
பொருள்கள் என சொல்லி முடிக்குமுன்னே

அம்புட்டு பேரும் ஒரே சமயத்தில்
அடப்பாவி பிணத்தோட பொருளை
ஏண்டா எடுத்த தூர வீசு, தூர வீசு
வீசு வீசு என அடித்தார்கள்?

அன்று வீசினேன்
இவர்கள் அழுகையையும்
நடிப்பையும் சேர்த்தே வீசினேன்?

நான் செத்தால் அழாதீர்கள்
தெரியும் உங்கள் அழுகை?

No comments:

Post a Comment