இது ஏன் என்றே புரியவில்லை
இப்படி ஆகி போனார்கள்,
யாரோ எடுத்த வாந்தியில்
சோற்று பருக்கைகளை தேடும்
இவர்கள்

குயில் பாட வல்லூரை வாயசைக்க
வைத்து குயிலுக்கு கோபமூட்டும்
இவர்கள்

எண்ணம் எழுத்தாக்கும் போது
என்னனென்னத்தையோ எழுதென்கிறார்கள்
இவர்கள்

சுயம் இழப்பது இழுக்கென்றால்
சுயம் இழப்பதையே தன் சுயமாக்கி கொண்ட
இவர்க்ள்

உயர்ந்த நிலை அடைந்து விட்டதாக எண்ணம்
கொண்டு தான் சொல்லில் தவறே நிகழாதென
தம்பட்டம் அடிக்கும் 
இவர்கள்

எல்லாம் கலக்கும் சாக்கடையை 
நவீன காக்டையில் இதான் எனும் மாயை
வீழ்ந்ததல்லாமல் தள்ளிவிட துடிக்கும்
இவர்கள்

தன்கீழ் மட்டுமே பதவிகொடுக்கும் 
தன்னை மட்டுமே பணிந்து நடக்கும்
ஒரு கூட்டத்தை வைக்க நினைக்கும்
இவர்கள்

எல்லார் போலவும் மலத்தையும்,ஜலத்தையும்
சுமந்து திரிகிறோம் என்னும்
உண்மைக்கூடத் தெரியாத 
இவர்கள்

இலக்கியத்தின் உண்மை வாழ்வின் 
வேர் அல்ல வாழ்வின் வேரே வேறு
எனும் பொய்மையில் ஊரி 
அவுடதம் ,அஞ்ஞானம்
என அவிழ்த்துக்கட்டும் வேட்டியாய்
கட்டும் கதை கவிழச்செய்கிறது 
தலையை?

கொண்டானிலால் கூகூ என கூவவும்
தூற்றினால் துத்தெறி என தூற்றவும்
குழுச்சேர்க்கும் இவர்களை
நினைத்தால்?

மெல்ல அழத்தான் தோன்றுகிறது.

Comments

Popular Posts