சமன்


எதை சமன் செய்ய
மரணம்?
எதை சமன் செய்ய
பிறப்பு?

மேட்டை கழித்தால்
பள்ளம் சமனாகுமா

பிறப்பு மேடா
இறப்பை
பள்ளத்தில்
இடுவதால்
சமனாகுமா?

இழப்பை சமனாக்க
ஏது வழி
மரணம் தான்
பிழைத்தெழுமா?

சமனில் தீர்வாகாதெனில்
சமாதானம்
தீர்வாகுமோ
இங்கு

Comments

Popular Posts