சங்கிலிகளில் பிணைக்கவில்லை ஆனால்
அடிமைகள் நாங்கள்,
சாட்டைகள் சொடுக்கப்படுவதில்லை ஆனால்
முதுகில் காயங்கள்,
பாதைகள் அடைக்கப்படவில்லை ஆனால்
தப்பிக்க மறக்கிறோம்,
காவலாய் கண்காணிக்க யாருமில்லை ஆனால்
பயத்தில் பதுங்கிகொள்கிறோம்,
ஆயுதம் என சொல்லக்கேட்டோம் ஆனால்
ஆயுள் வேண்டுமென தூர எரிகிறோம்,
விடுதலை என்பது எம் அகராதியில் இல்லை ஆனால்
மரணம் மட்டுமே விடுதலை என நினைக்கிறோம்,
கூடுவிட்டு
--------------
பேச்சின் ஊடே நெகத்தால்
தூணை சுரண்டியபடி
ஒரு பார்வை வீசும்போது
தூண் தன்னை அழைத்ததாய் எண்ணி
உரு பெற்று விடுமோ
என பயம் எழும்
கல்லாய் இருந்த நானே
உருப்படியாய்
ஆனதுபோல்?
No comments:
Post a Comment