சூறை காற்றிலும் 

பேய் மழையிலும் 

தன்வீட்டின் கூரை வானம் காட்ட

மீதம் ஒட்டிக்கொண்டிருந்த

கீற்றீன் ஒரம் ஒண்டிக்கொண்டிருந்தாள்

விடியும் என்று..?

விளக்கொளியாய் வீசிய மின்னலிலும்

அலைய விட்டாள் வீடு முழுதும்

தன் பார்வையை 

தான் ஏழைதான் என்று அரசாங்கம்

கொடுத்த பத்திரம் காணாமல்,

தானே புயலில் காணாய் போனதோ?

இனி எப்படி தான் ஏழை என

நிருபிப்பாள்??

No comments:

Post a Comment