கொள்ளு வாங்கனும்
கொஞ்சம் நெல்லும் வாங்கணும்
குத்தி திங்க உரலு வாங்கணும்
கொட்டி வைக்க குதுரு வாங்கணும்
எலி சுறண்டாதிருக்க
பொறியும் வாங்கணும்

பொறியில் வைக்க தேங்கா
வாங்கணும்
பொறியை வைக்க வீடு வாங்கணும்
வீடு கட்ட இடத்த வாங்கணும்

பிடரியில் அடிப்பட துண்டுதரி
எழுந்து அமர்ந்தான் அம்மாச்சி
தூக்கத்தில் எல்லாம் போச்சி
தூக்கத்தில் சொர்க்கமென்று ஆயாச்சி

தருசா போச்சு நெல்மெலாம்
வெருப்பா போச்சு வாழ்வெலாம்
இனி மருந்து வாங்கணும்
சாக ஒரு மருந்து வாங்கணும்

விவசாயம் சாயம் போச்சு
வெவரம் வருமா இந்த
ஆட்சிக்கு?

No comments:

Post a Comment