சொற்கள்



வானவில்
ஏழு வண்ணம்
மின்னும்
ஒன்றில் நிலைத்திருக்க
ஒன்று ஊடுரும்
கண்ணில்

சொற்களோ
வண்ணமாய்
மின்னும்
எண்ணக்கோலமிடும்
எண்ண எண்ண
ஜாலமிடும்

மனதை வளைக்கும்
வார்த்தைகள்
பட்டு நூல் இல்லை
பட்டாய்
தைக்கும்
மனதை

எதற்க்கும்
அடியாது
வார்த்தைக்கு
அடியும்
அம்மா என்பது
முதல் வார்த்தை

அதில் பெற்றதே
பல வார்த்தை

Comments

Popular Posts