அது அப்படித்தான் வெட்டுண்ட
பல்லி வாலாய்
துடிக்கும்
சேர முடியாமல்,
அது அப்படித்தான் காயத்தழும்பாய்
காணும்போழ்தெல்லாம்
ஞாபகமூட்டும்
ரணமாய்,
அது அப்படித்தான் இருப்பது
தெரிந்தும் பார்க்க
முடியாத
சூரியனாய்,
அது அப்படித்தான்
அவள் பேர் கேட்க பொங்கும்
தூரத்தெரியும்
கானலாய்,
அது அப்படித்தான் உள்ளிருப்பதாய்
வெளிகாட்டிக்கொள்ளும்
வெளி கொட்டிய காலி
குடமாய்,
No comments:
Post a Comment