இறந்து போனேன் சொர்க்கம்?
உத்தரவிடப்பட்டது
அழைத்து போக
அமரற்கள் வெள்ளுடையில்

நுழைவாயில் அழகிய
உபசரணையுடன்
உள் போக எங்கும்
வெண்மை பொங்கியது,

நீள் விழி கன்னியர்கள்
நிலைக்கொருத்தராய் 
சோபனம் இசைக்க
ஏதோ ஒரு ஆசானத்தில்

தாகமாக நினைக்க
பழரசங்கள் பல
கோப்பைகளில்
கன்னியர்கள் ஏந்தியே
காத்திருந்தனர்

கண் அயர நினைக்க
சாமரம் தானக ஆடியபடி
தூங்க எப்படி கனவு வேண்டுமென
மெனுகார்டு தரப்பட்டது
இன்று கனவே வேண்டாமென
டிக்

தினமும் இதே நிலைதானா?
ஆம் என அசரிரி ?

ஒரு கோபம் இல்லை,
கொசுக்கடி இல்லை,
நாடகம் பாட்டு, கூத்து,
கும்மாளம் ம்ஹீம் 
எல்லாம் அமைதியாக

சுத்தமாகவும் வரிசை, அழகாக
இடிபாடுன்றி,வசையின்றி
எல்லாரும் புன்னகையுடனும்
சுத்தமாக துடைக்கப்பட்ட 
பளிங்கு போல் வெண்மை

செம போர்? கடந்து சென்ற]
நீள் விழியாளிடம்
நரகத்திறக்கான பாதை
எது என்றேன்?

ரொம்ப சிம்பிள்>
என்னை கெடுக்க முயற்ச்சி செய்
அடுத்த நொடி நரகம்தான்
அப்படி சொல்லடி என் ராசாத்தி

ஈவ் டிசிங் நரகம் ட்ரான்ஸ்பர்
எப்பா தப்பிச்சண்டா 
சொர்க்கத்திலிருந்து?
Like ·  · Unfollow post · 29 November at 02:12

No comments:

Post a Comment